வாழ்க்கை கொண்டாட்டம்! இனி ஒவ்வொரு நொடியும் அதிசயம்! இந்த 2 ராசிக்கு குரு வக்ர பெயர்ச்சி பலன் செம
சென்னை: குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் ரிஷபம் மற்றும் கடக ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள்.. அதாவது பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். அந்த வகையில் ரிஷபம் மற்றும் கடக ராசிக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

ரிஷப ராசி பலன்கள்:
உறவுகள் மேம்படும்: இந்த காலத்தில் உங்கள் உறவுகள் மேம்படும். அன்புக்குரியவர்களுடன் ஆழமான இணக்கமான உறவு உண்டாக்கும். வேலையில் எதிர்பாராத பாராட்டு அல்லது அங்கீகாரம் கிடைக்கும்.புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
ஆரோக்கிய மேம்பாடு: சிறந்த மன மற்றும் உடல் ஆரோக்கியம் ஏற்படும். ஆரோக்கிய ரீதியாக உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை அதிகரிக்கும்.
நிதி எதிர்பாராத நிதி ஆதாயங்கள் அல்லது சேமிப்பு வாய்ப்புகள் உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். கடன்கள் குறையும். அதிகம் பயணம் மேற்கொள்வீர்கள். பயணத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வீர்கள்.
தனிப்பட்ட வளர்ச்சி உங்கள் வாழ்வில் இருக்கும். முக்கியமான பிஸ்னஸ் செய்பவர்களுக்கு இது பொற்காலம். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது நல்லது. புதிய திறன்கள் அல்லது பொழுதுபோக்குகளைக் கற்றுக்கொள்வதற்கான எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் மற்றும் உங்கள் திறன்களை அதிகப்படுத்தும். சம்பளம் உயரும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த பெயர்ச்சி உங்களுக்கு பணத்தை கொடுக்கும். அடுத்த 1 வருடம் உங்களுக்கு பண கஷ்டம் இருக்காது. பொருளாதார ரீதியாக நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம்: எதிலும் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். அப்படி நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும். பொறுப்புகளை புறக்கணித்தல் வேண்டாம். எந்த பணியை செய்தாலும் கவனமாக இருங்கள்.
ஏமாற்றம்: எதிர்பார்க்கப்படும் சில விஷயங்களில் ஏமாற்றம் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே பிரச்சனை வரலாம். கவனச்சிதறல் ஏற்படும். கவனமாக வாகனம் ஓட்டுங்கள். விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. உடல் பிரச்சனைகள் ஏற்படலாம்.
அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாக யோசித்து பேசுங்கள் . உங்கள் உடல் ஆரோக்கியம் கெடும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
முழுக்க முழுக்க கெட்ட விஷயங்கள் மட்டும் நடக்கும் என்று நினைக்க வேண்டாம். ஆரோக்கியத்திலும், குடும்பதியிலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் தலைக்கு வந்தது எல்லாம் தலை பாகையோடு சென்றுவிடும். இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்: உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு கறிவிருந்து வைக்கவும்.
கடக ராசி பலன்கள்: உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு. பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும் கூட உண்டு.
உங்களுக்கு நிறைய பண வரவு இருக்கும். நீங்கள் எதிர்பார்த்து இருந்த இடங்களில் இருந்து எல்லாம் பணம் வரும். சமயங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து கூட பணம் உங்களை தேடி வரும்.
நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும். ஆனால் இந்த குரு பெயர்ச்சி காரணமாக சில கெட்ட விஷயங்களும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்க்கவும். விவகாரம் உள்ள நிலங்களை வாங்க வேண்டாம்.
யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம். கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செய்யுங்கள். ரிஸ்க் வேண்டாம். நீங்கள் அதீதமாக வேலையில் ஈடுபடுபவர். நீங்கள் உறுதியானவர் மற்றும் சாதனைகளை கொண்டவர். பகல் கனவு காண வேண்டாம்.. செயல்களில் இறங்குங்கள் வெற்றி நிச்சயம். நீங்கள் ஓய்வு எடுப்பதை விரும்ப மாட்டீர்கள். பல ஊர்களுக்கு சென்று மக்களை பார்க்க விரும்புவீர்கள். காதல் மன்னன்.
தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். கணவருடன் உறவை பேணுவதில் சிக்கல் ஏற்படலாம்.
ஆரோக்கியத்திலும், குடும்பத்திலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் தலைக்கு வந்தது எல்லாம் தலை பாகையோடு சென்றுவிடும்.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபடுவது நல்ல பலனை தரும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications