புத்தாண்டு பலன் 2025: ஜாக்பாட் அடிக்கும் ரிஷபம்.. கூரைய பிச்சிக்கிட்டு பணம் கொட்டப் போகுது
புத்தாண்டு 2025: 2025 புத்தாண்டு ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பல்வேறு யோகங்களை கொட்டிக் கொடுக்கப் போகிறது. ரிஷப ராசிக்காரர்கள் வரும் புத்தாண்டில் என்ன விதமான நற்பலன்களைப் பெறப் போகிறார்கள், எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (New year rasi palan for kadagam)
ரிஷப ராசிக்காரர்களே 2024 ஆம் ஆண்டு உங்களைப் போட்டு புரட்டி எடுத்திருக்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும் காலதாமதம், இழுபறி, கையில் காசில்லாமல் தவித்து வந்திருப்பீர்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே எப்போதும் சண்டை என்ற நிலை இருந்திருக்கும். நாம் ஒன்று சொன்னால் வீட்டில் இருப்பவர்கள் அதை வேறு விதமாகப் புரிந்து கொள்வது என பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள்.

2025 ஆம் ஆண்டு உங்களுக்கு ஏகப்பட்ட யோகங்களை தரக்கூடிய வருடமாக இருக்கும். குறிப்பாக வரும் சனிப்பெயர்ச்சி அருமையாக இருக்கும். மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்துக்கு வருகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் நல்ல இடத்துக்கு வருகிறார். இதனால் திடீர் பண வரவு, வாங்கிபோட்டு வைத்திருந்த வீட்டு மனைகள் நான்கு முதல் ஐந்து மடங்கு விலை உயர்வது போன்ற திடீர் ராஜயோகத்தை ஏற்படுத்தும்.
குருப்பெயர்ச்சியும் அற்புதமாக இருக்கும். மே 14 முதல் குரு பகவான் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் மனநிறைவு உண்டாகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். தள்ளிப்போன திருமணம் எல்லாம் விரைவில் கூடிவரும். மே 14 முதல் டிசம்பர் வரைக்கும் குரு பகவான் சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.
தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். முதலில் எல்லாம் ஏன் தான் வியாபாரத்தை செய்கிறோமோ என்று தோன்றும். இனிமேல் ஆர்வமாக வியாபாரத்தை செய்வீர்கள். அதில் அதிக லாபத்தைக் காண்பீர்கள். புதிய ஏஜென்சி எடுப்பது, புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடுவது போன்றவற்றிற்கு வாய்ப்பு ஏற்படும்.
உத்தியோகத்தில் புது வேலைக்கு மாறுவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் ராசிக்கு குரு இரண்டாம் இடத்தில் வருவது நல்ல வேலை மாற்றத்தை உண்டாக்கும். மே 18 ஆம் தேதி ராகு கேதுவும் சாதகமாக மாறுவதால் எல்லா வகையிலும் வெற்றி உண்டாகும். தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. மற்றபடி எந்த பெரிய பாதிப்புகளும் இருக்காது.
2025 யோகங்களை அள்ளிக் கொடுக்கும் ஆண்டாக இருக்கும். நல்ல காரியங்கள் அனைத்தும் வீட்டில் நடக்கும். எடுத்த காரியங்களில் ஜெயிப்பீர்கள். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீடு வாங்குவதற்கான வங்கிக் கடன்கள் கிடைக்கும். விஐபிக்களின் அறிமுகம் உண்டாகும். சொந்த ஊர்களில் உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும். பொதுக் காரியங்களில் முன்னால் நின்று நடத்துவார்கள்.
கோயில் காரியங்களில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேரும். சகோதரர்கள் வழியில் நன்மை உண்டாகும். உங்களுடைய ராசிக்கு ராசிநாதன் சுக்கிரன் தொடர்ந்து 4 மாதங்களுக்கு 11 வது இடத்திலேயே உட்கார்ந்திருக்கப் போகிறார். பெரிய பதவிகள், பெரிய பொறுப்புகள், உயர்வுகள் உங்களுக்கு வந்து சேருவதற்கான வாய்ப்புள்ளது.
2025 ஆம் ஆண்டு உங்களுக்கு எல்லாவிதமான முன்னேற்றங்களையும் தரக்கூடியதாக இருக்கும். எங்கு போனாலும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த ஆண்டு முழுவதும் எல்லா காரியங்களிலும் நம்பர் 1 இடத்தில் இருக்க பெருமாளை தரிசிப்பது நல்லது. குறிப்பாக, நரசிம்ம பெருமாளை சேவிப்பது நல்ல பலன்களைத் தரும். மாதுளம்பழம் தானமாக கொடுப்பது நல்லது. மனநலம் குன்றியவர்களுக்கு உதவுவது நல்ல முன்னேற்றத்தை தரும்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications