மாமன்னர் ராஜராஜ சோழன் 1033வது சதய விழா: தஞ்சாவூரில் விழாக்கோலம்
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1033வது ஆண்டு சதய விழா தஞ்சை பெரிய கோயிலில் களைகட்டியுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1033வது சதய விழா இன்று தஞ்சையில் கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது. மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாமன்னர் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இதனை முன்னிட்டே ஆண்டு தோறும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் ராஜராஜனின் பிறந்த நட்சத்திர தினத்தை சதய விழா என்ற பெயரில் இரண்டு தினங்கள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
60ஆண்டுகளுக்கு பிறகு, 150 கோடி மதிப்புள்ள ராஜராஜ சோழன் மற்றும் லோக மாதேவி சிலைகள் மீட்கப்பட்ட நிலையில், இம்முறை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜராஜ சோழன் கட்டிய கோவில்
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன். ஒரே கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டிட கலையிலும் ராஜ ராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாக திகழ்கிறது. எனவேதான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

ஐப்பசி சதயம் விழா
ராஜராஜ சோழன் பெரிய கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், இன்று காலை மங்கள இசை முழங்க விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாமன்னன் 'ராஜராஜன் கண்ட திருமுறை', 'ராஜராஜன் ஆட்சிக்காலம்' போன்ற தலைப்புகளில் கருத்தரங்கமும், 'திருமுறை பன்னிசை' என்கிற பெயரில் பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ராஜராஜனுக்கு மரியாதை
இன்று காலை 7.30 மணிக்கு சதய விழாவின் முக்கிய நிகழ்வாக ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதன் பிறகு பெருவுடையார், பெரியநாயகி திருமேனிக்கு 48 வகையான பொருள்களால் பேரபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் முடிந்த பிறகு 108 கலச பூஜை நடைபெறுகிறது. அதன் பிறகு தேவாரம், திருவாசகம் ஆகியவற்றுக்குப் பூஜை செய்யப்பட்டு நான்கு ராஜ வீதிகளிலும் ‘தேவார வீதி உலா' நடைபெறும்.

ராஜராஜன், உலகமாதேவி
ராஜராஜன் உயிருடன் இருக்கும் காலத்தில் செய்யப்பட்ட அவரது சிலையும் பட்டத்து இளவரசி உலகமாதேவி சிலையும் காணாமல் போய் குஜராத்தில் உள்ள தனியார் மியூசியத்தில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. அந்த சிலைகள் பலத்த பாதுகாப்போடு கோயிலுக்குள் கொண்டு வந்து வைத்துள்ளனர். இந்தச் சிலைகளைக் கொண்டுவரும்போதே மக்கள் திரண்டு பெரிய விழா எடுத்து வரவேற்பு கொடுத்தனர். சதய விழாவை முன்னிட்டு ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுதும் இருந்து வந்துள்ள ஏராளமானோர் மீட்கப்பட்ட சிலைகளை பார்த்து செல்கின்றனர்.

தஞ்சையில் விழாக்கோலம்
ராஜராஜ சோழனின் சதய விழாவால் தஞ்சை நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பெரிய கோயில் மின் விளக்கு அலங்காரத்தினால் ஜொலிக்கிறது. ஒரே கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டிட கலையிலும் ராஜ ராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாக திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் புகழோடு விளங்கும் மாமன்னர் ராஜராஜனின் சதயவிழாவை நாமும் கொண்டாடுவோம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications