குரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு வருமானத்தை தரப்போகும் குருபகவான்
குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகும் இந்த கால கட்டத்தில் மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் பரிகாரம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: சுப கிரகமான குரு பகவான் வக்ரமடையும் கால கட்டத்தில் சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டமும் வருமானம் வந்து திக்கு முக்காட வைக்கப்போகிறது. குரு பகவான் ஆனி மாதம் 06ஆம் தேதி அதாவது ஜூன் 20ஆம் தேதி வக்ரகதியில் சஞ்சரிக்கப் போகிறார். 120 நாட்கள் வக்ரநிலையில் சஞ்சரிக்கப் போகிறார். சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்குக் கிடைக்கப் போகும் பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.
கிரகங்கள் ஒரு சில நேரங்களில் அதிசாரமாகவும், வக்ரமாகவும் பயணிப்பதுண்டு. இப்போது கும்ப ராசியில் அதிசாரமாக பயணிக்கும் குரு பகவான் ஜூன் 20ஆம் தேதி வக்ர சஞ்சாரத்தை தொடங்குகிறார். செப்டம்பர் 14ஆம் ஆம் தேதியன்று மகர ராசிக்கு குரு வந்துவிடுகிறார். வக்ரம் பெற்ற சனியோடு இணைந்து மகர ராசியில் சஞ்சரிப்பார் குரு பகவான்.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் கிரகங்களின் பக்கத்தில் (வ) என குறிப்பிட்டிருக்கும். அந்த கிரகங்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும் போது பிறந்திருப்பார்கள். வக்ர சஞ்சார காலங்களில் குரு பகவான் தான் சஞ்சரிக்கும் ராசியின் பலனைக் கொடுக்காமல், அதற்கு அடுத்த ராசியின் பலன்களையே கொடுக்கும். அக்டோபர் 18ஆம் தேதி குருவின் வக்ரகாலம் முடிவுக்கு வருகிறது. குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்று சொல்வார்கள். குரு பகவான் வக்ர சஞ்சாரத்தினால் சிம்மம் மற்றும் கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

வருமானம் அதிகரிக்கும்
சிம்ம ராசிக்காரர்களே, தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சொந்த தொழில், ஏஜென்சி எடுத்து தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். குருவின் பார்வையால் பண வரவு அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பார்க்கும் வேலையில் புரமோசன் கிடைக்கும். புதிய வேலைக்கும் முயற்சி செய்யலாம். அரசு வேலைக்கு தேர்வு எழுத அப்ளை செய்யலாம். எதையும் எதிர்கொள்வீர்கள். பேச்சின் மூலம் அதிகம் பணம் சம்பாதிப்பீர்கள்.

குழந்தை பாக்கியம்
ஆன்லைன் மூலம் தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம். நீண்ட நாட்களாக சொத்து வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த குரு வக்ர காலத்தில் வாங்கலாம். காதல் விசயங்கள் குதூகலத்தை கொடுக்கும். திருமணம் கை கூடி வரும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

பிரச்சினைகள் நீங்கும்
பெரிய அளவிலான முதலீடுகள் லாபத்தை தரும். அரசாங்கத்தால் நன்மை உண்டு. மூத்த சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. புகழ், செல்வம் செல்வாக்கு கூடும். அதிகம் கடன் வாங்க வேண்டாம், யாருக்கும் பணத்தை கடனாகக் கொடுக்க வேண்டாம். நோய் பாதிப்புகள் எட்டிப்பார்க்கும். உடனடியாக மருத்துவரை பார்த்து ஆலோசனை மேற்கொள்ளவும். இந்த வக்ரகாலத்தில் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

பண வருமானம்
கன்னி ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் குரு வக்ர கதியில் சஞ்சரிக்கிறார். வேலை தொழில் நன்றாக உள்ளது. வேலையில் முன்னேற்றம் புரமோசன் கிடைக்கும். பார்க்கிற வேலையை விட வேண்டிய சூழ்நிலையும் உள்ளதால் கவனம் தேவை. பண வருமானம் வரும். வங்கிக் கடன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

வரம் தரும் குரு
கணவன் மனைவிக்குள் இருந்த சிக்கல்கள் நீங்கும். காதல் கை கூடி வரும். திடீர் வருமானம் வருவதால் நெருக்கடிகள் நீங்கும். குழந்தைகளுக்காக செலவு செய்வீர்கள். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குரு பகவான் வரம் கொடுப்பார்கள். மறைமுக வருமானம் வரும் பங்குச்சந்தையில் தைரியமாக முதலீடு செய்யலாம்.

நல்ல செய்தி வரும்
ரியல் எஸ்டேட் தொழில் லாபத்தை தரும். தகவல் தொடர்புத்துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். குருவின் பொன்னான பார்வையால் சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். தேவையற்ற விரைய செலவுகள் கட்டுப்படும்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications