நவம்பர் மாதம் ராசி பலன் 2020: குரு பார்வையால் உங்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்

நவகிரகங்களின் பார்வை, சேர்க்கை, சஞ்சாரத்தின் அடிப்படையில் நவம்பர் மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவம்பர் மாதத்தில் குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படியும் திருக்கணித பஞ்சாங்கப்படியும் நடைபெறுகிறது. இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தின்படி கடகம், சிம்மம்,கன்னி, துலாம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கும் குருவின் பார்வையால் யோகங்களும், அதிர்ஷ்டங்களும் தேடி வரப்போகிறது. இந்த மாதம் பல முக்கிய பண்டிகைகள் உள்ளன. தீபாவளி, கந்த சஷ்டி விரதம், திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் நடைபெறுகிறது பண்டிகைகளை இந்த நான்கு ராசிக்காரர்களும் உற்சாகத்துடன் கொண்டாட தயாராகுங்கள்.

நவகிரகங்களின் நாயகன் சூரியன் தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதத்தில் பாதி நாட்களும் கார்த்திகை மாதத்தில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் நீச நிலையிலும் விருச்சிக ராசியில் பாதி நாட்களும் சூரியன் சஞ்சரிக்கிறார். கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியை பார்த்தால் குரு தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சனிபகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்க, செவ்வாய் மீனம் ராசியில் வக்ர நிலையில் இருந்து நேர்கதிக்கு மாறுகிறார். ரிஷபத்தில் ராகு விருச்சிகத்தில் கேது சஞ்சரிக்கின்றனர்.

சுக்கிரன் கன்னி ராசியில் நீசமடைந்திருக்கிறார் மாத பிற்பகுதியில் துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். புதன் துலாம் ராசியிலும் மாத பிற்பகுதியில் விருச்சிகம் ராசிக்கும் மாறுகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் நவம்பர் மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிறைய நல்லது நடைபெறும். சுக ஸ்தானத்தில் சூரியன் நீசமடைந்திருக்கிறார் மாத பிற்பகுதியில் சூரியன் ஐந்தாம் வீட்டிற்கு இடம் மாறுவார். இந்த மாதத்தின் பிற்பகுதியில் குருவின் பார்வை உங்களுக்கு கிடைப்பதால் யோகங்கள் தேடி வரும். தடைகள் நீங்கும். ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் நிறைய நல்லது நடக்கும். குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் உள்ள ராகுவின் மீது விழுகிறது. சனி ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் கண்டச்சனி காலம். சனி பார்வை சந்திரன் மீது விழும் போது சின்னச் சின்ன பாதிப்புகள் வரும் எச்சரிக்கை தேவை. செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வேலை தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். தொழில் கட்டுமான வேலைகள் நன்றாக நடைபெறும். சிவில் இன்ஜினியர்களுக்கு லாபம் வரும். புதன் சுக்கிரன் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளது. நான்காம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் புதிய கலைகளை கற்றுத்தேர்வார்கள். புதன் இயல்பை மாற்றிக்கொள்ளும். மூன்றாம் வீட்டில் சுக்கிரன் நீச்சமடைந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவுக் கட்டுப்பாடு அவசியம். 17ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் இடமாற்றமாகி ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். நன்மைகள் நடைபெறும். கேது ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் சின்ன சின்ன பயம் வரும். சூரியனும் மாத பிற்பகுதியில் கேது உடன் இணைவதால் பாதிப்புகள் ஏற்படலாம். திருமண விசயங்களை குரு பெயர்ச்சிக்கு பிறகு பேசலாம் நன்மைகள் நடைபெறும். வேலை கிடைக்கும் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். அதிஷ்டமும் நன்மைகளும் நிறைந்த மாதம். குரு பார்வை கோடி நன்மைகளை தரப்போகிறது.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, உங்க ராசிநாதன் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் நீச்சமடைந்திருக்கிறார். மாத பிற்பகுதியில் நான்காம் வீட்டில் கேது உடன் இணைந்து சஞ்சரிப்பார். மனதளவில் சில சஞ்சலங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடையே வீண் வாதங்கள் வரலாம். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. அம்மா அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். மருத்துவ செலவுகள் வரலாம் எச்சரிக்கையாக இருங்கள். குரு நீசம், சுக்கிரன் நீசம், சூரியன் நீசம் வலுவிழந்த கால கட்டம் இது. எந்த பிரச்சினைகளையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். இதற்கு மேல் எதையும் பெரிதாக அனுபவிக்கப் போவதில்லை என்ற மனநிலைக்கு ஏற்கனவே வந்திருப்பீர்கள். மாணவர்கள் புதிதாக கற்றுக்கொள்ளுங்கள். சனி பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் இடையூறுகள் நீங்கும் எதிரிகள் தொல்லைகள் நீங்கும். திருமணம் சுப காரியங்கள் பற்றி இப்போது பேச வேண்டாம். புதிய முயற்சிகள் எதுவும் இந்த காலத்தில் செய்ய வேண்டாம். கணவன் மனைவி உறவில் சண்டைகள் வந்தால் விட்டுக்கொடுத்து செல்லவும். செவ்வாய் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நெருப்பு, மின்சார விசயங்களில் கவனம் தேவை. வாகனங்களில் நிதானமாக செல்லவும். இந்த மாதம் கவனமாகவும், விழிப்புணர்வோடும் இருங்க. கோதுமை தானம் செய்யுங்கள். தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

