புற்றுநோய்,செரிமான கோளாறுகள் தீர்க்கும் ராகு- கேது

புற்று நோய் அகலவும், உணவு குழாவில் ஏற்படும் நோய்கள் அகலவும், வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள் நீங்கவும் போன்ற பல்வேறு விதமான தோஷங்கள் நீங்கவும் ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இராகு-கேதுவிற்கு அன்னாபிஷேகம் செய்து புற்று நோய், உணவு குழாவில் ஏற்படும் நோய்கள் அகலவும், வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள் நீங்கவும் வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் அன்னபிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

நவக்கிரகங்களில் அள்ளிக் கொடுக்கும் கிரகம் ராகுவாகும். எனவே தான் 'ராகுவைப்போல கொடுப்பானுமில்லை' என்று அனுபவ வாக்காக முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

நம் கையில் சொத்து பத்து இல்லை என்றாலும், வியாதி வெக்கை இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான் இன்றைய தேதியில் அனைவரது பிரார்த்தனையாகவும் ஆசையாகவும் இருந்து வருகிறது.

சாயா கிரகங்கள்

சாயா கிரகங்கள்

நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர் என்று ஜோதிடம் கூறுகிறது. இதில் இருந்து ராகு மற்றும் கேதுவுக்கு உள்ள முக்கியத்துவம் எளிதில் விளங்கும்.

சர்ப்ப யோகம்

சர்ப்ப யோகம்

ராகு- கேதுக்களுக்குள் சகல கிரகங்களும் அடைபட்டு ஒருவரது ஜாதகம் அமைந்தால், அவருக்கு சர்ப்ப தோஷம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த காலசர்ப்ப தோஷம் என்பதை, காலசர்ப்ப யோகமாக மாற்றக்கூடிய ஆற்றல் சர்ப்ப சாந்தி பரிகாரங்களை முறையாகச் செய்பவர்களுக்கு உண்டு.

அரசியல் அதிகாரம்

அரசியல் அதிகாரம்

ராகு - கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்குத் தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள். குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மாவள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர்.

தோல் நோய்கள்

தோல் நோய்கள்

புத்திர ஸ்தானத்தில் பாம்பு கிரகங்கள் பலம் பெற்றிருந்தால், பிள்ளைகள் பிறப்பதில் தாமதம் ஏற்படும். 6வது இடத்தில் பாம்பு கிரகங்கள் பலம் பெற்றிருந்தால் தோல் வியாதிகள் உருவாகலாம். உடல் நலத்தில் அடிக்கடி தொல்லைகள் ஏற்படும். கடன் சுமையும் அதிகரிக்கும். களத்திர ஸ்தானத்தில் ராகு- கேதுக்கள் இருந்தால், வாழ்க்கைத் துணை அமைவதில் தாமதம் ஏற்படும்.

நோய்கள் தீரும்

நோய்கள் தீரும்

பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருப்பவரைத் திடீரென கோடீஸ்வரர் ஆக்குபவரும் ராகு. கெட்ட சகவாசங்களுக்கும் காரணம் ராகுவே! ஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர். தோல் வியாதி, வாயுத் தொல்லை, வயிற்று வலி உட்பட பல வியாதிகளினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கேது பகவானுக்குப் பரிகாரம் செய்து பாதிப்பில் இருந்து மீளலாம்.

மூலிகைகளால் யாகம்

மூலிகைகளால் யாகம்

வாலாஜா பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் இந்த ஆலயத்தில் ஏக சரீர ராகு - கேதுவாக தரிசனம் தரும் இந்த ராகு - கேது விக்கிரகத்தின் தலைப் பகுதி ராகுவாகவும், உடல் பகுதி கேதுவாகவும் அமைந்துள்ளது. இந்த ஏக சரீர ராகு - கேதுவுக்கு ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. தன் பின் பிரசாதமாக விநியோகிக்கப்படும் இந்த அன்னத்தை உண்டால், உடல் செரிமானம் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.

அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம்

இராகு கேது அன்னாபிஷேகத்தில் பங்கேற்க விரும்பவர்கள் பால், மஞ்சள் போன்ற அபிஷேக பொருட்களும், அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்களும், அர்ச்சனைக்கு வேண்டிய புஷ்பங்களும், பழங்களும், தீபத்திற்கு நெய், நல்லெண்ணை கொடுத்து தானம் செய்து சங்கல்பம் செய்துகொண்டால் இராகு கேது தோஷமும் கிரகண தோஷமும் நீங்கும்.

நாக தோஷ நிவாரண பூஜை

நாக தோஷ நிவாரண பூஜை

காலசர்ப்ப யாகம், சர்ப்ப சாந்தி, நாகதோஷ நிவாரண பூஜைகளும் தன்வந்திரி பீடத்தில் பக்தர்கள் விரும்பும் நாளிலும், விசேஷ தினங்களிலும் நடைபெற்று வருகிறது. யாகத்தின் மூலம் திருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைப் பேறின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு பிரார்த்தனைகளுக்குப் பலன் வேண்டுபவர்கள் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் இராகு- கேது ப்ரீத்தி ஹோமங்களிலும் பூஜைகளிலும் அன்னாபிஷேகத்திலும் கலந்து கொண்டு பிரார்த்தித்துப் பலன் பெறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+