புத்தாண்டு 2025: கொட்டிக் கொடுக்கும் குரு.. பண மழையில் நீச்சல் அடிக்கப் போகும் கடக ராசியினரே
புத்தாண்டு 2025: கடந்த ஐந்து ஆண்டுகளாக கடுமையான பிரச்னைகளைச் சந்தித்து வந்த கடக ராசிக்காரர்கள் வரும் புத்தாண்டில் என்ன விதமான நற்பலன்களைப் பெறப் போகிறார்கள், எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (New year rasi palan for kadagam)
கடக ராசிக்காரர்கள் 2019 இல் இருந்தே பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்திருப்பீர்கள். கண்டகச் சனி, அஷ்டம சனி உங்களைப் போட்டு பாடாய் படுத்தி இருந்திருக்கும். நிர்வாகத் திறனுடையவர்களான நீங்கள் எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் அதற்கு சரியான தீர்வைக் காண வேண்டும் என்று துடியாய் துடிப்பவர்கள். எல்லோரையும் விட சுறுசுறுப்பாகவும், புத்திசாலியாகவும் இருப்பீர்கள். உடனடியாக தீர்வை நோக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தீவிரமாக உழைக்கக் கூடியவர்கள்.

எல்லோருடைய பிரச்னையும் தீர்த்து வைக்கும் உங்களுக்கு உங்களுடைய பிரச்னையை யாராலும் தீர்த்து வைக்க முடியவில்லையே என்று மனதிற்குள்ளேயே கவலைப்பட்டு வந்திருப்பீர்கள். அதற்கெல்லாம் 2025 ஆம் ஆண்டில் தீர்வு கிடைக்கும். சொந்த பிரச்னை, அந்தரங்கப் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படும். அஷ்டமத்து சனி உங்களைப் போட்டு புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
மார்ச் 29 ஆம் தேதி வரை அஷ்டமத்து சனி உங்களுக்கு இருக்கும். அதற்குப் பிறகு உங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளும் நடக்கும். அதனால் மார்ச் 29 ஆம் தேதிக்குப் பிறகு வரும் சனிப்பெயர்ச்சியால் உங்களுக்குப் பெரிய வெற்றி ஏற்படும். கடந்த ஐந்து வருடத்துக்குப் பிறகு இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. மூச்சுவிட முடிகிறது என்ற நிலை ஏற்படும்.
குரு பகவான் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் இருக்கிறார். மே 14 ஆம் தேதி முதல் குரு பகவான் 12 ஆம் இடத்திற்குச் செல்கிறார். இதனால், வேறு மாநிலத்துக்கு, வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் யோகம் உண்டாகும். வீடு மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எல்லா வகையிலும் நீங்கள் ஜெயித்துக் காட்டும் காலமாக இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதியில் இருந்து வருவதால் குறிப்பாக கேது 2 வது வீட்டிற்கு வருகிறார். ராகு 8 வது வீட்டுக்கு போகிறார். அதனால் கூடா பழக்கவழக்கங்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காரியம் ஆகும்போது கையெடுத்து கும்பிட்டுவிட்டு காரியம் ஆன பின்னர் காலை வாரி விடும் நட்புகள் வரும். அதனால் நண்பர்கள் விவகாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.
2025 புத்தாண்டு பிறக்கும்போது ராசிநாதன் சந்திரன் பலமாக உட்கார்ந்திருப்பதாலும், ஆறாவது ராசியில் பிறப்பதாலும் கடன் பிரச்னைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். புதிய வங்கிக் கடன்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். அதிக வட்டிக்கு வாங்கிய கடன்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உங்களை எதிர்த்தவர்களே ஆதரவு தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மகனுக்கு செல்வாக்கு அதிகரிக்கும், மகளுக்கு நல்ல திருமண வரன் அமைவதற்கான வாய்ப்புள்ளது. இந்த வருடத்தைப் பொருத்தவரைக்கும் எல்லா வகையிலும் வெற்றியைத் தர சிவபெருமானை வழிபடுவது நல்லது. பிரதோஷம் அன்றும், திங்கள்கிழமைகளிலும் சிவனை வழிபடுவது நல்ல அனுகூலத்தை தரும். கண் பார்வையற்றவர்களுக்கு உதவுவது நல்லது. மலை வாழைப்பழம் தானமாக வழங்குவது நல்ல பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications