புதையல் யோகம்.. திடீர் கோடீஸ்வரர் ஆகும் அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும்... ஜாதகத்தை செக் பண்ணுங்க
சென்னை: ஒருவரின் ஜாதகத்தில் நவ கிரகங்களின் சேர்க்கை யோகத்தை கொடுக்கும். அவனுக்கென்ன யோகக்காரன் என்று சொல்வார்கள். திடீர் கோடீஸ்வரர் ஆகும் அதிர்ஷ்டசாலிகள் யார்? புதையல், லாட்டரி, பங்குச்சந்தை மூலம் யாரெல்லாம் கோடீஸ்வரர் ஆவார்கள் என்றும் அதற்கு ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்றும் பார்க்கலாம்.
கோடீஸ்வர யோகம்: ஏழையாக பிறந்தாலும் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். பணத்தின் மீதான ஆசையும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் அனைவருக்கும் இருக்கும். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். பலர் அன்றாடத் தேவைகளுக்கே போதிய வருமானமின்றிப் போராட்டத்துடன் வாழ்கின்றனர்.

ஜாதகம் சொல்வதென்ன: அன்றாட வாழ்க்கைக்குப் போராடும் பலருக்கு கோடீஸ்வர யோகம் இருக்கிறது. எப்போது என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுவதுதான் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சுக ஸ்தான அதிபதி எனப்படும் நான்காம் அதிபதி, செவ்வாய், ஒன்பது, பத்தாம் அதிபதிகள் பலம் பெற்ற ஜாதகர் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருப்பார். முன்னோர்கள் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பர்.
செல்வத்திற்கு அதிபதி: ஒருவரின் ஜாதகத்தில் நவகிரகங்களின் குருவும் 9ம் அதிபதியும் இணைந்து கேந்திர, திரிகோணத்தில் இருந்தால், பிறப்பால் கோடீஸ்வரர். லக்னாதிபதி மற்றும் 4ம் அதிபதிகள் பலம்பெற்று இணைந்து தசை நடந்தால் பல வாகனங்களுக்கு அதிபராகவும், பிறப்பு முதல் இறப்பு வரை பெருஞ்செல்வந்தராகவும் வாழ்வார்.
யாருக்கு எந்த திசை: ஒவ்வொருவருக்கும் ராசியைப் போல லக்னம் உண்டு. பிறந்த நாளில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் ராசியையும், பிறந்த நேரத்தைக் கொண்டு லக்னத்தையும் அறிந்துகொள்ளலாம். மேஷம் விருச்சிகத்துக்கு செவ்வாய் தசை, ரிஷபம் துலாமுக்கு சுக்கிர தசை, மிதுனம் கன்னிக்கு புதன் தசை, மீனம் தனுசுக்கு குரு தசை, மகரம் கும்பத்துக்கு சனி தசை, சிம்மத்துக்கு சூரிய தசை, கடகத்துக்கு சந்திர தசை என லக்னாதிபதி, ராசி அதிபதிகளின் தசை நடக்கும்போது ஜாதகர் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம்: திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும். சாதாரண நிலையில் இருப்பவரும் சுபகிரக பார்வை பலம் பெற்று லக்னாதிபதி, ராசி அதிபதி தசை நடந்தால், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அதேபோல், 2, 10, 11ம் அதிபதிகளின் தசை சுப பலம் பெற்று நடைபெற்றால், செல்வச் சேர்க்கை, தொழிலால் லாபம், குடும்ப முன்னேற்றம் போன்றவை உண்டாகும்.
கேது தரும் கோடீஸ்வர யோகம்: குருவிற்கு கேந்திரம் அல்லது திரிகோண இடங்களில் கேது நிற்பதும், குரு 5, 7, 9ம் பார்வையால் கேதுவைப் பார்ப்பதும், உயர்தர கோடீஸ்வர யோகத்தைத் தரும். பிறந்த ஜாதகத்தில் குரு, கேது இணைவும், கேதுவுக்கு குரு பார்வை ஏற்படுவதும் குரு தசையிலோ, கேது தசையிலோ சாதாரணமானவரையும் எதிர்பாராத நிலைக்கு உயர்த்தி, புகழுடன் கோடீஸ்வரராக்கிவிடும். 6, 8, 12ல் குரு இருந்து, கேது 6, 8, 12 ஆகிய மறைவிடங்களில் இருந்து குருபார்வை பெறுவது யோக பலனைக் குறைக்கவே செய்யும்.
