உங்க கைரேகை எப்படியிருக்கு? செல்வந்தராகும் யோகம் இருக்கா? - ரேகை ஜோதிடம்
கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும், சின்னங்களும் ஒருவரின் வாழ்க்கை ரகசியத்தை உணர்த்துகின்றன. ஒருவருக்கு வரக்கூடிய யோகத்தை
சென்னை: உங்கள் வெற்றி கைகளில் இருக்கும் போது கைரேகைகளில் ஏன் தேடுகிறீர்கள் என்பார்கள். கை ரேகை பார்த்து பலன் அறிவதும் ஒருவகை ஜோதிடமே. கைரேகை ஜோதிடத்தின் படி, கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் ஆகும் வாய்ப்புள்ளதா என்பதைக் காட்டுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவர் பிறக்கின்ற நேரத்தில் ஜாதகக் கட்டங்களில் கிரகங்களின் அமைப்பு எவ்வாறு இருக்கிறது என்பதைக் கொண்டே அந்த ஜாதகனின் குண இயல்புகள், வாழ்வியல் சம்பவங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டுச் சொல்வார்கள். இதே போல கைகளில் உள்ள ரேகைகளின் அடிப்படையில் கணித்து பலன்கள் கூறுவது ஒருவகை.
மனிதர்களின் கையில் உள்ள ரேகைகளில் ஆயுள் ரேகை,புத்தி ரேகை, இருதய ரேகை,குரு ரேகை,சனி ரேகை,சூரிய ரேகை,புதன் ரேகை, ஞான ரேகை, கங்கண ரேகை ஆகியவை உள்ளது. இன்றைக்கும் பல ஊர்களில் கைகளில் குச்சி வைத்து கைரேகை பார்த்து ஜோதிடம் சொல்பவர்கள் இருக்கின்றனர். மனிதர்களின் கைகளில் உள்ள ரேகைகள் தனித்துவம் மிக்கவை. ரேகையைப் பார்த்து பலன் சொல்லும் போது ஆண்களுக்கு வலது கை ரேகையும் பெண்களுக்கு இடது கை ரேகை பற்றியும் சொல்ல வேண்டும். 40வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு வலது கை பார்த்தும் ஆண்களுக்கு இடது கை பார்த்தும் சொல்ல வேண்டும்.

காதல் சொல்லும் இருதய ரேகை
கையில் உள்ள ரேகைகளில் ஆயுள் ரேகை,புத்தி ரேகை, இருதய ரேகை,குரு ரேகை,சனி ரேகை,சூரிய ரேகை,புதன் ரேகை, ஞான ரேகை, கங்கண ரேகை ஆகியவை உள்ளது. உள்ளங்கையில் காணப்படும் ரேகைகளில் இதய ரேகை முக்கியமான ஒன்றாகும். இந்த ரேகை புதன் மேட்டில் உற்பத்தியாகிச் சூரிய மேடுகளைத் தாண்டி குரு மேட்டில் முடியும். இருதய ரேகை மூலம் நமது இருதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும், இருதயத் துடிப்பு இரத்த ஓட்டம் போன்றவற்றையும் தெரிந்துகொள்ளலாம். இந்த ரேகை மூலம் அன்பு, பாசம், தயை, காருண்யம், காதல் போன்ற உணர்வுகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

தொழில் ரேகை சொல்லும் ரகசியம்
உள்ளங்கையில் மணிக்கட்டு பகுதியில் இருந்து ஒரு ரேகை சனி மேட்டை நோக்கிச் செல்லும். இதுவே விதி ரேகை அல்லது தொழில் ரேகை என்று அழைக்கப்படும். இந்த ரேகை நமது உழைப்புக்குத் தகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது. விதி ரேகை தெளிவாக அமைந்து வெட்டுக்குறி, தீவு ஏதும் இல்லாது மணிக்கட்டிலிருந்து சனி மேடு வரை செல்வது நல்ல அமைப்பு. விதி ரேகை வழக்கத்தை விட நீளமாக இருப்பவர்கள் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி. அனைத்து இலக்குகளையும் அடைந்து வெற்றிகரமானவராக திகழ்வார்கள்.

ஆயுள் ரேகை சொல்லும் உண்மை
விதி ரேகையுடன் ஆயுள், புத்தி, இருதயரேகைகளும் நன்றாக அமைந்திருந்தால், இவர்களுக்கு நல்ல தேக ஆரோக்கியமும் , புத்திசாலித்தனமும் , நல்ல தொழில் விருத்தியும் ஏற்படும். ஒளிமயமான எதிர்காலம் அமையும். ரேகைகளில் மிகவும் முக்கியமானது ஆயுள் ரேகையாகும். தெளிவாகவும், மெல்லியதாகவும், நீளமாகவும் அமைந்த ஆயுள் ரேகை, ஒருவருக்கு நல்ல தேக பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி நன்கு விலகியிருந்தால், இவர்களது தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கி எழும் ரேகைகள் சிறியதாக இருந்தால், இவர்கள் நல்ல உழைப்பு, உற்சாகம், அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பர் என்பதைக் காட்டும்.

ஆரோக்கிய ரேகை
குரு மேட்டின் அடிப்பகுதியில் ஆயுள் ரேகையை ஒட்டி ஆரம்பமாகி, உள்ளங்கையில் குறுக்காக செவ்வாய் மேடு அல்லது சந்திர மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை புத்தி ரேகை. புத்தி ரேகை நமது மூளையின் அமைப்பையும், அது வேலை செய்யும் திறனையும், நமது மனோநிலையையும் எடுத்துக் காட்டும். ஆரோக்கிய ரேகையைப் புதன் ரேகை என்று கூறுவது உண்டு. உள்ளங்கையில் உள்ள மற்ற ரேகைகளில் குறை இருந்தாலும் இந்தப் புதன் ரேகை நன்றாக அமைந்திருந்தால் நல்ல பேச்சு சாதூர்யம், சொல்வன்மை, வியாபரத்திறமை ஆகியவற்றுடன் பெரும் பணம் சம்பாதிப்பார்கள்.

செல்வந்தர் ஆகும் யோகம்
கட்டை விரலுக்கடியிலிருக்கும் சுக்கிர மேடு. ஆள்காட்டி விரலுக்கடியிலுள்ள குரு மேடு. நடு விரலுக்கடியில் சனி மேடு உள்ளது. மோதிர விரலுக்கடியிலுள்ளது சூரிய மேடு. சுண்டு விரலின்கீழ் இருக்கும் மேடு புதமேடு. சுண்டு விரலுக்கு கீழே மணிக் கட்டுக்கு மேலே இருப்பது சனி மேடு. புதன் மேட்டிற்கும், சந்திர மேட்டிற்கும் இடையிலுள்ள செவ்வாய் மேடு. குரு மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது. சூரியமேடு, புதன்மேடு இரண்டையும் இணைக்கக்கூடிய ரேகை நல்ல அமைப்பு. சமுதாயத்திற்கு ஏதாவது பயன்தரும் வகையில் ஏதாவது ஒன்றை கண்டுபிடிப்பார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications