அமாவாசை, நவராத்திரி..சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 13 நாட்களுக்கு அனுமதி..குட்நியூஸ் சொன்ன வனத்துறை

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்:சதுரகிரி மலைக்கோயிலுக்கு புரட்டாசி அமாவாசை, நவராத்திரி விழாவுக்காக பக்தர்கள் 13 நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம்; மழை பெய்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சூரியன் கன்னி ராசிக்கு செல்லும் புரட்டாசி மாதம், எமதர்மராஜன் நமது முன்னோர்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள். பவுர்ணமி முடிந்து பிரதமை முதல் புரட்டாசி அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நாம் கொடுக்கும் தானங்களை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

புரட்டாசி மாதம் எமனின் கோரைப்பற்கள் வெளியே தெரியும் மாதமாக இருப்பதால் புரட்டாசி அமாவாசை அன்று பிதுர்பூஜை செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் எமனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும். இறுதி காலத்தில் எம பயம் இருக்காது எனப் புராணங்கள் கூறுகின்றன. எனவேதான் மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க சிறப்பு வாய்ந்த அமாவாசையாக கடைபிடிக்கப்படுகிறது.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மழை காலங்களில் ஓடைகளில் வெள்ளம் செல்வதால் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு வருகிற 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 26ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

பகல் நேரங்களில் மட்டும்

பகல் நேரங்களில் மட்டும்

பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

நவராத்திரி விழாவிற்கும் அனுமதி

நவராத்திரி விழாவிற்கும் அனுமதி

வருகிற 26ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கப்படுவதால் நவராத்திரி திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நாளை 23ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரைக்கும் பக்தர்கள் சதுரகிரி சென்று மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளனர்.

என்னென்ன கட்டுப்பாடுகள்

என்னென்ன கட்டுப்பாடுகள்

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+