For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக காபி தினம் - இந்த ராசிக்காரர்கள் எல்லாம் காபியை ருசித்து ரசித்து குடிப்பார்களாம்

காபி சுடச்சுட அதுவும் நுரை பொங்க குடிக்க வேண்டும் என்பது பலரது ஆசை.

Google Oneindia Tamil News

சென்னை: உலக காபி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏராளமானோர் காலையில் கண்விழிப்பதே காபியின் முகத்தில்தான். காபி உள்ளே சென்றால்தான் வேலையே ஓடும். காபி குடித்தால் உற்சாகம் பொங்குகிறது. மனம் புத்துணர்ச்சி அடைகிறது. மூளை சுறுசுறுப்பு அடைகிறது. சில ராசிக்காரர்கள் காபி பிரியர்களாக இருப்பார்கள் அதற்குக் காரணம் ராசியின் நாயகர்கள்தான். யார் யார் எந்த மாதிரியான காபியை விரும்பி குடிப்பார்கள் என பார்க்கலாம்.

காபியை பலரும் விரும்பி ருசித்து குடிக்க செவ்வாய் பகவான்தான் காரணம். காற்று ராசிகளான மிதுனம், துலாம், மற்றும் கும்ப ராசியில் செவ்வாய் நிற்க பெற்றவர்கள் நுரை ததும்பும் காபியின் பிரியர்களாக இருப்பார்களாம்.

காபிக்கு பல நூற்றாண்டு வரலாறு உண்டு. காபியின் வரலாறு காபியைப் போலவே சுவையானது. மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த சூஃபி அறிஞர் நூரூதீன் அபு அல் ஹசன் என்பவர் எத்தியோபியா நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்கே ஒரு மரத்திலுள்ள பழங்களைச் சாப்பிட்ட பறவைகள் மிகவும் உற்சாகமாக இருந்ததைக் கவனித்தார். அந்தப் பழத்திலுள்ள கொட்டைகளைத் தானும் சாப்பிட்டு பார்த்தார். அவருக்கும் உற்சாகமாக இருந்தது. இதன் பிறகே காபி குடிக்கும் பழக்கம் தொடங்கியது.

இப்போது காபி ஃபில்டர் காபி, டிகிரி காபி, டிகாக்ஷன் காபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காபி, கிரீன் காபி காப்பிச்சினோ காபி, ஐஸ் காபி என்று பல அவதாரங்களை காபி எடுத்திருக்கிறது.

காபியினால் ஏற்படும் நன்மை

காபியினால் ஏற்படும் நன்மை

காபி குடிப்பதன் மூலம் உங்கள் ஆற்றல் திறன் அதிகரிக்கும். உங்களால் தற்காலிகமாக புத்திசாலித்தனமாக சிந்திக்க முடியும். காபி குடிப்பதன் மூலம் உற்சாகம் ஏற்படுவதால் அது மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.

காபியின் அழகு

காபியின் அழகு

காபி போடுவது என்பதே ஒரு தனிக்கலை. அது எல்லொருக்கும் அவ்வளவு எளிதில் வந்துவிடுவதில்லை. ரொம்பவும் பால் இருக்க கூடாது. ரொம்பவும் கறுத்து போய் விட கூடாது. சூடாக நுரை பொங்க குடிப்பதுதான் அதன் சிறப்பு. அளவாக சர்க்கரை போட வேண்டும் ஒரு மிதமான கசப்பு தான் அதன் தனித்துவம். காபி குடித்த பிறகும் அதன் சுவை நாக்கில் ஒரு மணி நேரத்திற்காவது தங்க வேண்டும்.

காபியும் ஜோதிடமும்

காபியும் ஜோதிடமும்

தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் டிகிரியில் தொடங்கி ஸ்டார்பக்ஸ் எஸ்பிரஸ்ஸோ வரை பலர் இன்றைக்குக் காபி பைத்தியம் என்று சொன்னால் அது மிகையில்லை. ஆனால் பீத்தோவன், பெஞ்சமின் ப்ராங்களின் பல ஜீனியஸ்கள் கூட காபி பைத்தியங்களாக இருந்தது தெரிகிறது. காபி குடித்தால் உற்சாகம் பொங்குகிறது. மனம் புத்துணர்ச்சி அடைகிறது. மூளை சுறுசுறுப்பு அடைகிறது. இதற்கெல்லாம் காரணம் உற்சாக நாயகன் செவ்வாய்தான் காரணம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு காபி ஏன் பிடிக்கும்

மேஷ ராசிக்காரர்களுக்கு காபி ஏன் பிடிக்கும்

காலபுருஷ ராசியில் மேஷம் தலை, மூளை, ஆத்மா ஆகியவற்றை குறிக்கிறது. அதன் அதிபதிதான் காபி எனும் அற்புத பானத்தின் காரகர் ஆவார். காபியை தனியாக கருப்பு காபியாகவும் குடிப்பார்கள். அவ்வாறு குடிக்கும்போது செவ்வாய் தனித்த காரகம் பெற்றுவிடுவார். ஆனால் பால் சேர்த்த காபியை பொருத்தவரை சந்திர மங்கள யோகத்தை தரும் செவ்வாய்சந்திரன் இருவரும் காரகம் பெருகின்றனர்.

உற்சாகம் தரும் காபி

உற்சாகம் தரும் காபி

செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்தவர்கள் எல்லோரும் அதிக காபி பிரியர்களாக இருப்பார்கள் என ஆய்வு கூறுகிறது. மேஷராசியை லக்னமாகவோ அல்லது சந்திர ராசியாகவோ கொண்டவர்கள் காபி அதிகம் பருகுவது ஆய்வில் தெரியவருகிறது. மேஷத்தை லக்னதாக அல்லது ராசியாக கொண்டு செவ்வாய் அங்கு ஆட்சி பலமும் பெற்றுவிட்டால் அவர்கள் காபிக்காக உயிரை கூட கொடுப்பார்கள்.

கறுப்பு காபி பிரியர்கள்

கறுப்பு காபி பிரியர்கள்

விருச்சிகத்தை லக்னமாகவோ அல்லது ராசியாகவோ கொண்டவர்கள் மற்றும் விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றவர்கள் கடும் காபி எனப்படும் பால் சேர்க்காத காபி பிரியர்களாக இருக்கிறார்கள். பாலை குறிக்கும் சந்திரன் இங்கு நீசமடைந்துவிடுவதால் பாலை விரும்புவதில்லை.

துலாம் ராசிக்காரர்கள்

துலாம் ராசிக்காரர்கள்

மேஷத்தில் உச்ச சூரியனோடு செவ்வாய் இருக்க பெற்றவர்கள், சிம்மத்தில் செவ்வாய் நிற்க பெற்றவர்கள் பித்தளை டம்ளரில் காபி குடிப்பார்கள். காற்று ராசிகளான மிதுன, துலாம், மற்றும் கும்ப ராசியில் செவ்வாய் நிற்க பெற்றவர்கள் நுறை ததும்பும் காபியின் பிரியர்களாக இருப்பார்கள்.

மகரம் ராசிக்காரர்கள்

மகரம் ராசிக்காரர்கள்

சனியின் வீடான மகரம் ராசியில் சுக்கிரன் சேர்கை பெறாமல் செவ்வாய் உச்சம் பெற்றவர்கள் சுவையை பற்றியெல்லாம் கவலை படாமல் காபி என்று ஏதோ ஒன்றை குடித்துக்கொண்டே இருப்பார்கள். ராகுவோடு செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் காப்பிச்சினோ, எக்பிரஸோ என விதவிதமாக காபி குடிப்பார்கள். சுக்கிர சேர்க்கையும் பெற்றுவிட்டால் ஐஸ் காபியை ருசித்து ரசித்து குடிப்பார்கள்.

English summary
Drinking coffee makes you excited. The mind is refreshed. The brain reaches agility. Who is to blame for all this? The reason for today's hero Mangala Mars. Those who stand in the zodiac signs of Gemini, Libra, and Aquarius on Mars will be lovers of foamy coffee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X