Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குலசையில் மாங்கனித்திருவிழா கோலாகலம்..பேயுருவம் பெற்று கயிலாயம் சென்ற காரைக்கால் அம்மையார்

கணவன் விரும்பாத என் அழகுத் திரு மேனியை அழித்து பேயுருவம் தாருங்கள்!'' என்று ஈசனை வேண்டவே, புனிதவதியின் அழகு அழிந்து, பேயுருவம் கொண்டாள்! குலசேகரபட்டினத்தில் இது நிகழ்ந்தது என்பது நிறைய பேருக்கு தெரியாது.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: குலசேகரபட்டினத்தில் அமைந்துள்ள காரைக்காலம்மையார் பேயுருவம் பெற்ற மண்டபத்தில் மாங்கனித் திருவிழா இன்று மாலை 4.00 மணி அளவில் நடைபெற்றது. இறைவனுக்கு மாம்பழம் படைத்து வழிபட்டனர். அந்த மாங்கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் அம்மையார் காரைக்கால் அம்மையார். நான்காம் நூற்றாண்டில் தோன்றி தமிழுக்கும், சைவ சமயத்துக்கும் பெரும் தொண்டாற்றியவர். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 11 பாடல்கள், திருவிரட்டை மணிமாலை 20 பாடல்கள், அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள் என இவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவை.

மனிதகுலத்தில் பிறந்து, வளர்ந்து இறைநிலையை அடைந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் புராண மரபுபடி ஆனி பவுர்ணமியில் மாங்கனி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கையை மாற்றியது இரண்டு மாம்பழங்கள்தான். எனவேதான் இன்றைய மாங்கனி திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் இரண்டு மாம்பழங்களை படைத்து வழிபட்டு ஒன்றை பிரசாதமாக பெற்றுச் சென்றனர்.

குலசேகரப்பட்டினம் சிறப்பு

குலசேகரப்பட்டினம் சிறப்பு

குலசேகரபட்டினம் தசரா திருவிழாவிற்கு சிறப்பு பெற்ற இடம். இந்த ஊரில் மாங்கனி திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் இங்கு மாங்கனித்திருவிழா நடைபெற்றது. காரைக்கால் அம்மையார் குலசேகரபட்டினத்தில் கணவருடன் சேர நினைத்து அது இயலாமல் போகவே, பேய்க்கோலம் பூண்டார். பேய்க்கோலம் தாங்கிய அம்மையார், சித்தமெல்லாம் சிவமயமாக திகழ்ந்தார். அற்புத திருவந்தாதியும் திரு இரட்டை மணி மாலையும் பாடியருளினார். அந்த தலம் இன்றைக்கும் குலசேகரபட்டினத்தில் உள்ளது.

தெய்வீகப்பெண்

தெய்வீகப்பெண்

புனிதவதியாக பிறந்து இல்லறம் என்னும் நல்லறத்தை சிறப்பாக நடத்தி வந்தபொழுது, இவரை தெய்வீகப் பெண் என்பதை உணர்ந்த கணவன், உடனேயே இவரை விட்டு விலகி சென்று விடுகிறார். பரமதத்தர் பாண்டிய நாட்டில் குலசேகரபட்டினத்தில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு மகள் பிறக்க புனிதவதி என்று பெயர் வைத்து மகிழ்ந்தார்.

மனைவியை தெய்வமாக வணங்கிய கணவர்

மனைவியை தெய்வமாக வணங்கிய கணவர்

பரமதத்தர் குலசேகபட்டினத்தில் இருப்பது அறிந்த புனிதவதியின் காரைக்காலில் இருந்து ஓடோடு வந்தார். புனிதவதியை எதிர்கொண்டு அழைத்த பரமதத்தர், மனைவி-மகளுடன் புனிதவதியின் பாதங்களில் விழுந்து வணங்கினார். உறவினர்கள் அதிர்ந்தனர். அவர்களிடம், ''புனிதவதி மனிதப் பிறவி அல்ல; தெய்வம். நீங்களும் வீழ்ந்து வணங்குங்கள்!'' என்றார். அவரின் கருத்தறிந்த புனிதவதியார் கலங்கவில்லை.

பேயுருவம் கொண்ட அம்மை

பேயுருவம் கொண்ட அம்மை

கணவனுக்கு தேவையற்ற இந்த சதையும் அழகு, தனக்கு வேண்டாம் என இறைவனிடம் கூறி துறவறத்திலேயே யாரும் துணியாத நிலையான பேய் வடிவினை வரமாகக் கேட்டுப் பெற்றார். பேயுருவம் பெற்ற காரைக்காலம்மையார் அதன் பிறகு இறைவன் அருளால் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலையைப் பாடிய பிறகு, கயிலை மலையான் தரிசனம் காண விரும்பி கயிலைக்குச் சென்றார்.

 அம்மையே என்று அழைத்த இறைவன்

அம்மையே என்று அழைத்த இறைவன்

பனி மலையில் இறைவன் வசிக்கும் இடத்தை காலால் மிதித்து கடக்க விரும்பாமல், தலையால் நடந்து செல்ல, அதைக்கண்டு மகிழ்ந்த சிவபெருமான் 'வாரும் என் அம்மையே' என அழைத்தார். யாது வேண்டும் என்று சிவன் கேட்க அதற்கு அம்மையோ, 'பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னடியை மறவாமை வேண்டும். மகிழ்ந்து வாடி இன்னும் வேண்டும் நான் இறைவா! நீ ஆடும்போது உன்னடியின் கீழ் இருக்க வேண்டும்' என்று வேண்டினார்.

திருவாலங்காடு நடனம்

திருவாலங்காடு நடனம்

உடனே ஈசன், திருவாலங்காட்டிற்குச் சென்று தனது ஊர்த்துவ தாண்டவமதைக் காணக் காத்திருக்கச் சொல்லி அருளினார். அதோடு, ஆலங்காட்டினை அவர் வந்தடைய, வழியும் காட்டி அருளியுள்ளார். அங்கு காரைக்காலம்மையார் ஈசனின் திருநடனத்தை காணும் பேற்றினைப் பெற அது முதற்கொண்டு, ஆடவல்லானின் சிற்பத் திருமேனியின், திருவடி கீழ் பேயாரும் இடம் பெற வைப்பது சிற்ப மரபாகியது.

மாங்கனி பிரசாதம்

மாங்கனி பிரசாதம்

ஆனி பவுர்ணமி நாளில் காரைக்காலில் மட்டுமல்ல, குலசேகரபட்டினத்திலும் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது. இன்று மாலை காரைக்கால் அம்மையாருக்கு 2000 மாங்கனிகளை படையலிட்டு வணங்கி, தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருச்செந்தூர் செல்பவர்கள் குலசேகரபட்டினம் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் காரைக்கால் அம்மையார் பேய் உருவம் பெற்ற தலம் அமைந்துள்ளது. வங்கி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இல்லங்குடி என்பவர் இந்த ஆலயத்தை நிர்வாகம் செய்து வருகிறார். திருச்செந்தூர் செல்பவர்கள் குலசை சென்று காரைக்கால் அம்மையாரையும் தரிசனம் செய்யலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+