மகா சிவராத்திரி கோலாகலம் - நாடு முழுவதும் பக்தர்கள் விடிய விடிய சிவ தரிசனம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவ ஆலயங்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் சிவ ஆலயங்களில் நடைபெற்ற நான்கு கால பூஜைகளிலும் பக்தர்கள் விடிய விடிய கண் விழித்து சிவ தரிசனம் செய்தனர்.
மதுரை: நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவ ஆலயங்களில் விடிய விடிய நடைபெற்ற நான்கு கால பூஜைகளிலும் பக்தர்கள் பங்கேற்று கண் விழித்து சிவ தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் மாசி மாதம் தேய்பிறை திரயோதசி மற்றும் சதுர்தசி சந்திக்கும் நாள் இரவு மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி நான்கு கால சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு 11:30 மணிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பக்தர்கள் தேவாரம், சிவபுராணம் பாடியபடி வழிபாடு செய்தனர்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும், பஞ்சசபைகளில் பொற்சபையாகவும் போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 4 கால பூஜையுடன் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. கருவறையில் உள்ள மூலவருக்கு தேன், இளநீர், பால் உள்ளிட்ட பொருட்களுடன் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். நடராஜர் கோவிலுக்கு வெளியே நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடனமாடி நடராஜரை வழிபட்டனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில், இம்மையில் நன்மை தருவார் கோவில், திருப்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலிலும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரத்தெட்டு சங்கபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சை பெருவுடையார் கோயியில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்திந்த கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, லிங்கோத்பவ மூர்த்திக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஓராண்டுக்கு பிறகு கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கிரிவலம் சென்றனர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சிவ நாமம் முழங்க வழிபாடு செய்தனர்.
திருச்சி திருவானைக்காவில் உள்ள அருள்மிகு ஜம்புலிங்கேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், சிவராத்திரியை முன்னிட்டு கோயிலில் சிறப்பு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு சிவன் கோவில்களில் 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிவராத்தியையொட்டி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 4 கால பூஜைகள் நடைபெற்றது. அப்போது சிறப்பு அபிஷேகம் மற்றும் பஞ்சோபசார தீபங்கள் காட்டி பூஜைகள் நடைபெற்றது. கோவில் கொடிமர மண்டபம் மற்றும் கண்ணுக்குட்டி மண்டபத்தில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் நான்கு சாமங்களிலும் சிவபூஜை நடத்தினர். இதில் விரும்புவோருக்கு சிவதீட்சையளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள நவராத்திரி கலை விழா மண்டபத்தில் இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் நேற்று முன் தினம் காலை 8 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து சிவராத்திரியான நேற்று இரவு 4 கால பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக ஒவ்வொரு கால பூஜைக்கும் பல்வேறு அபிஷேகங்கள் முடிந்து சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவராத்திரியை விளக்கும் வகையில் வேடன் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

இதுபோல் உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இரவு முழுவதும் கண் விழித்திருந்து வழிபாடு மேற்கொண்டனர். மேலும் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. முசிறி சந்திரமவுலீஸ்வரர் சமேத கற்பூரவள்ளி அம்மன், வெள்ளூர் கிராமத்தில் திருக்காமேஸ்வரர் சமேத சிவகாமசுந்தரி அம்மன், திண்ணகோணம் பசுபதீஸ்வரர், திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர், தா.பேட்டை காசி விஸ்வநாதர் சமேத காசிவிசாலாட்சி அம்மன், காருகுடி கிராமத்தில் ரேவதி நட்சத்திர தலமாக விளங்கும் கைலாசநாதர் சமேத கருணாகரவள்ளி அம்மன், மங்களம் கிராமத்தில் மங்கைபாகேஸ்வரர், திருஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர், தொட்டியம் அனலாடீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு காலபூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய விடிய கண் விழித்திருந்து சிவ வழிபாடு செய்தனர்.
ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா, நேற்று மாலை 6 மணிக்கு முதல் காலை 6 மணி வரை நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. இதில் தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். மேலும் கொரோனா காரணமாக ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரோட்டமும் நடைபெற்றது.
ஆந்திரமாநிலம் காளஹஸ்தியில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விடிய விடிய நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications