Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா : பச்சைப்பட்டினி விரதம் தொடங்கிய அம்மன்

மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தனிச்சிறப்பு அம்சமாகும்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. மாசி மாத கடைசி ஞாயிறன்று பச்சைப்பட்டினி விரதம் தொடங்கியுள்ளது. பச்சைப்பட்டினி விரதம் இருக்கும் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் படைக்காமல் துள்ளுமாவு, நீர்மோர், பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறார் சமயபுரம் மாரியம்மன். மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பாகும். இந்த ஆண்டு பச்சைப்பட்டினி விரதத்தை கடந்த ஞாயிறு முதல் தொடங்கியுள்ளார் சமயபுரம் மாரியம்மன்.

சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் நோய்கள் அனைத்தும் நீங்கும். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் பூச்சொரிதல் விழா பிரசித்தி பெற்றதாகும். 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் போது, பூச்சொரிதல் விழா நடைபெறும். அப்போது சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பூவாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து வரும் பூவே பயன்படுத்தப்படுகிறது.

 சமயபுரம் மாரியம்மன்

சமயபுரம் மாரியம்மன்

ஸ்ரீரங்கநாதரின் தங்கை சமயபுரம் மரியம்மன். ஆண்டு தோறும் அண்ணன் கொடுக்கும் சீரில் அகம் மகிழ்ந்து தன்னை காண வரும் பக்தர்களுக்கு அள்ளிக்கொடுக்கிறார் அன்னை. அண்ணன் ஸ்ரீரங்நாதரைப் போன்றே சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள். 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பது தனிப்பெரும் சிறப்பு அம்சமாகும். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் அதிபதியாக அம்மன் ஆட்சி புரிகிறார் என்பதற்கும் சிற்பச்சான்றுகள் உள்ளன.

 ராகு கேது தோஷம் நீங்கும்

ராகு கேது தோஷம் நீங்கும்

அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இக்கோவிலில் இருக்கும் அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்ச பலன் கிடைக்கும். இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பதற்கு இக்கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்றும் உள்ளது.

 சமயபுரம் மாரியம்மன் ஆதி பீடம்

சமயபுரம் மாரியம்மன் ஆதி பீடம்

இக்கோவிலில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும் மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரம் ஆகும். எனவே தான் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகாமாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருவுருவமாக காட்சி அளிக்கிறார்.

 அம்மன் விரதம்

அம்மன் விரதம்

உலக நன்மைக்காகவும் இக்கோவிலில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும். அந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர் பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

 உண்ணா நோன்பிருக்கும் அம்மன்

உண்ணா நோன்பிருக்கும் அம்மன்

தேவர்களை இம்சித்த மகிஷாசூரனை புரட்டாசி மாதம் ஒன்பது நாட்கள் தவமிருந்து வதம் செய்தார் அன்னை ஆதிபராசக்தி. மகிஷா சூரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் தணியவும் சோழ வள நாட்டின் தலைநகர் திருச்சிக்கு நேர் வடக்கே காவிரி வடகரையில் வேம்பு காட்டில் கவுமாரி என்று பெயர் பூண்டு சிவப்பு நிறம் கொண்டு மஞ்சள் ஆடை தரித்து, உடல் முழுவதும் வாசனை புஷ்பங்களால் மலை போல் குவித்து உண்ணா நோன்பிருந்து பல ஆண்டு காலம் தவம் செய்து அதன் பயனாக சாந்த சொரூபிணியாக சர்வரட்சகியாகி மாரியம்மன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

 பூச்சொரிதல் விழா

பூச்சொரிதல் விழா

இந்த புராண வரலாற்றின் அடிப்படையில் தான் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்பாள் பச்சை பட்டினி விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வருகிறார். இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா மார்ச் 7ஆம் தேதி மாசி கடைசி ஞாயிறன்று தொடங்கியது. இதையொட்டி விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க கோவிலின் கொடிமரத்தின் முன்பிருந்து யானை மீது பூத்தட்டுகளுடன் கோவில் குருக்கள் அமர்ந்து வந்தார். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூத்தட்டுகளை சுமந்து வந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+