மகா சிவராத்திரி: ராமேஸ்வரம் கோவில் நாளை முழுவதும் திறந்திருக்கும் - வெள்ளிக்கிழமை தேரோட்டம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நாளை வியாழக்கிழமை மகா சிவராத்திரியன்று பகல், இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம்: மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நாளை வியாழக்கிழமை பகல், இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு வெள்ளித்தேரோட்டமும் வெள்ளிக்கிழமையன்று மகா தேரோட்டமும் நடைபெற உள்ளது.
ராமநாதசுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 5வது நாளன்று சுவாமி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் உடன் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவின் ஆறாவது நாளன்று இரவு 8 மணிக்கு மேல் சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

7 வது நாளான இன்று மாலை 4 மணிக்கு சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை வியாழக்கிழமை மகா சிவராத்திரி அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பட்டு நாள் முழுவதும் நடை திறந்திருக்கும். நாளை இரவு 9 மணிக்கு வெள்ளித்தேரோட்டம் நடைபெறும். சுவாமி அம்பாள் வெள்ளித்தேரில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

இரவு முழுவதும் நான்கு காலங்களிலும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேச ஆராதனைகள் நடைபெறும். மறுநாள் 12ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications