தமிழ் புத்தாண்டு.. குரோதி ஆண்டில் எப்படி இருக்கும்.. சித்தர் பாடல் சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டு முடிந்து குரோதி தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த குரோதி புத்தாண்டு பெயரின் அர்த்தம் என்ன? ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கப்போகும் குரோதி புத்தாண்டினால் நாட்டில் என்ன நடக்கப்போகிறது என்று வெண்பா சொல்வதென்ன பஞ்சாங்கத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்க்கலாம்.

குரோதி தமிழ் புத்தாண்டு 60 ஆண்டுகளில் 38வது ஆண்டாக உள்ளது. குரோதி என்றால் பகைக்கேடு என்று பொருள். குரோதி வருடத்தில் என்ன நடக்கும் வெண்பாவில் கூறப்பட்டுள்ளது.

Krodhi Tamil New year palan 2024-2025: Tamil Panchangam prediction for Krodhi new year

கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால்
பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க
அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே
சொற்பவிளையுண்டெனவே சொல்

பாடல் விளக்கம்: குரோதி தமிழ் ஆண்டு கோரமான வருடம். எங்கும் கொள்ளை களவு பகை பெருகும். திருடர்கள் மக்களை தாக்கி அழிப்பர். ஊரில் பயம் மிகுதியாகும். மழையும் தேவையான நேரத்தில் மிகவும் குறைவாகவே பொழியும். எங்கும் காய்கறிகளின் பற்றாக்குறை காணப்படும். பயிர்களும் அழிந்து போய் மிகவும் அற்பமான விளைச்சலைத் தரும் என்று வெண்பாவில் சொல்லப்பட்டுள்ளது.

குரோதி வருஷத்திய தேவதை அஜராபிரபு. ராஜா செவ்வாய் மந்திரி சனி, சேனாதிபதி, அர்க்காதிபதி சுக்கிரன், ரஸாதிபதி குரு, தானியாதிபதி சூரியன்.

குரோதி தமிழ் வருடத்தில் ராஜாவாக செவ்வாய் வருவதால் பெருமளவு தீ விபத்துக்களும் வாகன விபத்துக்களும் உண்டாகும். அரசியல்வாதிகளுக்குள் சண்டையும் அதனால் குழப்பமும் உண்டாகும். குரோதி ஆண்டின் கடைசியில் அரசனுக்கு நோயும் கெண்டமும் உண்டாகும்.

மந்திரியாக சனி வருவதால் நாட்டில் விலைவாசி உயரும். காய்கறிகள், கனிகள் விலை உயரும். அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படும் புதுவித நோய்கள் உண்டாகும்.

சேனாதிபதி, அர்க்காதிபதியாக சுக்கிரன் வருவதால் எல்லையில் போர் பயம் உருவாகும். காதல் திருமணங்கள் அதிகம் நடைபெறும். நாட்டில் நல்ல மழை பொழியும் பயிர்கள் செழித்து தானிய உற்பத்தி அதிகரிக்கும். விவசாயம் செழிக்கும்.

ரஸாதிபதியாக குரு வருவதால் கரும்பு விளைச்சல் அதிகரிக்கும். மஞ்சள் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். வருடம் முழுவதும் நல்ல மழை பொழிந்து விளைச்சல் அதிகமாகும்.

தானியாதிபதியாக சூரியன் வருவதால் சிவப்பு நிற பொருட்கள் விளைச்சல் அதிகமாகும். பீகார் மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். விளைச்சல் உற்பத்தி பாதிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+