அக்டோபர் மாத ராசி பலன் 2020: மேஷம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாத ராசி பலன்கள்
அக்டோபர் மாதம் கிரங்களின் சஞ்சாரம் மற்றும் கூட்டணி, கிரக பார்வையை பொறுத்து மேஷம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், பரிகாரங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
சென்னை: அக்டோபர் மாதத்தில் மேஷம் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியை போன்றவை சாதகமாக இருப்பதால் நிறைய நன்மைகள் நடைபெறப் போகிறது. லட்சுமி கடாச்சம் நிறைந்த மாதமாக இருப்பதால் செல்வ வளம் பெருகும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். அக்டோபர் மாதத்தில் துன்பத்தை தொலைத்து விட்டேன் என்று பாடினாலும் ஆச்சரியமில்லை.
அக்டோபர் மாதம் அற்புதமான மாதம் கன்னி மாதம் பாதி நாட்களும், துலாம் மாதம் பாதி நாட்களும் இணைந்தது. புரட்டாசி மாதம் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் ஐப்பசியில் துலாம் ராசிக்கு மாறுகிறார். சூரியன் துலாம் ராசியில் நீச்ச நிலையில் சஞ்சரிப்பார். சூரியனின் நேரடி பார்வை மேஷம் ராசிக்கு மாத பிற்பகுதியில் கிடைக்கும்.
அக்டோபர் மாதம் மற்ற கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் கன்னி மற்றும் துலாம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் மேஷம் ராசியில் இருந்து வக்ரகதியில் மீனம் ராசிக்கு பயணம் செய்கிறார். ரிஷபத்தில் ராகு சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் சுக்கிரன் பயணம் செய்கிறார் 23ஆம் தேதி கன்னி ராசிக்கு வருகிறார். கன்னி ராசியில் உள்ள சூரியன் 17ஆம் தேதி வருகிறார். புதன் துலாம் ராசியில் இருந்து வக்ரகதியில் கன்னி ராசிக்கு வருகிறார். விருச்சிகத்தில் கேது இருக்க தனுசு ராசியில் குரு, மகரம் ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. இந்த கிரகங்களின் மாற்றம் கூட்டணியால் மேஷம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

அள்ளித்தரும் சுக்கிரன்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களுடைய செல்வ வளம் பெருகும். சுக்கிரன் உங்களுக்கு அள்ளிக் கொடுப்பார். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். காதல் திருமணம் மனதிற்கு பிடித்தது போல அமையும். சுபிட்சங்கள் நிலவும். பொருளாதார வளம் நன்றாக இருக்கும். ஐந்தில் சுக்கிரன் இருப்பது மகாலட்சுமி யோகத்தை கொடுக்கும். சுப காரிய செய்திகள் தேடி வரும். கொடுக்கும். தினமும் குத்துவிளக்கு ஏற்றி வழிபடுங்கள்.

நிதானம் அவசியம்
மேஷம் ராசியில் ராசிநாதன் செவ்வாய் வக்ரமடைந்து சஞ்சரிக்கிறார். உணர்ச்சி பூர்வமான முடிவுகளை எடுக்காதீர்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். திடீர் முடிவுகளை எடுத்து விட்டு பின்னார் வருத்தப்பட வேண்டாம். தியானம் செய்யுங்கள் எந்த முடிவையும் யோசித்து எடுங்கள். எதையும் நேருக்கு நேராக பேசி விடுவீர்கள் எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை இழந்து விட வேண்டாம் விளைவுகள் விபரீதமாகிவிடும்.

பிரச்சினைகளை சமாளிங்க
செவ்வாய் வக்ரமடைந்து மீனம் ராசிக்கு போகும் அதே நேரத்தில் மகரத்தில் உள்ள சனியின் பார்வை செவ்வாய் மீது விழுகிறது. வேலையில் எந்த பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்க பழகுங்கள். சகிப்புத்தன்மையோடு இருங்க, புதிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு வெற்றி
ராகு வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் நிதானமாக பேசுங்கள். புதன் ஏழாம் வீட்டில் இருந்து உங்க ராசியை பார்க்கிறார். ஆறுக்குடைய புதன் ஏழாம் வீட்டில் இருப்பதால் நிறைய சூழ்ச்சிகள் வரும் வாழ்க்கைத்துணையின் மூலம் சந்தோஷம் அதிகரிக்கும். மாணவர்கள் தெளிவான முடிவுகளை எடுப்பது நல்லது. உழைப்புதான் வெற்றியை தேடித்தரும். நல்ல சிந்தனைகள் அதிகரிக்கும்.

அவசரம் வேண்டாம்
பெண்களுக்கு வெற்றிகள் தேடி வரும். பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால் உங்க பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்படும். பெண்கள் சுய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். வேலையில் சிலருக்கு சங்கடங்கள் வரலாம். வேலை மாறலாமா என்ற எண்ணங்கள் வரலாம் யோசித்து முடிவு பண்ணுங்க.

கடன் வாங்க வேண்டாம்
எந்த விசயத்திற்காகவும் கடன் வாங்க வேண்டாம். மன குழப்பங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திருப்பாவை படித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கும் நன்மைகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நிம்மதிகள் நிறைந்த மாதமாக அக்டோபர் மாதம் அமைந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications