கடக ராசி ஏப்ரல் மாத ராசி பலன் 2021 : பண விசயத்தில் கவனம் தேவை
கடக ராசிக்கு ஏப்ரல் மாதம் தனித்தன்மை வெளிப்படும் மாதம். அஷ்டமத்து குருவினால் பண விசயங்களில் கவனம் தேவை. அகலக்கால் வைக்க வேண்டாம்.
சென்னை: கடக ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய மாதம். மன நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும் மாதமாகும். அதிர்ஷ்டங்களைத் தரப்போகிறது. ஏப்ரல் மாத கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நவகிரகங்களின் நாயகன் சூரியன் மீன ராசியில் பயணிக்கிறார் உச்சம் பெற்ற சுக்கிரன், நீசம் பெற்ற புதன், ரிஷபத்தில் செவ்வாய் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. கடக ராசிக்கு ஏப்ரல் மாத பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
கிரக பெயர்ச்சியைப் பார்த்தால் ஏப்ரல் மாதத்தில் சூரியன் மீன ராசியில் இருந்து 14ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்று உச்சமடைகிறார். உச்சம் பெற்ற சூரியனின் பார்வை துலா ராசியின் மீது விழுகிறது. 10ஆம் தேதிக்கு மேல் சுக்கிரனும் மேஷ ராசியில் பயணிக்கிறார். புதன் நீசம் பெற்று சஞ்சரிப்பார்.
குரு பகவான் ஏப்ரல் 5ஆம் தேதி மகர ராசியில் இருந்து அதிசார பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு உடன் இணைந்துள்ள செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி கடக ராசிக்கு ஏப்ரல் மாதம் அதிர்ஷ்டங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

குரு பகவான்
ஏப்ரல் 5ஆம் தேதி மகர ராசியில் இருந்து அதிசார பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு உடன் இணைந்துள்ள செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி கடக ராசிக்கு ஏப்ரல் மாதம் அதிர்ஷ்டங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

நன்மைகள் நடைபெறும்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே பாக்ய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன், என கிரகங்கள் இருப்பதால் உங்களுக்கு எதிர்பாராத நல்ல சம்பவங்கள் அதிகம் நடைபெறும். அஷ்டமத்தில் குரு, கண்டகச்சனி என கிரகங்கள் சஞ்சரித்தாலும் கவலைப்பட தேவையில்லை. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். ஒன்பதாம் வீட்டில் புதன் நீச பங்க யோகம் பெற்றிருக்கிறார். தன ஸ்தானாதிபதி சூரியன் தர்ம ஸ்தானம் கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பு. தந்தை வழி உறவுகளால் நன்மைகள் நடைபெறும்.

கவனம் தேவை
உச்சம் பெற்ற சூரியன் உங்களுக்கு அதிக பலன்களைத் தருவார். குரு ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணித்தாலும் குருவின் பார்வை வாக்கு ஸ்தானத்தின் மீது விழுவதால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். சொன்னதை செய்து முடிப்பீர்கள். சனி கண்டகச்சனியாக இருந்தாலும் பாதகமில்லை. காரிய சித்தி உண்டாகும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. அவ்வப்போது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குரு எட்டாம் வீட்டில் பயணிப்பதால் டென்சன் அதிகரிக்கும் மன அழுத்தம் நீங்கும்.

பணம் பத்திரம்
விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்வது அவசியம். பண முதலீடுகளில் கவனம் தேவை. யாருக்கும் பணம் ஜாமீன் கையெழுத்து போட்டு வாங்கி தர வேண்டாம். வேலையில் அதிக கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதிக கடன் வாங்க வேண்டாம். அகலக்கால் வைக்க வேண்டாம் பொருள் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை சாஸ்தா வழிபாடு செய்வது நன்மையை தரும். குதிரை மேல் அமர்ந்து வலம் வரும் காவல் தெய்வம் கருப்பசாமியை வழிபட நன்மை நடைபெறும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications