லோக்சபா தேர்தல் 2019: ராகு காலத்தில் தேதியை வெளியிட்ட தேர்தல் ஆணையம் - கலக்கத்தில் தலைவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக லோக்சபாத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் அறிவிப்புகள் மாலை 5 மணிக்கு வெளியானதால் அரசியல் தலைவர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசியல் தலைவர்களை இந்தக் கால நேரம் சங்கடத்துக்கு ஆளாக்கியது. காரணம் ஞாயிறுக்கிழமை 4.30 மணி முதல் 6 மணிவரை ராகு காலம் என்பதனால்தான் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் ஒன்றரை மணி நேரம் ராகுவும், ஒன்றரை மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றன என்பதை புராணங்கள் கூறுகின்றன. அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்கிறோம்.

17வது லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு எப்போதும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவி வந்தது. இந்தநிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் தேர்தல் தேதி மற்றும் தேர்தல் நடைமுறைகளை ஞாயிறன்று மாலை 5 மணிக்கு ராகு காலத்தில்தான் அறிவித்தார்.

விஷ காலத்தில் நல்லவை தேவையில்லை

விஷ காலத்தில் நல்லவை தேவையில்லை

ஜோதிடத்தில் ராகு, கேது என்பது சர்ப்பங்களுக்கு சம்பந்தப்பட்டவை என்பதால், அது விஷ காலமாக கருதப்படுவதால் அந்த நேரத்தை ஒதுக்கி வைத்தார்கள். ஞாயிற்றுகிழமை மாலை 4 மணி 30 நிமிடம் முதல் ராகு காலம். அது விஷ காலம். அதேபோல் மதியம் 12 மணிமுதல் 1 மணி 30 நிமிடம் வரை எமகண்டம் ஆகும். இதை ஒதுக்க வேண்டும். இதில் சில சமயங்களில் சுபக் கிரகங்களின் காலங்கள் வந்தாலும், அதை ஒதுக்குவது நல்லது என்கின்றனர் ஜோதிடர்கள்.

தேர்தல் திருவிழா தேதி

தேர்தல் திருவிழா தேதி

நல்ல நேரத்தில் செய்யும் நல்ல காரியங்கள் வெற்றியைத் தரும் என்பது நம்பிக்கை. அரசியல்வாதிகளுக்கு அந்த நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது. நல்ல நேரம் என்பது ராகு காலம், எமகண்டம் எனும் கெட்ட நேரங்கள் இல்லாமல் பார்த்துச் செய்ய வேண்டும். நல்ல நேரம் பார்த்து சென்றால் தடைகளின்றி வேலைகள் நடக்கும் என்பது முன்னோர்களின் கருத்து. ராகு கால நேரத்தில் தேர்தல் அட்டவணை வெளியானதால் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களும் யோசித்தனர். நேரத்தை மாற்றி வைக்கச் சொல்லலாம் என்று கூட ஆளுநர் முதற்கொண்டு பேசிய நிலையில் சரியாக 5 மணிக்கு ராகு காலத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது.

தேர்தல் முடிவு தேதி

தேர்தல் முடிவு தேதி

தமிழகத்துக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும். மார்ச் 19ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 தொகுதிகளில் இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதியே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகு கால துர்க்கை வழிபாடு

ராகு கால துர்க்கை வழிபாடு

ராகு காலத்தில் முதல் 1 மணி நேரம் கழித்து கடைசியில் வருகிற அரை மணி நேரம் அமிர்த ராகு காலம். இந்த நேரத்தில் ஏதாவது செய்தாலும் நன்மையே தரும் என்பார்கள். நன்மைகள் பெருகி வரும். சுவர்ணபானு என்ற அரக்கன் தேவர் வேடம் பூண்டு, திருமாலின் கையில் ஒரு துளி அமிர்தம் வாங்கினான். பிறகு சூரிய, சந்திரர்களால் சுட்டிக்காட்டப்பட்டு மோகினி அவதாரம் கொண்ட திருமாலின் கையில் அகப்பையால் தலை துண்டாடப்பட்டு தலையும் உடம்பும் ராகு, கேதுவாக மாறியதாகப் புராணங்கள் சொல்கின்றன. அந்த ஒரு துளி அமிர்தத்தைச் சுவைத்த காரணத்தால் ராகு காலத்தின் கடைசி அரை மணி நேரம் அமிர்த ராகு காலம் என அழைக்கப்படுகிறது. அந்த நேரத்தில்தான் தேர்தல் அறிவிப்பு வெளியாது என்பது சிலரின் ஆறுதல் கருத்து. ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிப்பட்டால் சிறப்பு பலன்களை தருகிறது. செவ்வாய், வெள்ளி, ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவது கூடுதல் சிறப்பு

தேர்தலில் வெற்றி யாருக்கு

தேர்தலில் வெற்றி யாருக்கு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர் இப்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரும் ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்தான். அதே போல தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் நல்ல நாள், நேரம் பார்த்துதான் ஒரு காரியத்தை செய்வார். ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் நல்ல நேரம், நாள் பார்ப்பார். இதேபோல முன்னாள் பிரதமர் எச்.டி தேவேகவுடா, நாள், நேரம் பார்த்துதான் ஒரு காரியத்தை தொடங்குவார். தேர்தல் தேதி அறிவித்த நேரம் ராகு காலமாக உள்ளது. இது மத்தியில் ஆளும் கட்சிக்கு இந்த நேரம் நல்ல நேரமா அல்லது எதிர்கட்சியினருக்கு நல்ல நேரமாக அமையுமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+