கன்னி

கன்னி

புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த மாதம் தடைகள் நீங்கி அதிர்ஷ்டம் ஏற்படும். காரணம் குரு பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. திருமணம் தொடர்பாக வரன் பார்க்கத் தொடங்கலாம். செவ்வாய் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்க சனியின் பார்வை ஏழாம் வீட்டின் மீது விழுவதால் உங்களுக்கு கோபம் அதிகமாகும் பொறுமை அதிகம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்துங்கள். மாத பிற்பகுதியில் குரு சனியுடன் இணைந்து சஞ்சரிப்பதால் பாதிப்புகள் நீங்கும். சனியின் பாதிப்பை குரு கட்டுப்படுத்துவார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் திருமண முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெறும். ராகு சுக்கிரன் வீட்டில் சஞ்சரிக்கிறார் அதிக பணவரவு வரும், தொழில் வியாபாரம் லாபமடையும். வேலையில் மாற்றம் ஏற்படும். நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். மாணவர்கள் புதிய விசயங்களை கற்றுக்கொள்ளலாம். புத்திர பாக்கியம் கை கூடி வரும் மாத பிற்பகுதியில் சந்தோஷம் அதிகமாகும்.

துலாம்

துலாம்

உங்களுடைய ராசி நாதன் சுக்கிரன் 12ஆம் வீட்டில் நீசமடைந்திருக்கிறார். மாத பிற்பகுதியில் சுக்கிரன் மூலத்திரிகோணம் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். நிறைய சுப விரைய செலவுகள் ஏற்படும், திருமண செலவுகள் வரலாம். ராசியில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உயர் கல்வி யோகம் தேடி வரும். 2ல் கேது சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகளிடையே இருந்த ஈடுபாடு குறையும். சண்டை சச்சரவுகள் நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வேலையில் சிலருக்கு சிக்கல்கள் வரலாம் எச்சரிக்கையும் கவனமும் தேவை. புதிய வாய்ப்புகள் தேடி வந்தால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். தேவையில்லாத பேச்சுக்களை கட்டுப்படுத்துங்கள். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. கூட்டு தொழில் விவகாரங்களில் கவனம் தேவை. பயணங்களால் நன்மைகள் நடைபெறும். வெளிநாடு செல்பவர்களுக்கு விசா பிரச்சினைகள் நீங்கும். மாத பிற்பகுதியில் 16ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் உங்க ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து சஞ்சரிக்கும் காலத்தில் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+