• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று காசநோய் விழிப்புணர்வு தினம் : காசநோய் பாதிப்பை தடுக்க சந்திரனை வணங்குங்க!

By Mayura Akhilan
|

சென்னை: காசநோய் கிருமியை உலகுக்கு அறிமுகப்படுத்திய மார்ச் 24ம் தேதி, காசநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு காசநோய் ஒழிப்பில் அனைவரும் தலைவர்களாக பங்கேற்க வேண்டும் என்ற கருத்துருவை கொண்டு அனுசரிக்கப்படவுள்ளது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மனித சமூகத்தில் இருக்கிறது. சில புள்ளிவிவரங்கள் 3500 ஆண்டுகளாகவே காசநோய் பாதிப்பு மனிதர்களுக்கு ஏற்பட்டு வருவதாகக் குறிப்பிடுகிறது. சயரோகம் என்றும் எலும்புருக்கி என்றும் குறிப்பிடுகின்றனர்.

காற்றின் வழியாகப் பரவக்கூடிய இந்த நோய் 'மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்' (Mycobacterium tuberculosis) என்கிற பாக்டீரியாவால் உண்டாகிறது. இந்தியாவில் 40 சதவிகித மக்களுக்கு காசநோய் கிருமியின் தொற்று உடலில் இருக்கிறதாம். ஆனால் அது நோயாக மாறாத உள்ளுறைந்த தொற்றாக இருக்கிறதாம். இதை லேட்டன்ட் டிபி என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காசநோய் யாரை தாக்கும்

காசநோய் யாரை தாக்கும்

தொடர் இருமல், பசியின்மை, எடை குறைவு, மாலை காய்ச்சல், சளியில் ரத்தம் வருதல் போன்றவை காசநோயின் அறிகுறிகள். எச்ஐவி, நீரழிவு நோய், மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்களில் உள்ளவர்களுக்கு எளிதில் காசநோய் தாக்கும்.

நுரையீரலை தாக்கும்

நுரையீரலை தாக்கும்

காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் முறையற்ற இருமல், தும்மல் மற்றும் கண்ட இடங்களில் சளி துப்புதல் போன்றவற்றால், காற்றின் மூலம் மற்றவர்களுக்கும் அந்நோய் பரவுகிறது. நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ள யாருக்கு வேண்டுமானாலும் காசநோய் வரலாம். முடி மற்றும் நகத்தை தவிர அனைத்து இடங்களையும் காசநோய் தாக்கும். குறிப்பாக, நுரையீரலை அதிகம் பாதிக்கிறது. காசநோய் பாதித்தவர்கள் 6 முதல் 8 மாதம் வரை மருந்து சாப்பிட்டால், முற்றிலும் குணப்படுத்தலாம்.

நுரையீரல் பாதிப்பு யாருக்கு?

நுரையீரல் பாதிப்பு யாருக்கு?

தொண்டை மற்றும் நுரையீரலின் காரக கிரஹமான புதன் ஒரு ஜாதகத்தில் 6/8/12ம் பாவ தொடர்புகள், செவ்வாய், சனி, ராகு கேதுவுடன் சேர்ந்து பலமிழந்து நிற்பது போன்றவை ஜாதகருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்படும் நிலையை ஏற்படுத்துகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் தொண்டை மற்றும் நுரையீரலை குறிக்கும் மிதுன ராசி 6/8/12 தொடர்புகள் பெறுவது, மிதுனத்தில் செவ்வாய், சனி, ராகு கேது போன்ற கிரஹங்கள் நின்று அசுபத்தன்மை பெறுவது.

சந்திரன் நீசம்

சந்திரன் நீசம்

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டால் இதய நோய், நுரையீரல் நோய், வயிற்றுப்போக்கு, வாந்தியெடுத்தல், ரத்தநோய், உடலில் கட்டிகள், புற்றுநோய், தூக்கமின்மை, மனநோய், காசநோய், கருப்பை தொடர்பான நோய்கள் மற்றும் மாதவிடாய்க் கோளாறுகள் ஏற்படும். சந்திரன் பொதுவாக ஒரு ஜாதகத்தில் பாலியல் நோய்கள், தோல் நோய்கள் மற்றும் குளிர் இருமல், கபம், சின்னம்மை அல்லது தட்டம்மை, சோம்பல், மண்ணீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், மன நோய், வலிப்பு நோய், டைபாய்டு, சைனஸ், குளிர் கபசுரம் போன்றவை ஏற்படும்.

சந்திரனை வணங்கலாம்

சந்திரனை வணங்கலாம்

யாருடைய ஜாதகத்தில், சந்திரன் எட்டாம் இடத்தில் இருக்கிறதோ அல்லது விருச்சிக ராசியில், நீசம் அடைந்தாலோ இந்த நோய் அவர்களை கண்டிப்பாக ஏதாவது ஒரு வயதில் தாக்கும். இதிலிருந்து விடுபட திங்கள் கிழமைகளில், நவக்கிரகங்களில் சந்திரனை வெள்ளை மலர் கொண்டு வழிபட வேண்டும்.

திருவோண வழிபாடு

திருவோண வழிபாடு

எந்த ஒரு தீராத நோய்க்கும் உடல் சம்பத்தப்பட்ட கோளாறுகளுக்கும் தன்வந்திரி பகவானை வழிபட்டு அவரது பிராச்சத்த்தைப் பெற்று உண்டால் நிவாரணம் பெறலாம். சூரிய பகவானே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு உள்ளது. தன்வந்திரி பெருமாளை திருவோணம், ஹஸ்தம், சுவாதி புனர்பூசம் நக்ஷத்திரம், ஏகாதசி திதி ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் வழிபடுவது நல்லது.

நெல்லிப்பொடி அபிஷேகம்

நெல்லிப்பொடி அபிஷேகம்

வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கும் உற்சவர் வைத்தியராஜனுக்கும் வருகிற 27.03.2018 செவ்வாய் கிழமையில் பங்குனி மாத ஏகாதசி திதியை முன்னிட்டு, காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை நட்சத்திர தோஷங்கள் அகலவும், நாள்பட்ட நோய்கள் நீங்கவும், மன நோயிலிருந்து விடுதலை பெறவும், ஒரு கற்ப மருந்தாகத் திகழும் நெல்லிக்காய் பொடிகொண்டு மஹா அபிஷேகம் நடைபெறவுள்ளது.

நோய் தீர்க்கும் பிரசாதம்

நோய் தீர்க்கும் பிரசாதம்

நுரையீரல் சார்ந்த காசநோய் வைட்டமின் சி சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல். உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை, சிறுநீர் சம்பந்தமான நோய்கள், எலும்புருக்கி நோய் போன்ற பல நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்வந்திரி மூலவருக்கு அபிஷேகம் செய்த நெல்லிக்காய் பொடி தீர்த்த பிரசாதம் ஸ்வாமிகளின் கரங்களால் ஔஷதமாக வழங்கப்படவுள்ளது பக்தர்கள் பங்கேற்று பெற்றுக்கொள்ளலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Astrological combinations of Tuberculosis Lungs and respiratory system are ruled by Mercury; 4th house and Gemini and Cancer signs so whenever there is any evil influence on these by any strong malefic planet, it may make the person prone to T.B.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more