குரோதி தமிழ் புத்தாண்டு பலன்: பாக்ய சனியால் 30 ஆண்டுகளுக்குப் பின் அதிர்ஷ்டம்.. பலனடைவது யார்?
சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிறக்கப்போகிறது. சித்திரை மாதத்தில் குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். அதிசார சனியால் குரோதி ஆண்டில் ராகு சனி சேர்க்கை ஏற்படப்போகிறது. மிதுன ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் குரோதி ஆண்டில் என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
குரோதி தமிழ் புத்தாண்டு: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டு அதிரடி மாற்றங்களைத் தரப்போகிறது. குரோதி தமிழ் புத்தாண்டில் சித்திரை மாதத்திலேயே குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்து 12ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். சனி பகவான் பாக்ய ஸ்தானத்தில் ஆண்டு முழுவதும் பயணம் செய்கிறார்.

கிரகங்களின் மாற்றம்: ராகு பகவான் ராசிக்கு 10ஆம் வீட்டிலும் கேது பகவான் ராசிக்கு நான்காம் வீட்டிலும் ஆண்டு முழுவதும் பயணம் செய்வார்கள். சனி பகவான் ஆண்டின் இறுதியில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். 10 ஆம் வீடான தொழில் ஸ்தானத்திற்கு சனி இடம் மாறுவார். ஆண்டு கிரகங்களின் பயணம், ராகு சனி கூட்டணி, குரு பகவானின் பார்வை போன்றவையால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டில் மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகிறது.
குரு பெயர்ச்சி பலன்: குரு பகவான் சித்திரை மாதத்தில் இடப்பெயர்ச்சி அடைகிறார் மே 1ஆம் முதல் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வந்து அமரப்போகிறார். குருவினால் உங்களுக்கு விரையம் அதிகரிக்கும் சுப விரையமாக மாற்றுங்கள். மருத்துவ செலவுகளுக்காக பண விரையம் அதிகம் ஏற்படும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். குரு அமர்கிற இடம் விரைய ஸ்தானத்தில் என்பதால் நல்லது இல்லை என்பது பொது பலனாக இருந்தாலும், மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி நன்மைதான் செய்யும்.
யோகத்தை தரும் குரு: குரு பகவான் உங்கள் ராசிக்கு 7 மற்றும் 10ஆம் இடத்துக்கு அதிபதி அதாவது கேந்திராதிபதி எப்போதும் கெட வேண்டும். உங்கள் இராசிக்கு குரு கெட்டவன். எனவே 12ஆம் வீட்டில் அமரப்போகும் குரு யோகத்தை கொடுப்பார். உடல்நலனில் இருந்த பிரச்னை குணமாகும். நீண்ட நாட்களாக இருந்துக் கொண்டிருந்த வழக்கு சமரசம் ஏற்படும் அல்லது வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கும்.
கடன் பிரச்சினை நீங்கும்: வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு வாங்கும் அமைப்பை குரு பகவான் ஏற்படுத்துவார். இதுநாள்வரை கடன் தொல்லையில் இருந்தவர்களுக்கு, வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினை நீங்கும். மாணவர்களுக்கு அற்புதமான மாற்றத்தை தரப்போகிறது. கல்வி கற்பதில் இருந்த தடைகள் நீங்கும் மீண்டும் புதிய உத்வேகத்துடன் கல்வி கற்பீர்கள் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு வேலைக்கு காத்திருந்தவர்கள் விமான பயணத்திற்கு தயாராக வேண்டிய காலம்.
தோஷம் தீர்க்கும் குரு பார்வை: குருவின் பார்வை 12ஆம் வீட்டில் இருந்து நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது. சொத்து சுகம் சேர்க்கை ஏற்படும். வீடு வண்டி வாங்கலாம். இது சுப விரைய செலவு என்பதால் பிரச்சினையில்லை. ஆறாம் வீடு ருண ரோக சத்ரு ஸ்தானம் என்பதால் ஒரு கடன் வாங்கி இன்னொரு கடனை அடைக்கலாம். வாட்டி வதைத்த நோய்கள் தீரும் ஆயுள் அதிகரிக்கும். அவமானங்கள் நீங்கும். பெண்களாக இருந்தால் தோஷங்கள் நீங்கும். தாலி பாக்கியம் அதிகரிக்கும்.
சனி தரும் சந்தோஷம்: அஷ்டம சனியால் கடந்த சில ஆண்டுகாலமாகவே பணப்பிரச்சினை, கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்து வந்த உங்களுடைய பொருளாதார நிலைமை சீரடையப்போகிறது. பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் இனி உங்களைப் புரிந்து கொள்வார்கள். கடன் பிரச்சினையால் சிலர் தற்கொலை வரை சென்று மீண்டிருப்பீர்கள். சனி பகவான் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் கஷ்டங்களில் இருந்து கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை பெறப்போகிறீர்கள்.
பொற்காலம்: குரோதி ஆண்டு முதல் உங்களுக்கு பொற்காலம் ஆரம்பமாகிறது. பாக்ய சனி நிறைய பதவி உயர்வை தேடித்தரப்போகிறார். கடந்த காலங்களில் வேலையை இழந்தவர்களுக்கு இனி நல்ல வேலை கிடைக்கப்போகிறது. வருமானம் அதிகரிக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் இனி மளமளவென நடைபெறப்போகிறது. திருமணம் கைகூடி வரும். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். பள்ளி மாணவர்களுக்கு இனி பாடங்கள் புரியும். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
ராகு கேது: ஏற்கனவே 10ல் ராகு நான்காம் வீட்டில் கேது சஞ்சரிக்கிறார். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளைஅதிகரிப்பார் ராகு பகவான். வேலையில் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். மிகப்பெரிய வெற்றிகள் கைகூடி வரப்போகிறது.
மன மகிழ்ச்சி அதிகரிக்கும்: குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் நிலவும் கணவன், மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பணவரவு அதிகம் உண்டு. குழந்தை இல்லாத தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். வீண் அலைச்சல்கள் நீங்கும். இனி திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வருமானத்தை அதிகரிப்பீர்கள். திறமையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எழுத்துத்திறமையும் வாத திறமையும் அதிகரிக்கும். வியாழக்கிழமையன்று குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications