மிதுன ராசிக்கு 2025 இல் அள்ளிக் கொடுக்கும் குரு பகவான்.. என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
புத்தாண்டு பலன் 2025: புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 22 நாட்களே உள்ளன. வரும் புத்தாண்டு புதுமைகளைச் செய்யும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே பலருடைய ஆசையாகவும் இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு என்னென்ன நற்பலன்களைத் தரப் போகிறது. எந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்... (Puthandu rasi palan for Mithunam)
மிதுன ராசிக்காரர்கள் நிறைய தொழில் தொடர்பான பிரச்னைகளை சந்தித்திருப்பார்கள். வேலைகளில் மிகுந்த அலைச்சல்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால், வரப்போகும் 2025 ஆம் ஆண்டு தொழில் ஸ்தானத்தில் அசாதாரண வெற்றியைக் கொடுக்கப் போகிறது. மிதுன ராசிக்காரர்களுக்கு நிலையான வேலை அமையும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உங்களை யாராலும் அடிச்சுக்கவே முடியாது. (New year rasi palan 2025)

வேலையில் சேர்ந்தால், பணம் சேரும், பணம் சேர்ந்தால் மனத்திடம் பிறக்கும். சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க வேண்டும். எஃப்டி, எஸ்ஐபி போன்றவற்றில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். தொழில் ஸ்தானம் என்பது பத்தாமிடத்தில் சேர்கிறது. பத்தாமிடத்துக்குரிய காரகத்துவம் சனியாக இருக்கிறது. அந்த சனி கர்மாவுக்கான காரகமாக இருக்கிறது. அந்த சனி விரைய ஸ்தானத்தில் 12 இடத்தில் அமர்கிறது.
உங்களுடைய ராசி, லக்னத்தில் இருந்து பார்க்கும்போது தொழிலில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும். சிறிய கடை வைத்திருந்தால், அதன் கிளைகளை விரிவுபடுத்த உங்களுக்கு தோன்றும். அனைத்து தொழில்களையும் விரிவுபடுத்த வேண்டும் என்று தோன்றும். உங்களுக்கு நிச்சயமாக அந்த எண்ணங்கள் கைகொடுக்கும். மிதுன ராசிக்காரர்கள் தைரியமாக லோன் வாங்கிக் கூட தொழிலை விரிவுபடுத்தலாம். கண்டிப்பாக நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும்.
மாமியாரின் உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். தர்மத் திரிகோணத்தில் 9 ஆம் இடம் பாக்கிய ஸ்தானத்தில் ராகு வந்து அமர்ந்திருக்கிறது. அப்பாவுடைய பாட்டானார் அல்லது தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். மிதுன ராசிக்காரர்கள் நிச்சயமாக அடுத்த ஆறு மாதத்துக்குள் துபாய், அரபு நாடுகள் அல்லது மலேசியாவுக்கு வேலைக்காகச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
குருவின் பார்வை ஐந்தாம் இடத்தில் துலாமில் விழுவதால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக குழந்தை வரத்துக்காக காத்திருப்பவர்களுக்கு நற்செய்திகள் வந்து சேரும். திருமண வரன்கள் கைகூடி வரும். வீட்டில் அனைத்து சுபகாரியங்களும் தொடர்ந்து வேகவேகமாக நடக்கும். எதிர்பாராத சங்கடங்களில் இருந்து எல்லாம் வெளியில் வருவீர்கள்.
இவ்வளவு நாள் செய்த தவறுக்கு என்ன காரணம் என்றே தெரியாமல் இருந்தவர்களுக்கு இனி தெரியவரும். ஒன்பது, மூன்றுக்குரிய பாவங்களில் ராகு, கேது உட்காரும்போது மதிநுட்பம் அதிகரிக்கும். அதனால், தவறு நேரும் இடங்களை கண்டறிவீர்கள். மூன்றாம் இடம் என்பது மூக்கு, தொண்டை, வாயை குறிக்கும்.
அதில் கேது உட்காரும்போது இடது காது தொடர்பான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
தொட்டது துலங்கும்: ஆன்மிகத்தில் உங்களுக்கு நாட்டம் அதிகரிக்கும். மிதுனத்தைப் பொருத்தவரை இனி டாப் கிளாசில் இருப்பீர்கள். சனியினுடைய மாற்றம் சூப்பராக உள்ளது. சனியினுடைய பார்வை பலம் 3, 7, 10க்குரிய பாவங்களில் வேலை செய்யும். இப்போது சனி 3, 6, 10 இல் உட்காரும்போது அபரிமிதமான வெற்றியைக் கொடுக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு பத்தாம் இடத்தில் சனி அமர்ந்துள்ளதால் அருமையான ஆண்டாக இருக்கும். தைரியமாக அனைத்தையும் செய்யலாம். மிதுன ராசிக்காரர்களுக்கு நரம்பு பாதிப்பு, தோல் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.
தொழில்: குரு வீட்டில் இருக்கக்கூடிய சனி காலபூஷனுக்கு 12 ஆம் வீடு. மிதுனத்தில் இருந்து பார்த்தால் பத்தாம் வீடு. இன்வெஸ்மென்ட் பேங்கிங்கில் இருக்கக் கூடியவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடுகள் தொடர்புடைய வங்கிப் பணிகளில் உள்ளவர்கள், குழந்தைகள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நன்மை பயக்கும்.
மாணவர்கள்: லக்னத்தில் குரு வரும்போது புதனுடைய வீட்டில் இருக்கும்போது புத்திக் கூர்மை அதிகரிக்கும். குருவின் உபதேசங்களை வாங்கிக் கொள்வது நல்லது. எந்த விஷயத்தை குரு கூறினாலும் பதிவு செய்து கொள்வது நல்லது. மாணவர்களுக்கு குரு லக்னத்தில், ராசியில் வருவதால் பெரிய ஏற்றத்தை தரும். இரவு நேரத்தில் படிப்பது நல்ல பலன்களைத் தரும்.
பரிகாரங்கள்: குருவாயூருக்குச் சென்று நெய் தானம் செய்வது நல்லது. இல்லையெனில், வீட்டின் அருகில் இருக்கக்கூடிய பெருமாள், கிருஷ்ணர் கோயிலில் பசு நெய் தானம் செய்வது நல்லது. ரொம்ப பெரிய பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் இருந்தால், புதன்கிழமைகளில் ஒரு வேளை மட்டும் சாப்பிடலாம். உபவாசம் இருந்து பெருமாளை வழிபட்டால் பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். 100 சதவீதத்துக்கு 90 சதவீதம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். (New year rasi palan for mithunam).
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications