கேரளா குண்டு வெடிப்பு: மோட்ச வீடான மீனத்தில் ராகு...தேவாலயத்தில் அனாச்சாரம்
சென்னை: தண்ணீரில் மீன ராசியில் இறங்கிய ராகு பல பயங்கர சம்பவங்களை செய்யப்போகிறது என்று ஜோதிடர்கள் கணித்தது போலவே செய்திகள் வெளியாகி வருகின்றன. கேரளாவின் கொச்சி களமசேரியில் பிரார்த்தனை கூடத்தில் இன்று நடந்த பயங்கர தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியானார். 36 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தனது கணிப்பு பலிக்க ஆரம்பித்துள்ளதாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்.

ராகு மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதன் காரணமாக புகழ்மிக்க ஆன்மீகவாதிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும். சிலர் மரணமடைவார்கள். குரு ஸ்தானத்தில் இருக்கும் நபர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும். கோவில்களில் நாதிக்கர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். அனாச்சாரம் நிகழும் என்று ஜோதிடர் கணித்து தங்களின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
கோவில் சிலைகள் சிதிலமுறும். கடல் பல மாற்றங்களை காணும், மாற்றுமத தலைவர்கள் பெயர் கெடும்.பாதயாத்திரை அல்லது கிரிவலம் அல்லது மலை ஏறும் நிகழ்வில் விபத்துகளை பார்க்கலாம். விமான/கப்பல்/ரயில் விபத்து, தீவிபத்துகள் அதிகரிக்கும். வங்கிகளில் துப்பாகி சூடு அல்லது கொள்ளை நடக்கும். இந்த பாதிப்பு குறைய காலபைரவ கூட்டு பிராத்தனை செய்வது நல்லது என்று கூறப்பட்டிருக்கிறது.
நீரில் இறங்கிய ராகு இஸ்லாம் நாடுகளை குறிவைத்திருக்கிறான். குரு வக்ரமாகி ராகுவை நோக்கி நகரும் இந்த காலம் சற்று பதட்டம் கொடுத்தாலும், பாரத நாட்டுக்கு பிரச்சனை இல்லை. அடுத்த ஆங்கில வருடமே, தன் சம்பவத்தை ராகு செய்வான் என்று பதிவிட்டுள்ளார்.
பல சித்தர்களின் ஜீவசமாதிகளின் அருட்கொடையால் பாரத தேசம் குரோதி வருடத்தில் நலம் பெறும். ராகு ரேவதி இரண்டாம் பாதம் முதல் - உத்திரட்டாதிக்கு (ஏப்ரல் 2024 to செப்டம்பர் 2024) செல்லும் காலம் வரை, நாம் அனைவரும் காலபைரவரை வணங்கி கூட்டு பிரார்த்தனை செய்வது நலம் தரும் என்றும் பதிவிட்டுள்ளார் மணிகண்டன் பாராதிதாசன்.












Click it and Unblock the Notifications