குரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன பலன் - பரிகாரம்
ஒருவனின் பிறந்த ஜாதகத்தில் கிரகங்களின் பக்கத்தில் (வ) என குறிப்பிட்டிருக்கும். அந்த கிரகங்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும் போது பிறந்திருப்பார்கள். வக்ர சஞ்சார காலங்களில் குரு பகவான் தான் சஞ்சரிக்கும் ராசியின் பலனைக் கொடுக்
சென்னை: சுப கிரகமான குரு பகவான் ஆனி மாதம் 06ஆம் தேதி அதாவது ஜூன் 20ஆம் தேதி வக்ரகதியில் சஞ்சரிக்கப் போகிறார். 120 நாட்கள் வக்ரநிலையில் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் யாருடைய வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துவார். மேஷம், ரிஷபம் ராசிகளில் பிறந்தவர்களில் யாருடைய வாழ்க்கை ஏற்றமும் மாற்றமும் பெரும் என்று பார்க்கலாம்.
கிரகங்கள் ஒரு சில நேரங்களில் அதிசாரமாகவும், வக்ரமாகவும் பயணிப்பதுண்டு. இப்போது கும்ப ராசியில் அதிசாரமாக பயணிக்கும் குரு பகவான் ஜூன் 20ஆம் தேதி வக்ர சஞ்சாரத்தை தொடங்குகிறார். செப்டம்பர் 14ஆம் ஆம் தேதியன்று மகர ராசிக்கு குரு வந்துவிடுகிறார். வக்ரம் பெற்ற சனியோடு இணைந்து மகர ராசியில் சஞ்சரிப்பார் குரு பகவான்.
ஒருவனின் பிறந்த ஜாதகத்தில் கிரகங்களின் பக்கத்தில் (வ) என குறிப்பிட்டிருக்கும். அந்த கிரகங்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும் போது பிறந்திருப்பார்கள். வக்ர சஞ்சார காலங்களில் குரு பகவான் தான் சஞ்சரிக்கும் ராசியின் பலனைக் கொடுக்காமல், அதற்கு அடுத்த ராசியின் பலன்களையே கொடுக்கும். அக்டோபர் 18ஆம் தேதி குருவின் வக்ரகாலம் முடிவுக்கு வருகிறது. குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்று சொல்வார்கள். குரு பகவான் வக்ர சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தன லாபம்
குரு லாப ஸ்தானத்திலும் பின்னர் பின்னோக்கி வந்து தொழில் ஸ்தானத்திற்கும் வருகிறார் குரு பகவான். பேச்சினால் புகழும் செல்வாக்கும் கூடும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வண்டி வாகனம் வாங்கலாம். வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்கலாம். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சுகங்களை அனுபவிக்கலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் உண்டாகும். தொழில் விசயமான வங்கிக் கடன் கிடைக்கும்.

ஆரோக்கியத்தில் கவனம்
சொத்து விற்பனையில் லாபம் வரும். சிலருக்கு வீடு, இடமாற்றம் ஏற்படும். காதல் வெற்றி பெறும். திருமணம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு வக்ர காலத்தில் மதிப்பும் மரியாதை கிடைக்கும். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உயர்கல்வி யோகம் கை கூடி வரும். வெளிநாடு சென்று படிக்கவும், வேலை செய்யவும் நல்ல நேரம் கை கூடி வரும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். இந்த கால கட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நோய்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். வியாழக்கிழமைகளில் லட்டு வாங்கி தானம் செய்ய நன்மைகள் நடைபெறும்.

பிசினஸ் லாபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். வெளிநாட்டு தொடர்பினால் நல்ல வேலை கிடைக்கும். ஆன்லைன் பிசினஸ் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வீடு கட்ட நேரம் கை கூடி வந்துள்ளது. சொந்த பிசினஸ் செய்பவர்களுக்கு இந்த வக்ரகதி காலம் சாதகமாக உள்ளது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த சிக்கல்கள் தீரும். திடீர் வருமானம் வந்து திக்கு முக்காட வைக்கும். வரவே வராது என்று நினைத்த பணம் வீடு தேடி வரும்.

வருமானம் அதிகரிக்கும்
அரசு வேலைக்கான போட்டித்தேர்வுகளை எழுதுங்கள். தெய்வ அனுகூலம் உள்ளதால் வழக்குகளில் ஜெயிப்பீர்கள். பேச்சின் மூலம் வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு செப்டம்பர் 14ஆம் தேதிக்கு மேல் வெளிநாடு சென்று உயர் கல்வி படிப்பதற்கான யோகம் கை கூடி வரும். சிலருக்கு நெருங்கிய நண்பர்களுடன் சில பிரச்சினைகள் ஏற்படலாம் கவனம் தேவை. வியாழக்கிழமை குரு ஸ்லோகம் சொல்லி வணங்க பாதிப்புகள் குறையும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications