ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50-க்கு கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு? தாங்குமா தமிழ்நாடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில் பற்றாக்குறையை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50 க்கு வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் முதல் 2027 மே வரை உச்ச நெரத்தில் மட்டும் தேவையான 2,100 மெகாவாட் மின்சாரம் ஒரு யூனிட் ரூ.41.50 க்கு கொள்முதல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒப்பந்தப் புள்ளியில் ரூ.37.50-க்கு கொள்முதல் செய்த மின்சார வாரியம் இம்முறை ரூ.41.50-க்கு கொள்முதல் செய்கிறது.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. உச்சபட்சமாக சென்னை தலைமை செயலகத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காற்றாலை மின் உற்பத்தி குறைவு, மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் போதிய அளவு கிடைக்கவில்லை என தவெக அரசு கூறி சமாளித்து வந்தது.

Tamil Nadu Govt Decides procures one unit of electricity for Rs 41 50 in the open market

மின் தட்டுபாட்டை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரத்தை அதிகபட்சமாக ரூ.37.50 வரை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தது. ஒரு யூனிட் ரூ. 37 எனும் விலையில் சுமார் 1,000 மெகாவாட் மின் கொள்முதல் செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

மின்வாரியம் பெரும் இழப்பை சந்திக்கும் என்றும் இதனால், ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் அறிவுறுத்தின. ஒரு யூனிட் மின்சாரம் தமிழக வரலாற்றில் இல்லாத உச்சமாக அதிக தொகைக்கு வாங்கியதில் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகளும் விமர்சித்தன. ஆனால், கியாஸ் மின் உற்பத்தி என்பதால் ஒரு யூனிட் மின்சாரம் விலை அதிகமாக இருப்பதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி ராஜஸ்தானில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46க்கு வாங்குவதாகவும் கூறியிருந்தார். தமிழ்நாட்டில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.37. 50-க்கு கொள்முதல் செய்வது தொடர்பாக எழுந்த சலசலப்புகளே அடங்காத நிலையில், தற்போது ரூ.41.50 க்கு மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.

டிசம்பர் மாதம் முதல் மே 2027 வரை பீக் நேர மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஒரு யூனிட் ரூ.41.50 விலையில் 2,100 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+