உச்சம் பெற்ற சூரியனை செவ்வாய் பார்க்கும் போது கொரோனா தீவிரம் குறையும் - ஜோதிடர் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக அளவில் புதிய வைரஸ் கிருமி ஒன்று மக்களை தாக்கும் என விகாரி வருடத்திய ஆற்காடு வாக்கிய பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அது போலவே கடந்த நவம்பர் இறுதியில் சீனாவில் உற்பத்தியான கொரோனா வைரஸ் நோய் கிருமி இப்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை பல ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தாக்கம் மக்களின் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது உலக பொருளாதாரத்தையும் பதம் பார்த்து வருகிறது. மக்களை முடக்கி வீட்டுக்குள் உட்கார வைத்து விட்ட இந்த கொரோனா வைரஸ் தனுசு ராசியில் ஆறுகிரக சேர்க்கையின் போது நிகழ்ந்த சூரிய கிரகணத்தினால் உருவாகி உயிர்ப்பலி வாங்கி வருவதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இந்த நோயை பற்றி கடந்த ஆண்டே பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் உலக ஜாதகம் விகாரி வரு‌ஷம் ராஜா-சனி, மந்திரி-சூரியன் சூரியனுக்கு மகன் சனி இருவருக்கும் பகை. குருவுடன் சனி தனுஷில் இணைந்து பிரம்மத்தி தோ‌ஷம் பெற்றதாலும், 7ஆம் பார்வையாக புதன் வீட்டை பார்ப்பதாலும் மிதுன ராசியில் புதன் வீட்டில் ராகு பகவான் இருப்பதாலும், இந்த புதிய வைரஸ் நோய் உருவாகியுள்ளது. மேலும் மகர சங்கராந்தி புரு‌ஷர் பெண் கழுதை வாகனத்தில் வந்ததால் விலங்குகளால் புதிய வைரஸ் நோய் உற்பத்தியாகியுள்ளது. இது பற்றி மகர சங்கராந்தி பலன்களில் நாம் ஏற்கனவே எழுதியுள்ளோம்.

இத்தகைய உலக ஜாதக பலன் மாற்றமே புதிய நோய் உருவாவதற்கு ஒரு காரணம். இந்த புதிய வைரஸ் நோயானது வடகிழக்கு திக்கில் உருவாகி மேற்கு திக்கு வழியாக தமிழ்நாட்டிலும் நுழையும். இங்கும் பரவும். ஆனால் பாதிப்பு இருக்காது. இன்னும் சில நாட்களில் மகரம் ராசியில் செவ்வாய் உச்சம் பெற்று அமரப்போகிறார். அங்கிருந்து மேஷத்தில் உச்சம் பெற்ற சூரியனை பார்க்கும் போது கொரொனாவின் தீவிரம் குறையும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

கொள்ளை நோய்களுக்கு காரணம்

கொள்ளை நோய்களுக்கு காரணம்

கடந்த டிசம்பர் மாதம் தனுசு ராசியில் சனி குரு கேது சேர்ந்திருக்கும் போது சூரியன், புதன் இணைந்தது. அப்போது சந்திரனும் சேர்ந்தார். டிசம்பர் 25 இரவு முதல் 27 இரவு வரை 6 கிரகங்கள் சேர்ந்திருந்தன. அப்போது நிகழ்ந்த சூரிய கிரகணமும் உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் பயந்தது போல எதுவுமே நடக்கலையே என்று பலரும் நினைத்த நேரத்தில் புதிய கொரோனா வைரஸ் சீனாவில் உற்பத்தியாகி கொத்துக்கொத்தாக உயிர்களை பலிவாங்கிக்கொண்டிருக்கிறது.

கொரோனா தாக்குதல்

கொரோனா தாக்குதல்

கொரோனா வைரஸ் சாதாரண சளி இருமல் என்றுதான் முதலில் உடம்பிற்கு நுழைந்து படிப்படியாக பதம் பார்க்கிறது. 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை எந்த எபெட்டும் காட்டாது அப்புறம்தான் தனது ஆட்டத்தை ஆரம்பிக்கிறது கொரோனா. வைரஸ் கிருமிகள் நுரையீரலைத் தாண்டி, ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் பரவிவிடும் ஆபத்து இருக்கிறது. இதனால், அதிகக் காய்ச்சல் ஏற்படும். ஆரம்பத்தில் சாதாரண சளித் தொந்தரவு போலத் தோன்றினாலும், தொடர்ந்து காய்ச்சல், இருமல், நெஞ்சு வலி, மூச்சுவிடுதலில் சிரமம் ஆகியவை ஏற்பட்டு, கிருமிகளின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல் போய், பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கவலைக்கிடமாக்கிவிடும்.

