மார்ச் மாத ராசி பலன் 2024: அற்புதங்கள் நிகழும்.. மன அமைதிக்கு மவுன விரதம் இருக்க வேண்டியது யார்?
சென்னை: மகத்துவம் நிறைந்த மாதம் மார்ச் மாதம். மாசியும் பங்குனியும் இணைந்த மாதம். இந்த மாதத்தில் சூரியன் முதல் பாதி நாட்கள் கும்ப ராசியிலும் பிற்பகுதியில் மீன ராசியிலும் பயணம் செய்வார். நவ கிரகங்களின் பயணத்தினால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது. வேலை மாற்றம் எதுவும் ஏற்படுமா புரமோசன் கிடைக்குமா என்று பார்க்கலாம்.
10ஆம் வீட்டில் ராகு பயணம் செய்கிறார். உங்கள் ராசிநாதன் புதன் ராகு உடன் இணையப்போகிறார். மனமும் உடலும் புத்துணர்ச்சியோடு இருக்கும். வேலை மாற்றம் தொடர்பாக யோசிப்பீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறப்போகிறது. நல்ல பண வருமானம் வரப்போகிறது. உங்களின் தன ஸ்தானத்தை சுக்கிரனும் செவ்வாயும் பார்வையிடுவதால் தன வருமானம் வரப்போகிறது. பிறரோடு பேசும் போது கவனம் தேவை. அலுவலகத்தில் நிர்வாகத்தில் இருப்பவர்களை விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

அற்புதமான திருப்பங்கள் ஏற்படும். ராசிநாதன் பயணம் சாதகமாக இருப்பதால் வேலை தொழில் அமைப்புகள் நிரந்தரமாகும். மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் வாழ்க்கையில் உச்சம் பெறும் யோகங்கள் தேடி வரும். உங்கள் துறையில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். மனதில் புது புது திட்டங்களுடன் இருப்பீர்கள். உங்களைப்பற்றி வதந்திகள் பரவ வாய்ப்புள்ளது. தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
மிகச்சிறந்த நிர்வாக திறமையோடு இருப்பீர்கள். அலுவலகத்தில் புரமோசன் கிடைக்கப்போகிறது. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகலாம். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. காரணம் 8ஆம் வீட்டில் செவ்வாய் பயணம் செய்வதால் நிதானம் அவசியம். மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும்.
வெளியூர், வெளிநாடுகளுக்கு புரமோசனுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும் மாதம். பண வருமானம் அதிகரிக்கும். சனி சுக்கிரன் கூட்டணி அமைத்து பயணம் செய்வதால் பொருளாதாரத்தில் உயர்வு உண்டு. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். செல்வ வளம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. பிள்ளைகளால் நன்மைகள் அதிகரிக்கும். திருமணம் சுப காரியம் கைகூடி வரப்போகிறது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
மாத பிற்பகுதியில் செவ்வாய் இடப்பெயர்ச்சியாகி 9ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி சனியோடு இணைந்து பயணம் செய்வார். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் தெளிவு அதிகரிக்கும். இந்த மாதத்தில் முதல் 15 நாட்கள் பெரும்பாலான இடங்களில் மவுன விரதம் இருப்பது நல்லது. நெருப்பு, மின்சாதனங்களை கையாளும் போது கவனம் தேவை. மாத பிற்பகுதியில் அற்புதங்கள் நிகழப்போகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications