இந்த 2 ராசிக்கு.. தொட்டதெல்லாம் தூள் பறக்கும்.. அம்சமா, அமோகமா வாழ்க்கை.. குரு வக்ர பெயர்ச்சி பலன்
சென்னை: துலாம் மற்றும் கும்ப ராசிக்கு குரு பகவானின் வக்ர பெயர்ச்சி காரணமாக வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும் என்று இங்கே பார்க்கலாம்.
அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள்.. அதாவது பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். குரு பொதுவாக சிலருக்கு வாழ்க்கையை அடியோடு மாற்றும் குணம் கொண்டது. அந்த வகையில் உங்களுக்கு என்ன மாதிரியான மாற்றங்களை இந்த குரு பகவானின் வக்ர பெயர்ச்சி ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். அந்த வகையில் துலாம் மற்றும் கும்ப ராசிக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
துலாம் பலன்கள்: முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி கொடுக்கும் குரு பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையை சோதித்து பார்த்து பின்னர் நலன்களை கொடுப்பார். ஆரோக்கியத்திலும், குடும்பத்திலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் தலைக்கு வந்தது எல்லாம் தலை பாகையோடு சென்றுவிடும்.
தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். வீடு கட்ட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நிலத்தகராறு ஏற்படும். கடந்த 1 வருடம் உங்களுக்கு சிறப்பாக இருந்தது. அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்றாலும் இந்த வருடம் பிரச்சனை இல்லாமல் செல்லும். பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செலவாக மாற்றுங்கள்.
உங்களுக்கு பல வருடமாக கடுமையான கஷ்டம் நிலவி வந்தது. வேலையில் கடுமையான கஷ்டங்கள் நிலவி வந்தது. உறுதியாக ஒரு வேலை பார்க்க முடியாத நிலை இருந்தது.
வருமானம் உயராமல் ஒரே வருமானத்தில் பல வருடம் வேலை பார்த்த நிலை இருந்தது. அதீத கடன் இருந்தது. குடும்பத்தில் கஷ்டம் இருந்தது. திருமண உறவில், காதல் உறவில் சிக்கல் இருந்தது. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை என்றாலும் பயம் அதிகம் இருந்தது. எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க முடியாத மோசமான சூழல் நிலவியது. இதெல்லாம் இந்த குரு பெயர்ச்சியோடு மாற போகிறது.
உங்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்கும். வேலை பார்க்கும் இடங்களில் நீங்கள்தான் வின்னர். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். நினைத்ததும் வேலை, பிஸ்னஸ் விஷயங்களில் அப்படியே கைகூடும். நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யவும். இந்த குரு பெயர்ச்சி காரணமாக அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாக யோசித்து பேசுங்கள். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பரிகாரம்: புன்னைநல்லூர் மாரியம்மான் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனை தரும்.
கும்ப ராசி பலன்கள்: உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். மன ஆரோக்கியம் சரியாகும். ஆனாலும் முன்பு மோசமாக இருந்த மன ஆரோக்கியம் காரணமாக.. ஏற்பட்ட உடல் பாதிப்புகள் தொடரும். அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
இனி உங்களுக்கு பொருளாதாரம் உயரும். பணம் கொட்டும். பிஸ்னஸ் தொடங்கினால் வெற்றி நிச்சயம், வீடு, நிலம் கிடைக்கும் வாய்ப்பு வரும். பெரிய மனிதர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்.
செல்வாக்கு உயரும்: உங்களின் செல்வாக்கு உயரும். அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பலரிடம் பிரபலம் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. இதுவரை வெளியே தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருந்த நீங்கள் இனிமேல்.. உலகிற்கே தெரியும் அளவிற்கு பெரிய ஆளாக மாறும் காலம் வந்துவிட்டது.
எல்லாவற்றிலும் வெற்றி - பயன்படுத்திக்கொள்ளுங்கள்: நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கெட்டதெல்லாம் விலகும். முதலீடு செய்தால் வெற்றிபெறுவீர்கள். நிலம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.
வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இரண்டாவது, மூன்றாவது குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் குழந்தை பிறப்பில் சிக்கல்கள் ஏற்படலாம். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
குரு இருந்தால் நல்லதே நடக்கும்.. நன்றாக நடக்கும்.. நினைத்ததே நடக்கும் என்பார்கள். அப்படிதான் உங்களுக்கு நடக்க போகிறது. உங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் தொடங்கும் தொழில் வெற்றி அடையும். இத்தனை காலம் வேலையில்தான் பிரச்சனை நிலவியது. இனி அந்த பிரச்சனை இருக்காது.
பரிகாரம்: நாகர்கோவில் நாகநாத சுவாமி கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனை தரும்.












Click it and Unblock the Notifications