கும்பம் ஏப்ரல் மாத ராசி பலன் 2021: குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும் உற்சாகம் கூடும்
ஏப்ரல் மாதத்தில் கிரக மாற்றங்கள் அதிகம் உள்ளன. நவ கிரகங்களின் சஞ்சார மாற்றத்தினால் கும்ப ராசிக்காரர்களுக்கு மன மகிழ்ச்சி அதிகரிக்கும் திடீர் பண வருமானம் வரும்.
சென்னை: கும்ப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் குடும்பத்தில் உற்சாகம் நிறைந்த மாதமாக அமையப்போகிறது. இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நவகிரகங்களின் நாயகன் சூரியன் மீன ராசியில் பயணிக்கிறார் உச்சம் பெற்ற சுக்கிரன், நீசம் பெற்ற புதன் ரிஷபத்தில் செவ்வாய் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, குரு, என கிரகங்கள் சஞ்சரிப்பதால் கும்ப ராசிக்காரர்களுக்கு குதூகலம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் கிரக பெயர்ச்சியைப் பார்த்தால் சூரியன் மீன ராசியில் இருந்து 14ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்று உச்சமடைகிறார். உச்சம் பெற்ற சூரியனின் பார்வை துலா ராசியின் மீது விழுகிறது. சுக்கிரனும் மேஷ ராசியில் பயணிக்கிறார். புதன் நீசம் பெற்று சஞ்சரிப்பார். 16ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். 30ஆம் தேதி ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
குரு பகவான் ஏப்ரல் 5ஆம் தேதி மகர ராசியில் இருந்து அதிசார பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு உடன் இணைந்துள்ள செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி கும்பம் ராசிக்கு ஏப்ரல் மாதம் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

முதலீடுகள் அதிகரிக்கும்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசி நேயர்களே, இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு அருமையான மாதமாக அமையப்போகிறது. குரு பகவான் உங்கள் ராசிக்குள் பயணிப்பதால் முதலீடுகள் அதிகரிக்கும். தங்க நகைகள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் உயரும் மதிப்பு மரியாதை உயரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

பிரச்சினைகள் நீங்கும்
குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். ஆலய வழிபாடு மன நிம்மதியை தரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை ஆர்வத்தை அதிகரிக்கும். நல்ல தன வருமானம். பெயரும் புகழும் தேடி வரும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்லது நடக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்

தம்பதியர் நெருக்கம் கூடும்
சுக்கிரன் மூன்றாம் வீட்டில் உச்சம் பெற்ற சூரியனுடன் இணைவதால் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளுக்கு திருமணம் சுபகாரியம் தொடர்பாக வெற்றிகரமாக பேசி முடிவு செய்வீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

பரிகாரம் என்ன
விரைய சனியால் திடீர் செலவுகள் வரும். மருத்துவ செலவுகள் வரும். குடும்பத்தில் சில நேரங்களில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. புதிதாக வீடு சொத்து எதுவும் இப்போது வாங்க வேண்டாம் நிலத்தில் முதலீடு செய்வதற்கு இது ஏற்ற தருணம் அல்ல. மாத பிற்பகுதியில் செவ்வாய் இடப்பெயர்ச்சி அடைந்த பின்னர் பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் கிடைக்கும். ஆனைமலையில் அருள்பாலிக்கும் மாசாணியம்மனை வணங்க நன்மைகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications