கரூர் மாரியம்மன் கோவிலில் அலகு குத்திய பக்தர்கள் - கம்பம் விடும் நிகழ்ச்சி கோலாகலம்

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அமராவதி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Subscribe to Oneindia Tamil

கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் அமராவதி ஆற்றில் விடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழா சிறப்பாக நடைபெறும். அப்போது கம்பம் நடுதலும், அதனை அமராவதி ஆற்றில் விடுவதும் விமரிசையாக நடக்கும் நிகழ்வுகளாகும்.

கரூர் மாரியம்மன் விழாவின் போது வேப்பமரத்தின் மூன்று கிளைகளை உடைய பகுதியை வெட்டி எடுத்து வந்து மஞ்சள் பூசி வேப்பிலையால் அலங்கரித்து பூஜை ஆராதனையுடன் அமராவதி ஆற்றில் இருந்து கம்பத்தை எடுத்து வருவார்கள். ஆலயத்தில் பலி பீடத்தின் அருகில் நடப்படும் கம்பத்தை ஸ்ரீசுவாமியாக பக்தர்கள் கருதி வணங்குகிறார்கள்.

கம்பம் மாரியம்மன் ஆலயத்தில் இருக்கும் நாட்களில் அன்றாடம் மாலை சாயரட்ச பூஜை நடக்கும். அப்போது கம்பத்துடன் கோவிலின் உள்ளே அம்மனுடன் வைக்கப்பட்டுள்ள சக்தியையும் வைத்து பூஜை செய்வார்கள். கோவிலில் நடப்பட்ட கம்பத்திற்கு பக்தர்கள் ஈர ஆடையுடன் மஞ்சள் நீரை வேப்பிலையுடன் எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள். கம்பம் ஆற்றுக்கு செல்லும் நாள் வரை பக்தர்கள் தினமும் மஞ்சள் நீர் ஊற்றி வணங்குவார்கள்.

கரூர் மாரியம்மன் வைகாசி விழா

கரூர் மாரியம்மன் வைகாசி விழா

இந்த ஆண்டு கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த 13ஆம்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன் வாக்கு கூறியதையடுத்து மூன்று கிளையுடைய வேப்பம் கம்பினை பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலின் பலி பீடம் எதிரே நட்டு வைத்தனர். பின்னர் கம்பத்திற்கு மஞ்சள் தேய்த்து, வேப்பிலை சூட்டி அலங்கரித்து வைக்கப்பட்டது. இந்த கம்பத்திற்கு பக்தர்கள் தினமும் புனித நீரை எடுத்து வந்து குடம், குடமாக ஊற்றி வழிபட்டனர்.

மாரியம்மனுக்கு அலங்காரம்

மாரியம்மனுக்கு அலங்காரம்

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூச்சொரிதல் விழா 18ஆம்தேதி நடைபெற்றது. கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பூக்களால் ரதங்களை தயார்செய்து மாரியம்மனை பூக்களால் அலங்கரித்து மின்விளக்குகள் ஜொலிக்க அலங்கார ரதங்கள் கோயிலை நோக்கி வந்தன. அலங்கார ரதத்தின் முன்பு நாதஸ்வரம், தவில், பேண்டுவாத்தியங்கள், கலைநிகழ்ச்சிகள் நடத்தியபடி வந்தனர். கரூர் பகுதியில் இருந்து 46 பூத்தட்டு ரதங்கள் கொண்டுவரப்பட்டன. மாரியம்மனின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் வகையில் அலங்கார ரதம் வடிவமைக்கப்பட்டிருந்தன. பூத்தட்டுஊர்வலம் கோயிலை அடைந்ததும் பூக்களை கோயிலில் வழங்கி பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

அலகு குத்திய பக்தர்கள்

அலகு குத்திய பக்தர்கள்

28மற்றும் 29ம்தேதிகளில் அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துததல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். விழாவின் சிகர நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்களும் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோவில் பலி பீடம் முன்பு உள்ள கம்பத்தில் வேப்பிலை மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கம்பம் ஊர்வலம்

கம்பம் ஊர்வலம்

அதைத்தொடர்ந்து கம்பத்தை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பக்தர்கள் கோவிலின் முன்புற பகுதியில் கம்பத்தை வழியனுப்ப திரண்டு நின்றனர். இதனையடுத்து அம்மன் சன்னதி எதிரே இருந்த கம்பத்தை பூசாரி எடுத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். கோவிலின் முன்புற பகுதியில் தயார் நிலையில் இருந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்திற்குள் கம்பம் வைக்கப்பட்டு ஊர்வலம் புறப்பட்டது.

கண்கவர் வான வேடிக்கை

கண்கவர் வான வேடிக்கை

கம்பமானது பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையை அடைந்தது. அங்குள்ள மணல் திட்டில் கம்பம் நடப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் உள்ள புனிதநீரில் கம்பத்தை விட்டு மூழ்கடித்தனர். அப்போது பக்தர்கள் ஒம் சக்தி என முழக்கமிட்டனர்.

அந்த சமயத்தில் பக்தர்கள் மீது அகழியில் இருந்த புனிதநீர் தெளிக்கப்பட்டது. கம்பம் ஆற்றில் விடப்பட்டதும் கண்களை கவரும் வகையில் விதவிதமான வான வேடிக்கை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+