மகா சிவராத்திரி 2018: மிதுன ராசிக்காரர்கள் சிவனுக்கு கறும்பு சாறு வாங்கிக் கொடுங்க!
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு வாங்கித் தரவேண்டிய பொருட்களை பார்க்கலாம்.
Recommended Video

சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள சிவ ஆலயங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை விடிய விடிய நடைபெறும் அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை சிவ ஆலயங்களுக்கு சென்று பக்தர்கள் வாங்கி கொடுத்து வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் அமாவசைக்கு முந்தின நாள் சிவராத்திரியாக கொண்டாடப் படுகிறது. இன்றைய தினம் லிங்கோத்பவ காலமான நள்ளிரவு இரவின் நடு ஜாமத்தில் சுமார் இரவு பன்னிரெண்டு மணிக்கு முன்னும் பின்னும் குறைந்த பட்சம் ஒரு நாழிகை (24 நிமிடம்) சதுர்த்தசி திதி இருக்கும் நாள் மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களில் நடைபெற உள்ள நான்கு கால அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் அளித்து வருகின்றனர்.
இன்று சிவ ஆலயம் சென்று தரிசனம் செய்வதன் மூலம் பாவங்கள் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் அபிஷேகத்திற்கு வாங்கித் தரவேண்டிய பொருட்களை பார்க்கலாம்.

மேஷம்:
வீரத்திற்கு அதிபதியான செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட இந்த ராசிக்காரர்கள் வெல்லம் கலந்த நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். நினைத்த காரியம் நடக்கும்.

ரிஷபம்
சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்கள் வெண்மையான தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் பணப் பிரச்சனைகள நீங்கும்.

மிதுனம்:
புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்கள் சில லிங்கத்திற்கு கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

கடகம்:
சந்திரனை அதிபதியாக் கொண்ட இந்த ராசிக்காரர்கள் சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மந்தாரைப் பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

சிம்மம்:
சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் சிவப்பு சந்தனம் கலந்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

கன்னி:
புதனை அதிபதியாகக் கொண்ட இந்த ராசிக்காரர்கள் பாங் பால் நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

துலாம்:
சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்காரர்கள் பசும் பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்

விருச்சிகம்:
செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட இந்த ராசிக்காரர்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் இன்று சிவனை அபிஷேகம் செய்யலாம்

தனுசு
குருபகவானை அதிபதியாக கொண்ட இந்த ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்

மகரம்:
சனிபகவானுக்கு பிடித்தது எள். சனிபகவானை அதிபதியாக கொண்ட இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வில்வம் பழத்தை படைக்க வேண்டும்

கும்பம்:
சனிபகவானை ராசி அதிபதியாக கொண்ட கும்பம் ராசிக்காரர்கள் இளநீர் அல்லது கடுகு எண்ணெயால் சிவனுக்கு அபிஷகம் செய்ய வேண்டும்

மீனம்:
குருபகவானை அதிபதியாக கொண்ட மீனம் ராசிக்காரர்கள் குங்குமப்பூ பாலால் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications