March matha rasi palan 2020 மார்ச் மாதம் இந்த 2 ராசிக்காரங்களும் எச்சரிக்கையாக இருங்க
சென்னை: மார்ச் மாதம் பனிக்காலம் முடிந்து வசந்த காலம் துவங்கப்போகிறது. மார்ச் மாதத்தில் மாசி மாதத்தின் பிற்பகுதியும், பங்குனி மாதத்தின் முற்பகுதியும் இணைகிறது. மார்ச் மாதம் சூரியன் கும்பம், மீனம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் குரு, கேது, செவ்வாய், மிதுனத்தில் ராகு மேஷம் ராசியில் சுக்கிரன் மகரம் ராசியில் சனி , கும்பம் ராசியில் புதன் வக்ர நிலையில் இருக்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் கடகம் மற்றும் சிம்மம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கிரகங்கள் இந்த மாதம் ராசி மாற்றம் அடைகின்றன. மார்ச் 10ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் சஞ்சரிக்கிறார். 14ஆம் தேதி சூரியன் மீனம் ராசிக்கு மாறுகிறார். தனுசு ராசியில் குரு உடன் இருக்கும் செவ்வாய் 22ஆம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார். மாத பிற்பகுதியில் செவ்வாய் மகரம் ராசியில் உச்சம் பெற்று சனியோடு இணைகிறார். குரு மாத இறுதியில் அதிசாரமாக சஞ்சரித்து மகரம் ராசியில் உள்ள செவ்வாய், சனியோடு இணைகின்றார். மாத இறுதியில் 28ஆம் தேதி சுக்கிரன் ரிஷபம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.
சூரியன் இடப்பெயர்ச்சி, செவ்வாய், சனி சேர்க்கை கிரகங்களின் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சிலருக்கு பாதிப்பும் ஏற்படும். குருவின் அதிசார சஞ்சாரமும் சில ராசிக்காரர்களுக்கு மாற்றங்களை ஏற்படுத்தும். கடகம், சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்று பார்க்கலாம்.

ராஜயோகம்
கடக ராசிக்கு மார்ச் மாதம் மாற்றங்கள் நடைபெறும். எட்டில் சூரியன் சஞ்சாரம் நிதானம் தேவை. 14ஆம் தேதிக்கு மேல் சூரியன் ஒன்பதாம் வீட்டிற்கு செல்கிறார். பணவருமானம் அதிகமாகும். வெளிநாட்டு கல்வி யோகம் வரும். பத்தில் சுக்கிரன் சுகமான வாழ்க்கை அமையும். வண்டி வாகன யோகம் அமையும். பழைய சொத்துக்களை விற்கலாம். செவ்வாய் ஆறாம் வீட்டில் இருக்கிறார். 22ஆம் தேதி மகரம் ராசியில் சனியோடு ஏழாம் வீட்டில் இணைகிறார். 30ஆம் தேதி குரு சனி செவ்வாய் உடன் குரு இணைகிறார். தர்ம கர்மாதிபதி யோகம் கிடைகிறது. ராஜயோகம் தேடி வரப்போகிறது.

படிப்பில் கவனம்
குரு பார்வையால் சந்தோஷங்கள் அதிகம் நடைபெறும். கண்டச்சனியால் ஏற்படும் தீமைகள் நீங்கும். சுப செலவுகள் வரும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் சுபகாரிய பேச்சுக்கள் நடைபெறும். இடமாற்றம் நல்ல முறையில் நடைபெறும். மார்ச் மாதத்தின் இறுதியில் வேலை செய்பவர்களுக்கு புரமோசன் தேடி வரும். இன்கிரிமென்ட் பேச்சுவார்த்தை உங்களுக்கு நன்மையில் முடியும். மாணவர்களுக்கு சோம்பேறித்தனம் ஏற்படும். இரண்டு மடங்கு கஷ்டப்பட்டு படித்து ஒருமுறைக்கு இருமுறை படித்து எழுதி பாருங்க. தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறலாம்.

சுப பேச்சுவார்த்தை நடக்கும்
திருமணம் மற்றும் வேலைக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் மாத பிற்பகுதியில் கஷ்டங்கள், சங்கடங்கள் நீங்கும். செவ்வாய் பார்வையால் திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். வரன் தேடி வரும் சிலருக்கு சுபமாக முடியும். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்ல வேலைகள் கிடைக்கும். இருக்கிற வேலைகளை விட்டு விட வேண்டாம். சுய தொழில் செய்பவர்களுக்கு சங்கடம் வரலாம். குருவும் ஏழாம் வீட்டிற்கு வந்து நீச பங்கம் அடைகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் பெண்களுக்கு நன்மைகள் நடைபெறும். குழப்பங்கள் நீங்கும். குல தெய்வ வழிபாடு சந்தோஷத்தை கொடுக்கும்.

பணப்பிரச்சினை தீரும்
சிம்ம ராசிக்கு மார்ச் மாதம் உங்க ராசிநாதன் சூரியன் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ராகு லாப ஸ்தானத்திலும் சூரியனின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், குரு, கேது சஞ்சரிக்கின்றனர். குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. பணவரவு அதிகமாகும். பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் சந்தோஷம் அதிகமாகும். பணவரவு நன்றாக இருக்கும். எதிர்பார்ப்புகள் தீரும். மாத பிற்பகுதியில் சூரியன் எட்டாம் வீட்டிற்கு சஞ்சரிப்பது சுமார்தான். கவனம் தேவை. புதன் பத்தாம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். பணப்பிரச்சினை தீரும்.

சுக்கிரன் தரும் சுகம்
மாத இறுதியில் சுக்கிரன் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். வேலையில் இருந்த பிரச்சினைகள் சிக்கல்கள் தீரும். சுக்கிரன் சஞ்சாரம் சிம்மம் ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகத்தை தரப்போகிறது. சனி, செவ்வாய், குரு ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் கோபம் கொஞ்சம் அதிகமாகும். எதையும் பொறுமையாக நிதானமாக யோசித்து முடிவு செய்யுங்கள். சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று கடவுளை வேண்டும் அளவிற்கு வந்து விடுவீர்கள். காரசாரமான பேச்சுவார்த்தைகளை தவிர்த்து விடுங்கள் சீனியர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம்.

குடும்பத்தில் குதூகலம்
வீட்டில் கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். இந்த மார்ச் மாதத்தில் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்காமல் ஒத்திப்போடுவது ரொம்ப நல்லது. மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். ஒருமுறைக்கு இருமுறை நன்றாக எழுதிப்பாருங்கள். குரு அதிசாரமாக செல்வதால் கடன் வாங்குவீர்கள். வீடு சொத்து வாங்கும் யோகம் வரும். வங்கிக்கடன் கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பெரியவர்களை ஆலோசனை செய்து முடிவு எடுங்கள். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். யாருடனும் சண்டை சச்சரவு போட வேண்டாம். அமைதியாக ஒதுங்கி போய்விடுங்கள் அதுதான் உங்களுக்கு ரொம்ப நல்லது. தினசரி சூரிய நமஸ்காரம் பண்ணுங்க கோபம் குறையும் பாதிப்புகள் நீங்கும்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications