Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2023ஆம் ஆண்டு ராசி பலன்..ஆனந்தம் ஆனந்தம் பாடும்..யாரெல்லாம் மகிழ்ச்சியில் திளைக்கப்போகிறீர்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023 புது வருடம் பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டில் யாருக்கெல்லாம் நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் யாருக்கெல்லாம் லாபம் இரட்டிப்பாகும். அதனால் யாரெல்லாம் நிம்மதியை பெறப்போகிறார்கள் என்று பார்க்கலாம். நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகின்றன என்று பார்க்கலாம்.

2023ஆம் ஆண்டில் நவ கிரகங்களின் இடப்பெயர்ச்சியும் நிகழப்போகிறது. முக்கிய நான்கு கிரகங்களான சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி வரிசையாக நிகழப்போகிறது. சனி பெயர்ச்சி ஜனவரி மாதம் நிகழப்போகிறது. குரு பெயர்ச்சி ஏப்ரல் மாத இறுதியில் நிகழப்போகிறது. ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சி நிறைய பேருக்கு நன்மை செய்யப்போகிறது.

2020ஆம் ஆண்டு முதலே பலருக்கும் உடல் நலக்குறைவு, மருத்துவ செலவுகள் ஏற்பட்டது. பலரும் கடன் பட்டு செலவு செய்திருப்பார்கள். குடும்பத்தில் பொருளாதார கஷ்டம் அதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும். எப்போது நமக்கு விடிவுகாலம் வரும் என்று ஏங்கித்தவித்துக்கொண்டிருக்கிறார்கள். நவ கிரகங்களின் சஞ்சாரம் இந்த ஆண்டு எப்படி இருக்கும். யாரெல்லாம் பண மழையில் நனைவீர்கள் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறீர்கள் என்று பார்க்கலாம். யாருக்கெல்லாம் புது வேலை கிடைக்கும்? குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படுமா? உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

 சிம்மம்

சிம்மம்

சூரிய பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. உங்களுக்கு 2023ஆம் ஆண்டு புத்தாண்டு நிறைய நன்மைகள் நடைபெறப் போகிறது. வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். 7ஆம் வீட்டில் சனி இடப்பெயர்ச்சி அடைவதால் நிறைய தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். குரு பகவான் மே மாதத்திற்குப் பிறகு பாக்ய ஸ்தானத்திற்கு செல்லும் போது குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. உங்களுக்கு நிறைய பாக்யங்கள் கிடைக்கும்.

காரிய வெற்றி

காரிய வெற்றி

ராஜ யோக கால கட்டம் என்பதால் காரிய வெற்றி அதிகரிக்கும். உங்களுக்கு மிகச்சிறந்த கால கட்டம் என்பதால் 2023ஆம் ஆண்டை பயன்படுத்திக்கொள்ளுங்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கைகூடி வரும், நிறைய ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். தெய்வ அனுக்கிரகம் கை கூடி வரும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் கைகூடும். செல்வமும் செல்வாக்கும் கிடைக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் இருநத பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. இந்த ஆண்டு மறக்காமல் குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவது நல்லது.

கன்னி

கன்னி

2023ஆம் ஆண்டு உங்களுக்கு முக்கியமான கிரகங்கள் பயணத்தை பார்த்தார் சனி பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உங்களுடைய எதிரிகள் தொந்தரவு நீங்கும். வேலை செய்யும் இடத்தில் பளுவும், மன அழுத்தமும் அதிகரிக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்கும். வேலையில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். வீடு கட்ட கடன் வாங்குவீர்கள். மே மாதம் வரை குருபகவான் பயணம் சாதகமாக உள்ளது.

திருமணம் சுப காரியம்

திருமணம் சுப காரியம்

குருவின் பார்வை கிடைப்பதால் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. அஷ்டம ஸ்தானத்தில் குருபகவான் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். எனவே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண வருமானம் தடை படும் இதனால் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் வந்து போகும். பிள்ளைகளால் செலவுகள் வந்து போகும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். எனவே குடும்ப பிரச்சினைகள் தீர குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

துலாம்

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு எதிர்பாராத சம்பவங்கள் அதிகம் நடைபெறும். 2023ஆம் ஆண்டு யோகமான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு பத்து மாதங்களுக்கு ராசியிலேயே கேது பயணம் செய்கிறார். சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5வது வீட்டில் பயணம் செய்யப்போகிறார். அதே போல குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் இருந்து ஏழாவது வீட்டிற்கு நகர்கிறார். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கப்போகிறது.

உற்சாகமான ஆண்டு

உற்சாகமான ஆண்டு

மே மாதத்திற்குப் பிறகு குருவின் பயணமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் திருமணம் நடைபெறப்போகிறது. நீண்ட நாட்களாக நினைத்திருந்த காரியங்கள் கை கூடி வரப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவன் மனைவி இடையேயான நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் குதூகலம் ஆரம்பிக்கப்போகிறது. பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. புத்திரபாக்கியம் கை கூடி வரப்போகிறது. மொத்தத்தில் 2023ஆம் ஆண்டு நன்மைகள் நிறைந்த ஆண்டாக நலமான ஆண்டாக அமைந்துள்ளது.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் ஒரு வளமான ஆண்டாக இது அமையும். பெரிய அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. சுக ஸ்தானத்திற்கு சனிபகவான் வரப்போகிறார். சச மகா யோகம் கைகூடி வரப்போகிறது. சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. 5 மற்றும் ஆறாம் வீடுகளில் குரு பகவான் பயணம் செய்யப்போகிறார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைகிறது. மே மாதத்திற்கு முன்பாக திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசி முடிக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தரப்போகிறது.

போட்டி தேர்வுகளில் வெற்றி

போட்டி தேர்வுகளில் வெற்றி

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உங்களின் படைப்புத்திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனை மூலம் லாபம் அதிகரிக்கும். உறவினர்களால் சில பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது பண விசயத்தில் கவனம் தேவை. அரசு போட்டி தேர்வுகளை எழுதுங்கள் வெற்றி கிடைக்கும். வம்பு வழக்குகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள். முருகப்பெருமான் அருள் கிடைக்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்க இந்த ஆண்டு திருச்செந்தூர் சென்று வழிபட்டு வாருங்கள் காரிய வெற்றி உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+