குரு வக்ர பெயர்ச்சி பலன் 2021: துலாம், விருச்சிகம் ராசிக்காரர்கள் கவனம் மக்களே

குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகும் இந்த கால கட்டத்தில் துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் பரிகாரம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுப கிரகமான குரு பகவான் வக்ரமடையும் கால கட்டத்தில் துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்கள் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருக்க வேண்டிய காலகட்டமாகும். குரு பகவான் ஆனி மாதம் 06ஆம் தேதி அதாவது ஜூன் 20ஆம் தேதி வக்ரகதியில் சஞ்சரிக்கப் போகிறார். 120 நாட்கள் வக்ரநிலையில் சஞ்சரிக்கப் போகிறார். துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்குக் கிடைக்கப் போகும் பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.

கிரகங்கள் ஒரு சில நேரங்களில் அதிசாரமாகவும், வக்ரமாகவும் பயணிப்பதுண்டு. இப்போது கும்ப ராசியில் அதிசாரமாக பயணிக்கும் குரு பகவான் ஜூன் 20ஆம் தேதி வக்ர சஞ்சாரத்தை தொடங்குகிறார். செப்டம்பர் 14ஆம் ஆம் தேதியன்று மகர ராசிக்கு குரு வந்துவிடுகிறார். வக்ரம் பெற்ற சனியோடு இணைந்து மகர ராசியில் சஞ்சரிப்பார் குரு பகவான்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் கிரகங்களின் பக்கத்தில் (வ) என குறிப்பிட்டிருக்கும். அந்த கிரகங்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும் போது பிறந்திருப்பார்கள். வக்ர சஞ்சார காலங்களில் குரு பகவான் தான் சஞ்சரிக்கும் ராசியின் பலனைக் கொடுக்காமல், அதற்கு அடுத்த ராசியின் பலன்களையே கொடுக்கும். அக்டோபர் 18ஆம் தேதி குருவின் வக்ரகாலம் முடிவுக்கு வருகிறது. குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்று சொல்வார்கள். குரு பகவான் வக்ர சஞ்சாரத்தினால் துலாம் மற்றும் விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சுப காரியம்

சுப காரியம்

துலாம் ராசிக்காரர்களே குரு பகவான் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்ர கதியில் பயணிப்பதால் உங்களுக்கு முன்னோர்களின் ஆசி கிடைக்கும். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திடீர் வருமானம் வரும். மகிழ்ச்சி, சந்தோஷம் குதூகலம் உண்டாகும். சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். உழைப்பு உயர்வைத் தரும். வேலையில் திடீர் மாற்றம் வரும் கவனம் தேவை. விழிப்புணர்வும் கவனமும் தேவை. பணம் கடனாகக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். இருக்கிற வேலையை அவசரப்பட்டு விட வேண்டாம்.

ஆரோக்கியத்தில் கவனம்

ஆரோக்கியத்தில் கவனம்

தெய்வ அனுகூலத்தால் பாதிப்புகள் நீங்கும். அப்பாவின் ஆதரவு கிடைக்கும். அப்பா வழி சொத்துக்கள் கிடைக்கும். குரு உங்கள் ராசியை பார்வையிடுவதால் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்யலாம். ஆன்லைன் பிசினஸ் செய்ய முயற்சி செய்யலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நோய்கள் நீங்கும் காலம் வந்து விட்டது.

நிதானம் தேவை

நிதானம் தேவை

காதலிப்பவர்களுக்கு பிரச்சினை ஏற்படும் திடீர் கசப்பாகும் திருமணத்திற்கு அவசரப்பட வேண்டாம் காத்திருக்கவும். மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் வந்துள்ளது. அர்த்தாஷ்டம சனி இருப்பதால் பொறுமையும் நிதானமும் தேவை. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையில்லாமல் கடன் வாங்கி மாட்டிக்கொள்ள வேண்டாம். உறவினர்கள் அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதம் தவிர்க்கவும்.

ஆடம்பர செலவு வேண்டாம்

ஆடம்பர செலவு வேண்டாம்

நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்வதால் சொத்து சேர்க்கை ஏற்படும். சில நேரங்களில் சொத்து விற்பனை மூலம் லாபம் அதிகமாக கிடைக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், பத்தாம் வீடு , எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது. வண்டி வாகனங்கள் வாங்க முயற்சி செய்யலாம். பிள்ளைகளால் ஏற்பட்ட நஷ்டங்கள் சரியாகும். இந்த கால கட்டத்தில் பிள்ளைகளை கண்காணிப்புடன் பார்த்துக்கொள்வது நல்லது. அதிக ஆடம்பர செலவு தேவையில்லை.

விரைய செலவு வரும்

விரைய செலவு வரும்

சொந்தமாக பிசினஸ் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். ஆன்லைன் பிசினஸ் செய்தால் லாபம் கிடைக்கும். இளைய சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். காதல் விசயங்களில் பொறுமை தேவை. வருமானம் அதிகம் வந்தாலும் விரையம் வருகிறதே என்ற கவலை ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

முன் யோசனை அவசியம்

முன் யோசனை அவசியம்

மாணவர்கள் வெளிநாடு, வெளியூர் பயணங்களைத் தவிர்த்து விடவும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளிடம் தேவையில்லாத வார்த்தைகளை விட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். புதிய முயற்சிகளை செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவும். மன குழப்பம் நீங்க முருகப்பெருமானை வியாழக்கிழமை வணங்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+