வைரஸ் பாதிப்பின் அறிகுறி

வைரஸ் பாதிப்பின் அறிகுறி

கொள்ளை நோய் பரவி வருகிறது என்றால் மரம், விலங்குகளை வைத்து நாம் கணித்து கொள்ளலாம். முதலில் வேப்ப மரத்தை நோய் தாக்கும். அதன்பின் அரச மரம், புங்க மரத்தையும் நோய் பீடிக்கும். அதன் பிறகு விலங்குகளில் நாய்களை முதலில் தாக்கும். நாய்களுக்கு தோல் நோயை உருவாக்கும். இதெல்லாம் வைரஸ் பரவுவதற்கான அறிகுறி. அதன் பின்னர் தான் மனிதனை தாக்கி உயிரை குடிக்கிறது. காற்றில் வரும் வைரசை வேப்பமரம் முழுமையாக உள்வாங்கி இழுத்து பூமிக்குள் தள்ளிவிடும். இதனால் நோய் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

செவ்வாய் மகரத்தில் உச்சம்

செவ்வாய் மகரத்தில் உச்சம்

பங்குனி 9ஆம் தேதி மகரம் ராசியில் செவ்வாய் உச்சமடைகிறார். 16ஆம் தேதி குரு பகவானும் நீசம் பெற்று மகரத்தில் இணைகிறார். 25ஆம் தேதி மீனம் ராசியில் புதன் நீசம் அடைகிறார். சித்திரை 1ஆம் தேதி சூரியன் மேஷம் ராசியில் உச்சமடைகிறார். அப்போது உச்சம் பெற்ற செவ்வாயின் பார்வை மேஷத்தில் உச்சம் பெற்று அமரும் சூரியன் மீது விழுகிறது. இதனால் ராஜயோகம் கூடி வரும்.

கொரோனா கட்டுப்படும்

கொரோனா கட்டுப்படும்

செவ்வாய்கிழமை நாளில் உச்சம் பெற்ற செவ்வாய் பகவானின் பார்வை உச்சம் பெற்ற சூரியனுக்கு கிடைப்பதால் வைரஸ் நோய்கள் குறையும் அன்றிலிருந்து நோய் தாக்கம் படிப்படியாக குறையும் ஜூன் மாதத்திற்குள் கொரோனா வைரஸ் நோய் கட்டுப்படுத்தப்படும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

ஆரோக்கியமான உணவுகள்

ஆரோக்கியமான உணவுகள்

வெள்ளை அணுக்கள் நம் உடம்பில் ராணுவம் போல செயல்படும். அது சரியாக இருந்தால் எந்த நோயும் உடம்பிற்குள் அண்டாது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களைத்தான் இந்த வைரஸ் எளிதில் தாக்குகிறது. உடம்பில் ஏற்கனவே நோய் இருப்பவர்களைத்தான் தாக்குகிறது கொரோனா எனவே சத்தான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள் எந்த நோயும் எதுவும் செய்யாது.

குருவின் பலம்

குருவின் பலம்

குரு ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை பெற்றிருந்தால் தொண்டை சம்பந்தமான நோய்கள்,காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல் தொடர்பான வியாதிகள் ஏற்படும். குருவின் காரகத்துவம் கொண்ட உணவுகளான மஞ்சள் நிற வாழைப்பழம், உலர் திராட்சை, பப்பாளி, ஆரஞ்சி, அன்னாசிபழம் போன்றவைகளை சாப்பிட நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும் குருவின் பலன் கூடும்.

துளசி செடி

துளசி செடி

புதிய வகையான வைரஸ் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வீட்டின் முன்புறமோ அல்லது பின்பக்கத்திலோ துளசிசெடி வளர்க்க வேண்டும். கருந்துளசி வளர்த்தால் மிகவும் நல்லது. எந்த விதமான நோய்களில் இருந்தும் பாதுகாத்து கொள்ளலாம். கருந்துளசி, சீரகம், மிளகு, சுக்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். துளசியில் பச்சை கற்பூரம், ஏலக்காய் நாட்டு சர்க்கரை கலந்து குடிக்கலாம் எந்த நோயும் பாதிக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+