ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: திடீர் ஜாக்பாட்.. கோடி கோடியாக அள்ளித்தரப்போகும் ராகு
சென்னை: ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் இறுதியில் நிகழப்போகிறது. விடா முயற்சியும் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கக் கூடிய துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நிம்மதி சந்தோஷத்தை தரப்போகிறது. மறைவு ஸ்தானங்களுக்கு போகும் ராகு கேதுவினால் செல்வ வளம் வரப்போகிறது. சங்கடங்களை மட்டுமே சந்தித்து வந்த நீங்கள் இனி சந்தோஷங்களை அனுபவிக்கப் போகிறீர்கள்.
ஜென்ம ராசியில் அமர்ந்து இருந்த கேது நவம்பர் முதல் 12ஆம் வீட்டிற்கு செல்லப்போகிறார். களத்திர ஸ்தானத்தில் இருந்த ராகு ஆறாம் வீட்டிற்கு செல்லப்போகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால் அற்புதங்கள் நிகழப்போகிறது. ஆறாம் வீட்டில் ராகு மகாலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது. மன குழப்பங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜா யோகமாக அமைகிறது இந்த ராகு கேது பெயர்ச்சி. கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.

களத்திர ராகு குடும்பத்தில் கஷ்டத்தை கொடுத்தது. கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு இருந்தது. கடந்த காலங்களில் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு நெருக்கடிகளை சந்தித்து வந்த உங்களுக்கு துன்பங்களும் பிரச்சினைகளும் முடிவுக்கு வரும். வீட்டில் நிம்மதியில்லாமல் இருந்த உங்களுக்கு நெருக்கடிகள் நீங்கும். தடைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
இந்த ராகு பெயர்ச்சியால் புதிய தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும்.வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகம் கிட்டும். பதவி உயர்வு பெற்று வருமானம் கூடும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். திருமணம் நீண்ட நாள் கனவான புத்திரசம்பத்து கிடைக்கும். ருண ரோக சத்ரு ராகுவினால் நினைத்தது நிறைவேறும் காலம் வந்து விட்டது. உறவினர்களின் பாசமும் நேசமும் அதிகரிக்கும். எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்துள்ளதால் கடன் அடைப்படும் தீராத நோய் திரும். போட்டி பொறாமை பொடி பொடியாகும்.
ஆறில் ராகு அமர்வது அஷ்ட லட்சுமி யோகத்தை தரக்கூடியது. இதுநாள் வரை இருந்த துன்பங்கள் துயரங்கள் நீங்கும். கடன் பிரச்சினையில் இருந்தும் நோய்களில் இருந்தும் நிவாரணம் பெறுவீர்கள். தம்பதியரிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபராத்தில் இருந்த தடைகள் முன்னேற்றங்கள் நீங்கும். பிள்ளைகள் வழியில் இருந்த செலவுகள் நீங்கும். மன உளைச்சல் நீங்கும். முடியாத காரியங்களை முடித்து காட்டுவீர்கள். எதிரிகள் உங்களைக் கண்டு விலகி ஓடுவார்கள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.
ஜென்ம ராசியில் இருக்கும் கேது 12ஆம் வீட்டிற்கு செல்லப்போவதால் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும் வேதனைகள் மறையும். வெளிநாட்டு யோகமும் தேடி வரப்போகிறது. வெளிநாடு வேலையை விட்டு விட்டு வந்தவர்களுக்கு மீண்டும் அழைப்புகள் வரும். கடுமையான உழைப்பு வெற்றியை கொடுக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும்.
பெண்களுக்கு இனி நல்ல காரியங்கள் நிறைய நடைபெறும். பட்டம் பதவி புகழ் தேடி வரும். கணவன் மனைவி உறவில் இருந்த விரிசல் நீங்கும். கசப்புகள் நீங்கி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வீர்கள். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். அக்கம் பக்கத்தினரிடம் எந்த கருத்து வேறுபாடும் வைத்துக்கொள்ளாதீர்கள். மாணவர்களுக்கு நல்ல நேரம் வந்து விட்டது. பிடித்த பள்ளி, கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும். கால்களில் பிரச்சினை வரும் எச்சரிக்கை தேவை. யாரையும் கடுமையாக பேச வேண்டாம்.
நோய்கள் நீங்கி உங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். கோவில்களுக்கு பயணம் செய்வீர்கள். ஆன்மீக பயணம் அதிகரிக்கும். புது முயற்சிகள் கை கூடும்.வரவு எட்டணா செலவு பத்தணா நிலை மாறி சேமிப்புகள் உயரும்.சுப தேவைகளுக்கு கடன் பட நேரிடும். வண்டி வாகன மாற்றமும் வீடு மாற்றமும் ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு குடி போகும் வாய்ப்புகளும் தேடி வரும்.
அம்மாவின் உடல் நலனில் முன்னேற்றத்தை தரும். புது வீடு, உயர்பதவி யோகம் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் யோகத்தை கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்றத்தையும் கொடுக்கும். மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி ராஜயோகத்தை கொடுத்து செல்வாக்கு சொத்து சுகத்தை அதிகரிக்கும். திருப்பதி, காளஹஸ்தி சென்று தரிசனம் செய்து வர மென்மேலும் உயர்வு அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் செய்யப்போகும் முதலீடுகள் லாபமாக திரும்ப வரும். வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்தில் உயர் பதவிகள் தேடி வரும். தெய்வ வழிபாடு செய்வதற்கான நேரம் வந்து விட்டது. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் விநாயகர் மந்திரத்தை சொல்லுங்கள் நல்ல வேலை கிடைக்கும். சஷ்டி விரதம் இருங்கள் முருகன் அருளினால் சத்ரு தொல்லைகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.












Click it and Unblock the Notifications