Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி 2017: ஏழரை சனி என்ற அச்சம் வேண்டாம் மகர ராசிக்காரர்களே!

மகரம் ராசிக்கு விரைய சனியாக சஞ்சாரம் செய்ய உள்ளார் சனிபகவான். உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்களை பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சனிப்பெயர்ச்சி 2017: ஏழரை சனி என்ற அச்சம் வேண்டாம் மகர ராசிக்காரர்களே!- வீடியோ

    சென்னை: டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.

    மகரம் ராசிக்கு இதுவரை 11ம் இடத்தில் இருந்த சனிபகவான் இனி விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சாரம் செய்ய உள்ளார்.

    சனிபகவான் தனுசு ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு 2 வது இடம், 6வது இடம், 9 வது இடங்களைப் பார்க்கிறார். உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்களை பார்க்கலாம்.

    விரையசனி

    விரையசனி


    சனிபகவான் 12வது இடத்தில் விரைய சனியாக அமைகிறார். ஏழரை சனி ஆரம்பிக்கிறது.
    பயம் வேண்டாம். 12வது இடம் அயன சயன ஸ்தானத்தில் சனி அமர்வதால் ஏழரை ஆரம்பிக்கிறது. அடடா ஏழரை ஆரம்பிக்கிறதே என்று பயப்பட வேண்டாம். சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதி. அவர் நல்லதே செய்வார்.

    வாயினால் வம்பு

    வாயினால் வம்பு

    பணம் விரையங்கள் மருத்துவ செலவாக ஏற்படும் எனவே இதை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். நோயாளிகளுக்கு உதவி செய்யலாம். இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி. எனவே நாவடக்கம் தேவை. வாயினால் வம்பு வழக்குகள் வரலாம்.

    குடும்பத்தில் சிக்கல்

    குடும்பத்தில் சிக்கல்

    எதை பேசினாலும் பிரச்சினை வரலாம் என்பதால் வாயை மூடி பேசவும். ஈகோவை விட்டுக்கொடுங்க. குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுங்க. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.

    மறதியை மாற்றவும்

    மறதியை மாற்றவும்

    மாணவர்கள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். அடிக்கடி மறதி மற்றும் ஞாபகசக்தி குறைந்து காணப்படும். எனவே தேவையற்ற விஷயங்களில் கவனத்தைத் திசை திருப்பாமல் படிப்பில் கண்ணும் கருத்துமாய் இருத்தல் நலம். கல்விக் கடன்கள் எளிதாக கிடைக்கும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கச் சற்று போராட வேண்டியது வரும்.

    விரும்பிய வேலை

    விரும்பிய வேலை

    ராசிக்கு 6வது ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். எனவே நோய் நொடிகள் எட்டிப்பார்க்கும். எனவே மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும். அதை ஒடுக்க வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த விரும்பிய நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். கடன்பட்டு பொருட்கள் வாங்க வேண்டிய நிலை வரும். வேலையில் ஊதிய உயர்வு கிட்டும். பதவி உயர்வு ஒரு சிலருக்கு அமையும்.

    வெளிநாட்டு வேலை

    வெளிநாட்டு வேலை

    பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தைக்கு நன்மை ஏற்படும். வேலை நிமித்தமாக ஒரு சிலர் வெளிநாடு செல்வர். அடிக்கடி ஆலய தரிசனம், தெய்வ தரிசனம் செய்ய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையும். பாஸ்போர்ட், விசா இவற்றில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும்.
    வெளிநாட்டு பயணங்கள் நன்றாக அமையும். பலருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் யோகம் கிடைக்கும்.

    நன்மை செய்யுங்கள்

    நன்மை செய்யுங்கள்

    தவறு செய்தால் மட்டுமே தண்டிப்பார். குட்டி உங்கள் தவறை சுட்டிக்காட்டுவார். பாதங்களை நன்றாக நனையுமாறு கழுவுங்கள். ஏனெனில் பாதங்கள் மூலமே சனிபகவான் உங்கள் உடம்புக்குள் நுழைகிறார். வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருங்கள். கும்பகோணம் அருகில் திருக்கோடிக்காவலில் சனிபகவான் பால சனியாக இருக்கிறார். அவரை வணங்கினால் நன்மை கிடைக்கும்.

    கருத்து வேறுபாடுகள்

    கருத்து வேறுபாடுகள்

    உத்தராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனவரவும், பொருள் வரவும் கிடைக்கும். யாருக்கும் தேவை இல்லாமல் கடன் கொடுக்கவோ அல்லது ஜாமீன் போடுவதோ கூடாது. தேவையற்ற விரயச் செயல்கள், தண்டச் செலவுகள், வைத்யச் செலவுகள் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். குல தெய்வ வழிபாடு இஷ்ட தெய்வ வழிபாடு இக்காலங்களில் அவசியம்

    திருவோணம் நட்சத்திரம்

    திருவோணம் நட்சத்திரம்

    திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இடம், மனை, வீடு, வண்டி, வாகனங்கள், வாங்க வாய்ப்புகள் பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது. புதிய வேலை கிடைக்க தாமதம் ஆகும். வேலையில் எச்சரிக்கை தேவை. கூட்டுத் தொழிலுக்கு கூட்டாளிகள் தாமாகவே வந்து சேருவர். திருநாகேஸ்வரம் சென்று திருநாகநாதரை வணங்குங்கள்.

    அவிட்டம் நட்சத்திரம்

    அவிட்டம் நட்சத்திரம்

    அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கல்வி கற்பதில் இருந்த தடை நீங்கி உயர் கல்வி பயில்வதற்கான சந்தர்ப்பம் அமையும். வேறு வேலைக்கு அவசரப் பட வேண்டாம். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடவும் கூடாது. சகோதர சகோதரிகளால் உங்களுக்கு நன்மையும் கிட்டும். கதிராமங்கலம் வனதுர்க்கையை வணங்கினால் நன்மை கிடைக்கும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+