ராகு கேது பெயர்ச்சி பலன்.. தலை மேல் அமர்ந்த பாம்பு கிரகங்கள்.. பிடியில் சிக்கிய ராசிகள் யார்?
சென்னை: நவகிரகங்களில் நிழல் கிரகங்களான பாம்பு கிரகங்கள் ராகுவும் கேதுவும் மீன ராசியிலும் கன்னி ராசியிலும் பயணம் செய்யப்போகின்றன. கும்பம், மகரம், தனுசு, விருச்சிகம், துலாம் ஆகிய ராசிகள் ராகு கேதுவின் பிடியில் சிக்கி கால சர்ப்ப தோஷ நிலையை சந்திக்கின்றன. இந்த ராகு கேது பெயர்ச்சியால் கன்னி முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.
கன்னி: ஜென்ம ராசியில் கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது, கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது சிறப்பு. ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் ஆதரவாக இருப்பார்கள். வாகனங்களில் செல்கின்ற போது நிதானத்துடன் இருப்பது நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகரிக்கும். பணியில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நிம்மதியுடன் செயல்பட முடியும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பதும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பதும் நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். புதன்கிழமை விநாயகரை வழிபடுவது,சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது.

துலாம்: ஜென்ம ராசிக்கு ராகு ஆறாம் வீட்டில் பயணம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் குறையும். அலுவலகத்தில் பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறந்து அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். தொழில் முதலீடுகளில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதற்கு முன் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைப்பதால் லாபம் பெருகும். பூர்வீக சொத்துக்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவதால் தொழில் வியாபாரத்தில் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சற்றே வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக நெருக்கடிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து முன்னேறுவீர்கள். முருகப்பெருமானை வணங்கினால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்: உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி நடைபெறுவது சாதகமற்ற நிலை என்றாலும் ராகு கேது பயணத்தால் பண வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி நிலவும். மன நிம்மதி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகப்படியாக இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது.
தனுசு: பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு நற்பலன்களை பெற முடியும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவுகளைப் பெற சற்று பாடுபட வேண்டியிருக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் பிரச்சினை குறையும்.
கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள் இருக்கும். சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதன் மூலம் முன்னேற்றம் அடையலாம். தொழில் செய்பவர்கள் பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தள்ளி வைப்பது சிறப்பு. வியாழக்கிழமை ராகு பகவானை வழிபட நன்மைகள் உண்டாகும்.
மகரம்: ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுகிறது. பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பீர்கள். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்கள் சற்று குறையும். கணவன்- மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபம் அதிகரிக்கும். வெளியூர் முலம் நல்ல செய்தி கிடைக்கும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு இட மாற்றங்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பளு குறைந்து நிம்மதியுடன் பணி புரிய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. புதன்கிழமை விநாயகர் வழிபாடு செய்வதால் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.
கும்பம்: நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு மற்றவர்களிடம் நிதானமாக செயல்படுவது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களால் உடல் சோர்வு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியிருக்காது. வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சிறிது நாள் இருக்க நேரிடும். பண விசயங்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்று அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடல் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். வேலைப்பளு இருந்தாலும் சம்பள உயர்வு கிடைக்கும். மன நிம்மதி அதிகரிக்க செவ்வாய்கிழமை முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
மீனம்: ஜென்ம ராகுவினால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் உண்டாகும். பணம் பல வழிகளிலும் தேடி வரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சற்று பிரச்சினைகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வியாழக்கிழமையன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications