For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை சித்தி விநாயகர், ஷீரடி சாய்பாபா கோவில் திறப்பு - பக்தர்கள் கண் குளிர தரிசனம்

மகாராஷ்டிராவில் 8 மாதங்களுக்குப் பிறகு வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்பட்டன. பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டிருந்த கோவில்கள், சர்ச், மசூதிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா விதிமுறைகளுடன் பக்தர்கள் கோயில்களிலும் வழிபாட்டு தலங்களிலும் வழிபாடு தலங்களில் கண் குளிர தரிசனம் செய்து வருகின்றனர்.

Recommended Video

    பல்வேறு கட்டுப்பாடுகளுடன்.. ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பக்தர்கள் அனுமதி..! - வீடியோ

    மகாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் கெரோனா வரைஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அடைக்கப்பட்டன. 8 மாதங்களாகத் திறக்கப்படாத நிலையில் இன்று திறக்கப்பட்டன. மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று வழிபாடு நடத்தினர்.

    Maharashtra religious places open: Devotees dharisanam in Temple

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும மார்ச் இறுதியில் இருந்து கோவில்கள் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பல மாநிலங்களில் கோவில்கள் திறக்கப்பட்டன. மகாராஷ்டிராவில் கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தன. தற்போது மகராஷ்டிராவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனையடுத்து கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.

    நாக்பூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தெக்டி விநாயகர் கோயில், ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அதிகாலையிலேயே தெக்டி விநாயகர் கோயிலில் திரண்ட பக்தர்கள், தனி மனித இடைவெளியை கடைபிடித்து நின்று, பிள்ளையார் மற்றும் தல விருட்சத்தை தரிசனம் செய்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காலம் தொடங்கியது - பக்தர்கள் தரிசனம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காலம் தொடங்கியது - பக்தர்கள் தரிசனம்

    அதுபோலவே ஷிர்டியில் உள்ள சாய்பாபா கோயில் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இல்லாத கோயில்கள் திறக்கப்படும் நேரம் குறித்து அதிகாரிகள் முடிவு செய்யலாம். பக்தர்கள் சமூக விலகலைக் கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    பிரசித்தி பெற்ற மகிம் தர்காவிலும் இன்று முதல் ஏராளமானோர் தனி மனித இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தினர். மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

    English summary
    Religious places in Maharashtra reopened on Monday after eight months of closure due to strict Covid-19 pandemic protocols. Maharashtra was one of the last states in the country to allow religious places to reopen as part of Unlock 5.0 guidelines.While devotees have been allowed to visit religious places in Maharashtra, they will have to follow all the Covid-19 guidelines strictly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X