புகழும் செல்வாக்கும்: விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர். 3, 6, 8, 12ம் இடங்கள் மறைவு ஸ்தானம். 3ம் அதிபதி 6, 8, 12ம் இடத்திலோ, 6ம் அதிபதி 3, 8, 12ம் இடத்திலோ, 8ம் அதிபதி 3, 6, 12ம் இடத்திலோ, 12ம் அதிபதி 3, 6, 8ல் மாறி நின்றாலோ, 3, 6, 8, 12ம் அதிபதிகள் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனியாக இருந்து மறைந்தால் புகழுடன் கோடீஸ்வரராக வாழ்க்கை கிடைத்துவிடும்.
ருச்சிக யோகம்: லக்னத்துக்கும் சந்திரனுக்கும் 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் செவ்வாய் அமர்ந்து, அந்த இடம் செவ்வாய்க்கு சொந்தவீடாகவோ, உச்ச வீடாகவோ இருப்பது ருச்சிக யோகம் ஆகும். செவ்வாய் தன் சொந்த வீடுகளான மேஷம், விருச்சிகம் ஆகியவற்றிலும், உச்ச வீடான மகரத்திலும் இருந்தாலும் யோகம் உண்டாகும். பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் உடன் சந்திரன் இணைந்து 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் வலுத்திருக்கும்போது, சந்திரமங்கள யோகம் உண்டாகும். சொத்துக்கள் சேரும்.
புதையல் யோகம்: ஒருவரின் ஜாதகத்தில் புதையல் யோகம் இருந்தாலும் திடீர் பண வரவு வரும். மண்ணில் அடியில் மறைந்திருக்கும் தங்கம், வைரம் மட்டுமே புதையல் என்று சொல்ல முடியாது. நமக்கு கிடைக்கும் திடீர் பண வரவும் புதையல்தான்.
ஒருவரின் ஜாதகத்தில் 2, 5, 9,11 அதிபதிகள் தசையோ புத்தியோ நடைபெறும் போது புதையல் கிடைக்கும் அமைப்பு ஏற்படலாம்,
பணம் எப்படி வரும்: இதில் எட்டாம் அதிபதி சம்பந்தம் மற்றும் 6,8,12 ல் மறைந்த யோகம் பிரச்சினையும் சேர்த்தே தரும். 2,5,9,11ஆம் அதிபதி சுக்கிரனாக இருந்து அதன் தசை புத்தியில் புதையல் போன்ற தனயோகம் ஏற்படுகிறது. எதிர்பாராத பதவி, பொருள் கிடைத்து அதன் மூலம் பெயர் புகழ் அடையும் நிலையை தருகிறது. பங்குச்சந்தையில் செய்துள்ள முதலீடு மூலம் வருமானம் வரும். கடன் கொடுத்து விட்டு திரும்பியே வராத பணம் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்த பணம் திடீரென உங்களுக்கு கிடைக்கலாம்.
புதையலாக தேடி வரும் பணம்: ஒருவர் பிறந்த ஜாதகத்தில் 4ஆம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் இணைந்திருத்தல், நான்காம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் ஒன்றுக்கொன்று பார்வை பெற்றிருத்தல், நான்காம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருத்தல் புதையல் யோகம் எனச் சொல்லப்படும் நிஷ்கல யோகம் கிடைக்கும். செவ்வாய்கிழமை சந்திர ஓரையில் நம்மால் முடிந்ததை சிறிய அளவு சேமித்தால் அந்த பணமானது நமக்கு தேவைப்படும் நேரத்தில் புதையலாக நிச்சயம் கிடைக்கும்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications