மன்மத ஆண்டு… மேஷ ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்
மன்மத வருஷ ராசி பலன்கள் அனைத்தும் பொதுவானவை. ராசியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள பலன்கள். அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக பலாபலன்கள், லக்கினம் ராசி குணாதிசயம் ஆகியவை பொருத்து ராசி பலன்கள் மாறுபடும். இந்த பொதுவான ராசிபலன்கள் ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சரிக்கும் வருட கிரகங்களான குரு, சனி மற்றும் ராகு-கேது ஆகிய கிரகங்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.
ஜாதகத்தில் சுப பலன்களை தரக்கூடிய கிரகத்தின் திசை, புத்தி, அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும். கெடு பலன்கள் குறையும்.

ஜாதக பலமும் சிறப்பாக இல்லாமல் கோசாரமும் அனுகூலமாக அமையாமல் போனால் கெடு பலன்கள் அதிகமாகும். இப்படிப்பட்ட கிரகநிலை அமையப்பெற்றவர்கள் கிரகபிரீதி, கோயில் வழிபாடு, தான, தர்ம காரியங்கள் ஆகியவற்றின் மூலம் அதிக சங்கடங்கள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
மேஷம் - ராசி பலன்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீ மன்மத வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் மேஷம் ராசி அன்பர்களே இவ்வாண்டு நடக்கவிருக்கும் சில பலன்களை பார்ப்போம்.
வீர பராகிரமம் கொண்ட மேஷராசி அன்பர்களே எதிலும் துனிச்சலும் தான் நினைத்த காரியம் சாதிக்கின்ற ஏண்ணமும் தான் நினைக்கும்படி பிறர் நடக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களே தாங்கள் பிறருக்கும் அவர்கள் எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுத்து பிறரை அலட்சியமாக எண்ணாமல் உதாசினப் படுத்தாமல் முன் கோபம் இன்றி, சலிப்புகளை பிறரிடத்தில் காட்டாமல் அவசரத்தை நீங்கி நிதானத்தை கடைபிடிக்க மற்றவர்களையும் அவர்கள் சொற்களையும் எடுத்தெறியும் எண்ணங்களை மாற்றி பொறுமையைக் கையாண்டால் தாங்கள் வாழ்வில் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெருவீர்கள்.
அஷ்டமத்து சனி
நீங்கள் செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். அற்ப ஆசைக்கு இடம் கொடுக்கதவர்கள், ஆனால் எதிலும் சட்டென்று முன்கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள், வாக்கு வன்மையும். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் மன உறுதியும் படைத்தவர்கள். பூமிக்குறிய செவ்வாய் ராசிநாதனாக உங்களுக்கு இருப்பதால் பூமி மீது உங்களுக்கு அளவற்ற ஈடுபாடு இருக்கும். உங்களுக்கு அஷ்டமத்து சனி நடப்பதால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு இருக்கலாம்.
குடும்பத்தில் குழப்பம்
தம்பதிகளுக்கு இடையே கருத்துவேறுபாடு உருவாகி பிரியும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம். பிள்ளைகள் வழியிலும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை சனி பகவான் உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்து வேறுபாடும் ஏற்படும். சிலர் பிறந்த ஊர் விட்டு வேறு ஊருக்கு செல்லும் நிலை உருவாகும். இவையெல்லாம் அஷ்டமத்து சனியின் பொதுவான பலன்களாகும்.
நான்கில் குரு
குருபகவான் நான்காம் இடத்தில் இருக்கிரார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. குரு நான்கில் இருக்கும் போது மன உளைச்சல்களையும். உறவினர் வகையில் வீண் பகைகளையும் உருவாக்குவார்.
பொருளாதாரம் உயரும்
ஆனி மாதம் 29ம் நாள் 14-07-2015ல் குருபகவான் சிம்மத்திற்கு மாறுகிறார். ஐந்தாம் இடத்தில் குரு இருக்கும் போது குடும்பத்தில் குதூகலத்தைக் கொடுப்பார். திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். புதிய வழிகளில் வருமானம் வரத்தொடங்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ராகு - கேதுவினால் நன்மை
ராகு தற்போது ஆறாம் இடமான கன்னி ராசியில் இருக்கிறார். இதனால் நன்மை கிடைக்கும் குடும்பத்தில் நிலவிக் கொண்டிருக்கும் குழப்பங்களால் பாதிப்பு வெகுவாக குறையும். ஒருவர் மனதை இன்னொருவர் புரிந்து கொள்ளும் நிலை உருவாகும். முயற்சியில் இருந்த தடைகள் அனைத்தும் படிப்படியாக விலகும். எடுத்த செயலில் வெற்றி காணலாம். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையைப் பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். கேது ராசிக்கு பன்னிரண்டாம் இடமான மீனம் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல உடல் நலம் சிறிது பாதிக்கப்படலாம். மொத்தத்தில் எதிர்காலத்தில் எல்லா நன்மைகளும் நடக்கும்.
என்ன பரிகாரம்
கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமத்தை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வீட்டில் செய்து கொள்ள நன்மை உண்டு. தினசரி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய தொழில் அபிவிருத்தி எற்படும். கோயிலில் நவக்கிரஹங்களுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய இந்தாண்டு அனைத்து நன்மையும் எற்படும்.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு












Click it and Unblock the Notifications