குரு பெயர்ச்சி பலன் 2024: கொட்டிக்கொடுக்கப்போகும் குரு பகவான்.. சித்திரை முதல் தேடி வரும் யோகம்!
சென்னை: 2024ஆம் ஆண்டு இன்னும் சில வாரங்களில் பிறக்கப்போகிறது. மேஷ ராசியில் உள்ள குரு பகவான் 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் ரிஷப ராசிக்கு செல்லப்போகிறார். சித்திரை மாதம் முதல் கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குரு பகவான் எந்த மாதிரியான மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
கும்பம்: உங்களுடைய ராசிக்கு முன்றாம் பாவத்தில் மறைந்து இருக்கும் குருபகவான் 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் நான்காம் வீட்டிற்கு வரப்போகிறார். "தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனது" என்பது பாடல். உங்களுடைய ராசிக்கு 4 ஆம் வீட்டிற்கு வரும் குருபகவான் 8, 10, 12, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் 8 ஆம் பாவம் அபகீர்த்தி ஸ்தானம் என்று பெயர். அந்த ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உங்களை அவதூறு செய்தவர்கள், உங்களை வைத்து பணமோசடி செய்தவர்கள் எல்லாம் தங்களை நாடி வரும் காலம்.

நண்பர்களின் ஆதரவு அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். மனைவி வகையில் சிறுசிறு வைத்திய செலவுகள் வரலாம். குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டை பார்ப்பதால் இது வரை நலிவுற்ற தொழில் வளர்ச்சி அடையும். தொழில் வியாபாரத்தில் இதுவரை முடங்கிய லாபம் எல்லாம் வளர்ச்சியடையும். உத்யோக உயர்வு கிடைக்கும். பதவியில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைக்கலாம். மாற்றம் முன்னேற்றத்தை தரும்.
உங்களுடைய ராசிக்கு 12 ஆம் பாவத்தை குரு பகவான் பார்ப்பதால் இதுவரை தூக்கம் இல்லாமல் நிம்மதியை இழந்து தவித்தவர்கள் நிம்மதியாக தூங்கலாம். உங்களுடைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பயணங்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். இதுவரை தடைப்பட்ட சுபகாரியம் எல்லாம் இனிதே நடக்கும். வண்டி வாகன விரைய செலவுகள் வரும். சொந்த வீடு வாங்கலாம். வேலை காரணமாக சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
மீனம்: உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமர்ந்த ராசிநாதன் குரு பகவான் மே மாதம் முதல் முன்றாம் வீடான தைரியம் சகோதரம் வீரம் எழுத்தறிவு விளையாட்டு துறை என்று சொல்லப்படும் பாவகத்துக்கு மாறுகிறார். ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான். குரு பகவான் மூன்றாம் வீட்டில் மறைந்தாலும் குரு பகவானின் பார்வை படும் 7, 9, 11, பாவங்களால் யோகத்தை அனுபவிக்க போகிறீர்கள். திருமணம் தாமதமாகி நிற்பவர்களுக்கு இனிதே திருமணம் நடக்கும்.
சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். வேலை விசயத்தில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் பாக்கிய ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கப் போவதால் ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். ஆலய தரிசனம் மன அமைதியை கொடுக்கும். நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். புது முயற்சிகள் கைகூடும்.
லாப ஸ்தானத்தை ராசி அதிபதி குரு பார்க்கப் போவதால் பொருளாதார நிலை திருப்தி தரும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. தனவரவு ஆதாயம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி மாற்றம் முன்னேற்தை தரும். நோய் நொடி தொந்தரவுகள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி பொங்கும். புனித யாத்திரை செல்விர்கள். வியாழக்கிழமை குருபகவானை தரிசிப்பது நல்லது. பௌர்ணமி விரதம் இருப்பதும் நன்று. கொல்லூர் மூகாம்பிகையை தரிசிப்பது நல்லது.!!


Click it and Unblock the Notifications
