திருமணத்தில் சிக்கல் ஏற்படுத்தும் தோஷங்கள் - பரிகாரங்கள்
காலசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், புனர்ப்பு தோஷம் போன்றவை திருமண தடை ஏற்படுத்தும் அமைப்புகள். தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்து வழிபடலாம்.
சென்னை: பெண்ணோ, ஆணோ திருமணம் செய்ய நினைக்கும் போது பல்வேறு தடைகள் ஏற்படும். காலசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், புனர்ப்பு தோஷம் போன்றவை திருமணத்திற்கு தடையை ஏற்படுத்தும். இதற்கு பரிகாரம் செய்தால் திருமண தடை நீங்கும்.
ஆண், பெண் ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது 2,7,8 ஆகிய வீடுகளைக் கவனமாக ஆராய வேண்டும். காரணம் 7வது வீடு களத்திரத்தைக் குறிக்கும் வீடாகும். 2வது வீடு குடும்ப ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகும். 8வது வீடு பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகவும், ஆணுக்கு ஆயுள் ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகவும் அமைந்துள்ளது.

2,7,8ம் வீடுகள் சுபர் பார்வை பெற்றிருக்க வேண்டும். 2,7,8ம் வீடுகளில் பாபக்கிரகங்கள் இடம் பெற்றிருக்கவோ, பாவிகள் சேர்க்கையோ இருக்கக் கூடாது. தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களால் திருமணம் தடைப்படுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் சனி சேர்ந்து இருந்தாலோ... ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோ இருந்தாலோ அவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் இவர்களை குரு பார்த்தால் பாதிப்புகள் குறையும். சனி-சந்திரன் சேர்க்கை, பார்வை, லக்னாதிபதி பலம் குறைவு ஆகியவற்றால் திருமணத்திற்கு முன்பே தாம்பத்ய உறவு ஏற்படும். புனர்ப்பு தோஷம் உள்ளவர்கள் சாதனையாளராகவும் இருக்கிறார்கள்.
நிஷ்டூர யோகம். இந்த யோகமும் சந்திரன், சனி சம்பந்தப்பட்ட யோகம்தான். சந்திரன், சனி எங்கு சேர்ந்து இருந்தாலும், இந்த யோகம் ஏற்படுகிறது
சனி, சந்திரன் சேர்ந்து இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ, ஒருவர் மனத்தளவில் பாதிக்கப்படுகிறார். இந்த யோகம் உள்ளவர்கள் கடுமையாகப் பேசக்கூடியவர்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆனால், இந்த யோகத்துக்குக் குருவின் பார்வை இருந்தால், பாதிப்பு எதுவும் இல்லை என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
இந்த யோகத்துக்கும் திருமணத்துக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. இந்த யோகம் இருப்பவர்களுக்கு திருமணத்துக்கு நிறைய தடங்கல்கள் ஏற்படும். நிச்சயதார்த்தம் ஆகிக்கூட திருமணம் நின்றுபோய் இருக்கிறது. சனி-சந்திரன் சேர்க்கை, பார்வை, லக்னாதிபதி பலம் குறைவு ஆகியவற்றால் திருமணத்திற்கு முன்பே தாம்பத்ய உறவு ஏற்படும்.
கால சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவை திருமண தடையை ஏற்படுத்தும். கணவன் மனைவி இடையே தாம்பத்ய வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணிற்கு, செவ்வாய் தோஷம் உள்ள நபரையே திருமண தடையை ஏற்படுத்தும்.
களத்திர தோஷமும், செவ்வாய் தோஷம் போல திருமணம் நடப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும். திருமணம் நடந்த பின் அதிகமாக சண்டை வந்து திருமண பந்தம் முடிவுக்கு வரும் என்ற நிலைமைக்கு கொண்டு செல்லும்.
திருமண தடைகள் நீங்கவும், முந்தைய பிறவியில் செய்த பாவங்களை போக்கவும் ஹோமங்கள் செய்யலாம். திருமண தடை நீக்க பரிகாரங்களையும், ஹோமங்களையும் செய்து பலனடையலாம். ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் திருமண தடை நீங்கவும் தோஷங்கள் நீங்கவும் யாகங்களும், ஹோமங்களும் செய்யப்படுகின்றன. இதில் பங்கேற்று பலனடையலாம்.
ஜாதகத்தில் சந்திரன் பாதிப்பு உள்ளவர்கள் திங்களூர் சென்று பரிகாரம் செய்து வரலாம். சோமவார விரதம் இருக்கலாம். சங்கடகர சதுர்த்தி நாளில் விநாயகரை தரிசிக்கலாம். செவ்வாய் கிழமைகளில் முருகன் ஆலயம் சென்று வழிபட்டு பரிகாரம் செய்யலாம். சனி பாதிப்பு உள்ளவர்கள் திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசிக்க திருமண தடை நீங்கும்.
வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வர திருமணம் நடைபெறும். தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட திருமணம் கை கூடும். கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் ஞாயிறு தோறும் ராகு காலத்தில் தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட திருமணம் நடைபெறும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications