குரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் வந்தாச்சு

குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகும் இந்த கால கட்டத்தில் மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் பரிகாரம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுப கிரகமான குரு பகவான் வக்ரமடையும் கால கட்டத்தில் மிதுனம், கடக ராசியில் பிறந்தவர்களில் திடீர் அதிர்ஷ்டமும் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்களும் தீரப்போகிறது. திடீர் வருமானம் வந்து திக்கு முக்காட வைக்கப்போகிறது. குரு பகவான் ஆனி மாதம் 06ஆம் தேதி அதாவது ஜூன் 20ஆம் தேதி வக்ரகதியில் சஞ்சரிக்கப் போகிறார். 120 நாட்கள் வக்ரநிலையில் சஞ்சரிக்கப் போகிறார். மிதுனம், கடக ராசிக்காரர் கிடைக்கப் போகும் பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.

கிரகங்கள் ஒரு சில நேரங்களில் அதிசாரமாகவும், வக்ரமாகவும் பயணிப்பதுண்டு. இப்போது கும்ப ராசியில் அதிசாரமாக பயணிக்கும் குரு பகவான் ஜூன் 20ஆம் தேதி வக்ர சஞ்சாரத்தை தொடங்குகிறார். செப்டம்பர் 14ஆம் ஆம் தேதியன்று மகர ராசிக்கு குரு வந்துவிடுகிறார். வக்ரம் பெற்ற சனியோடு இணைந்து மகர ராசியில் சஞ்சரிப்பார் குரு பகவான்.

ஒருவனின் பிறந்த ஜாதகத்தில் கிரகங்களின் பக்கத்தில் (வ) என குறிப்பிட்டிருக்கும். அந்த கிரகங்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும் போது பிறந்திருப்பார்கள். வக்ர சஞ்சார காலங்களில் குரு பகவான் தான் சஞ்சரிக்கும் ராசியின் பலனைக் கொடுக்காமல், அதற்கு அடுத்த ராசியின் பலன்களையே கொடுக்கும். அக்டோபர் 18ஆம் தேதி குருவின் வக்ரகாலம் முடிவுக்கு வருகிறது. குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்று சொல்வார்கள். குரு பகவான் வக்ர சஞ்சாரத்தினால் மிதுனம் மற்றும் கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கஷ்டங்கள் நீங்கும்

கஷ்டங்கள் நீங்கும்

மிதுன ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் குரு வக்ரமடைகிறார். வெளிநாட்டில் இருந்து வரும் செய்திகள் அனுகூலமாக இருக்கும். வேலை தொழில் மாற்றம் ஏற்படும். சொத்து இடமாற்றம் ஏற்படும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் அஷ்டம சனியால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும். பிரச்சினைகளில் இருந்து மீண்டு வெளி வருவீர்கள்.

பிரச்சினைகள் குறையும்

பிரச்சினைகள் குறையும்

குரு பார்வை 3வது வீட்டின் மீது விழுவதால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வேலையில் நல்ல மாற்றம் வந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஆன்லைன் பிசினஸ் செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். காதல் விசயங்கள் கைகூடி வரும். இருக்கும் வேலையை விட்டு விட்டு சொந்த பிசினஸ் செய்ய கடன் வாங்க வேண்டாம் சிக்கலாகிவிடும். அப்பாவினால் உதவி கிடைக்கும். அஷ்டம சனி, ஆறாம் இடத்து கேது சில சிக்கல்களை ஏற்படுத்துவார்கள் குருவின் பயணமும் குருவின் பார்வையும் சாதகமாக உள்ளதால் பிரச்சினைகள் குறைய வாய்ப்பு உள்ளது.

வரவும் செலவும்

வரவும் செலவும்

அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ர மடைகிறார். குரு தன ஸ்தானத்தினை பார்வையிடுவதால் குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பண வருமானம் அதிகரிக்கும். வருமானம் அதிகரித்தாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். புதிய விசயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். நிறைய படிப்பு உங்களுக்கு கை கொடுக்கும். இளைய சகோதர சகோதரிகளுக்கு உதவி கிடைக்கும். சிறு தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். சொந்தமாக வண்டி வாகனங்கள் வாங்க யோகம் வருகிறது.

குருவின் பார்வையால் வெற்றி

குருவின் பார்வையால் வெற்றி

காதல் விசயங்கள் கை கூடி வரும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். திடீர் வருமானம் வரும். வேலை செய்யும் இடத்தில் பொறுமை நிதானம் தேவை. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். தேவையில்லாமல் கடன் வாங்க வேண்டாம். பிரச்சினைகள் அதிகம் வந்தாலும் குருவின் பார்வை, சஞ்சாரம் ராகுவின் சஞ்சாரத்தினால் வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+