Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி தசை, சனி புத்தியால் பாதிப்பா... பயம் வேண்டாம் - தோஷ நிவர்த்தி பூஜை செய்யலாம்!

ஏழரை சனி, சனி புக்தி, சனி தசை, கண்ட சனி, அஷ்டம சனி, சனி திசை, புத்தி பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சனிசாந்தி ஹோமத்துடன், சனிதோஷ நிவர்த்தி பூஜை வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏழரை சனி, சனி புக்தி, சனி தசை, கண்ட சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற தசை, புக்தி நடப்பவர்களும் சனிசாந்தி ஹோமம் சனிதோஷ நிவர்த்தி பூஜை செய்து நிவாரணம் பெறலாம்.

ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் தசா புத்தி காலங்கள் நடைபெறுகிறது. அசுவினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்களும் 9 கோள்கள் அதிபதியாக உள்ளன. ஒருவர் பூசம், ஹஸ்தம், உத்திரட்டாதியில் பிறந்தவர்களுக்கு சனி அதிபதி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் போதே சனி மகாதசை நடக்கும்.

மனிதர்களுக்கு ஏதாவது ஓரு கால கட்டத்தில் சனி தசை சனி புத்தி நடக்கும். ஒருவரது ராசியில் சனி திசை 19 வருடங்கள். இந்த சனி திசை நடக்கும் போது சனி இருக்கும் இடத்தை பொறுத்து சுப பலன்களோ அசுப பலன்களோ உண்டாகும். இதே போல சனி புத்தி நடக்கும் போதும் சிலருக்கு உடல்நலக்குறைவு, பொருள் நஷ்டம் ஏற்படும். சனி பெயர்ச்சியால் பாதிப்பு, சனி தசை, புத்தியால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுபட சனி சாந்தி ஹோமத்திலும், தோஷ நிவர்த்தி பூஜை செய்யலாம்.

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்

சனிபகவான் நீதிமான். ஒருவருக்கு அவரவர் கர்மவினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை,தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. ரிஷபம் அஷ்டம சனி, மிதுனம் கண்டச்சனி, கன்னி அர்த்தாஷ்டம சனி, விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். இந்த ராசிக்காரர்கள் பாதிப்பு நீங்க வாலாஜா பேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் ஸ்ரீமுரளீதர சுவாமிகள் தலைமையில் நடைபெறும் பரிகார ஹோமம் செய்யலாம்.

பொருள் நஷ்டம்

பொருள் நஷ்டம்

சனி திசை நடக்கும் போது ஒருவரின் ஜாதகத்தில் ராசியில்,லக்கினத்தில் சனி இருந்தால் அடிக்கடி நோய்வாய்ப்படுவர். வேலையில் வேறு ஊருக்கு இடமாற்றம் உண்டாகும் வாய்ப்புண்டு. இரண்டாவது இடத்தில் சனி இருந்தால் பொருள் நஷ்டம் உண்டாகும் கண் தொடர்பான நோய்கள் வரக்கூடும்.

பிள்ளைகளால் தொந்தரவு

பிள்ளைகளால் தொந்தரவு

சனி திசை நடக்கும்போது மூன்றாவது இடத்தில் சனி இருந்தால் விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.எதிர்பாராத இடத்தில் இருந்து பொருள் வரவு உண்டாகும். நான்காம் இடத்தில் சனி இருந்தால் வீட்டில் எப்போதும் கலகம் ஏற்படும். ஐந்தாவது இடத்தில் சனி இருந்தால் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை.பெற்ற பிள்ளைகளால்தான் அதிக தொந்தரவுகள் வரும்.

வெளிநாடு யோகம்

வெளிநாடு யோகம்

ஆறாவது இடத்தில் சனி இருந்தால் அறுவை சிகிச்சை நடக்கலாம்,ஆனால் எதிரிகள் இவர்களை கண்டுதான் பயந்து கொண்டு இருப்பார்கள். எட்டாவது இடத்தில் சனி இருந்தால் உறவினர்களுக்கு கஷ்டம் வரும். ஒன்பதாவது இடத்தில் சனி இருந்தால் வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

சனி தோஷ நிவர்த்தி

சனி தோஷ நிவர்த்தி

சனி திசை நடக்கும்போது சனி பத்தாம் இடத்தில் இருந்தால் மிக நல்லது.நல்ல வேலை,திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். 11 ல் சனி இருந்து திசை நடந்தால் சொத்து பெருகும்.நோய் நொடியில்லாத சுகமான வாழ்க்கை அமையும்.12 ல் சனி இருந்தால் வீண் அலைச்சல் வீண் விரையம் ஏற்படும். சனி தசை, சனி புத்தியால் ஏற்படும் பாதிப்புகள் குறைய சனி சாந்தி பூஜை, சனிதோஷ நிவர்த்தி பூஜையில் பங்கேற்கலாம்.

தொழில் நஷ்டம்

தொழில் நஷ்டம்

சனி தசை, சனி புக்தி நடப்பவர்களும், குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம்,ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, பித்ரு தோஷம், திருமணத் தடை, புத்திர பாக்கியம் இன்மை போன்ற தோஷங்கள் உள்ளவர்களும் சனி சாந்தி ஹோமம் செய்யலாம். குழந்தைகள் படிப்பில் மந்தமாக இருப்பது, விஷமத்தனங்கள் செய்தாலும், தொழில், உத்யோகம், வியாபாரம் போன்றவைகளால் ஏற்படும் தடைகள் நீங்கவும் சனிசாந்தி ஹோமத்திலும், சனிதோஷ நிவாரண பூஜைகள் செய்யலாம்.

சனி தோஷ நிவாரண பூஜை

சனி தோஷ நிவாரண பூஜை

சனிதசை, சனி புத்தி நடப்பவர்களும், சனிப்பெயர்ச்சியால் பாதக பலன்களை பெறுபவர்களும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 03.02.2018 சனிக்கிழமையன்று காலையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் சனிதோஷ நிவர்த்தி பூஜை நடைபெறுகிறது. சனி சாந்தி ஹோமம் சனிக் கிழமை, சனி ஹோரை, பௌர்ணமி மற்றும் அமாவாசையில் செய்வது மிகவும் உத்தமம். சனிக் கிழமை சனிசாந்தி ஹோமம் செய்வது மிகவும் சிறப்பு. பிரதி சனிக்கிழமைகளிலும் சனி சாந்தி ஹோமம் நடைபெறுகிறது.

கால சக்கர பூஜை

கால சக்கர பூஜை

வாலாஜா பேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் ஸ்ரீமுரளீதர சுவாமிகள் தலைமையில் நடைபெறும் சனி சாந்தி ஹோமத்தில் பங்கேற்று ஹோமத்திற்கு தேவையான திரவியங்கள், வன்னி சமித்து மற்றும் நெய், நல்லெண்ணெய் கொடுத்து வழிபாடு செய்யலாம். மேலும், ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு வைத்த சனீஸ்வர ரக்ஷையுடன் பிரசாதங்கள் வழங்கப்படும். யாகத்தின் முடிவில் கலச தீர்த்தத்தை நட்சத்திர விருட்சங்களுக்கும், 12 ராசி மண்டல விருட்சங்களுக்கும், 9 நவக்கிரக விருட்சங்களுக்கும் தன்வந்திரி பீடத்தில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள காலச்சக்கரத்தில் சனீஸ்வர கிரகத்திற்குரிய வன்னி விருட்சத்தில் சேர்த்து விருட்ச பூஜையும் நடைபெற உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+