சனிப்பெயர்ச்சி 2025: ராஜயோகம் பெறப்போகும் துலாம் ராசி.. வீடு, நிலம், திருமணம்னு அதிர்ஷ்டம் கொட்டும்
சனிப்பெயர்ச்சி பலன் 2025: துலாம் ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டு ராஜ யோகத்தை கொடுக்கப் போகிறது. திருமணம், வீடு, நிலம், வாகனம் என அனைத்து அதிர்ஷ்டங்களும் கொட்டப் போகிறது. 2025 புத்தாண்டு சனிப்பெயர்ச்சியால் கிடைக்கும் நற்பலன்கள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (Elarai sani for Thulam)
வரும் 2025 புத்தாண்டில் மார்ச் 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடையவுள்ளார். அஷ்டம குருவால் பல்வேறு கஷ்டங்கள், துன்பங்களால் தவித்து வந்தவர்களுக்கு பல்வேறு நல்ல பலன்களை கொடுத்து ஏற்றம் அடையச் செய்யவுள்ளார் சனி பகவான்.

சனிப்பெயர்ச்சியில் நல்ல பலன்களைப் பெறப்போகும் ஐந்து ராசிகளில் துலாமும் ஒன்று. (Sani Peyarchi for Thulam). இந்த ஆண்டில் ராஜயோகத்தை கொடுக்கப் போகிறார் சனி பகவான். இனி உங்களை யாராலும் அடிச்சுக்கவே முடியாது. என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது, எதில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
துலாம் ராசிக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகிறார் சனி பகவான். கேந்திரத்துக்கும், திரிகோணத்துக்கும் அதிபதி. துலாம் ராசியில் தான் சனி பகவான் உச்சம் அடைகிறார். தொட்டவை அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். வெற்றி மேல் வெற்றி என்று அனைத்து நல்ல சுக பலன்களையும் பெற போகிறீர்கள். 100க்கு 200 மதிப்பெண் அனுகூலம் உண்டாகும்.
துலாம் ராசிக்கு 2025 ஆம் ஆண்டு ஜாக்பாட்தான். பெரிய அதிர்ஷ்டம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வீட்டில் அனைத்து விதமான நல்ல காரியங்களும் நடக்கும். அடுத்த இரண்டரை ஆண்டுகள் வேலை, கடன், தொழில் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் நீங்கும். கடன்கள் தீரும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
27 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சூப்பர் சந்தர்ப்பம் கிடைக்கப் போகிறது. இதுபோல ஒரு நல்ல காலம் இனி 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உங்களுக்கு கிடைக்கும். திரும்பிய பக்கமெல்லாம் வெற்றி கிட்டும். இதுவரை அஷ்டம குருவால் எந்த பக்கம் போனாலும் பிரச்னை, அடி வாங்கியிருப்பீர்கள். ஆறாம் வீட்டின் அதிபதி எட்டாம் வீட்டுக்கு வந்து உங்களை கடும் பாதிப்புக்குள்ளாக்கி இருப்பார்.
துலாம் ராசிக்காரர்களுக்கு நிறைய தோல்விகள், வம்பு, வழக்கு, எதிரிகள்,நோய், கடன் போன்ற தொல்லைகள் போன்ற பல்வேறு பிரச்னைகளை சந்தித்திருப்பீர்கள். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் படாத கஷ்டமே இருந்திருக்காது. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு ஒரு குட் நியூஸ் என்றால் அது இந்த சனிப்பெயர்ச்சி தான்.
மூன்றாம் பாவத்தின் முதலில் சனி பகவான் சஞ்சாரம் செய்வதால் இடம், வாகனம் விற்பதற்கான அமைப்பு வரும். விற்றாலும் கடனை அடைத்து அதிலும் சிறிய லாபம் பார்ப்பீர்கள். எதை விற்றாலும் அதைவிட ஆரம்பமான பொருளை வாங்குவீர்கள். குழந்தைகள் விஷயங்களில் நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
துலாம் ராசிக்காரர்களின் மாத்ரு வர்க்கம், வீடு, வாகனம், மனை, அலுவலகம் என அனைத்திலும் அனுகூலம் உண்டாம். மீடியா துறைகளில் இருப்பவர்களுக்கு உண்மையான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வெகுநாட்களுக்குப் பிறகு அமையும். இதனை நீங்கள் புத்திசாலித்தனமாக உபயோகித்துக் கொள்ள வேண்டும்.
புதனின் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும்போது வெளிநாட்டுத் தொடர்பு, அதன் மூலம் கிடைக்கும் வருமானம், உத்தியோகம், வேலைவாய்ப்பு, அங்கே சென்று வியாபாரம் செய்வது, கிரீன் கார்டு, புளூ கார்டு, முதலீட்டிற்கான லாபம், அங்கீகாரம் ஆகியன கிடைக்கப் போகிறது. அனைத்து விஷயங்களிலும் அவர்களுக்கு நல்ல பலன்களை சனி பகவான் கொடுக்கப் போகிறார்.
தவிர்க்க வேண்டிய விஷயங்கள்: ஆறாம் பாவத்தில் இருக்க கூடிய சனி பகவான் மூன்றாம் பார்வையாக எட்டாம் இடத்தை பார்க்கவுள்ளதால் நீங்கள் ஒரு விஷயத்தை தொடங்குவதற்கு முன்னர் அதுகுறித்து நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்று சின்ன சின்ன திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அகல கால்கள் வைக்காமல் பக்குவமாக அனைத்திலும் கால் வைக்க வேண்டும்.
குரு ஒன்பதாம் இடத்தில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் உங்களுக்கு ராஜயோகம் உண்டாகும். டபுள் ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும், பொருளாதாரம் சீராகும். நல்ல பண வரவு இருக்கும் என்பதால் அதனை புத்திசாலித்தனமாக பத்திரப்படுத்தியும் வைக்க வேண்டியது அவசியம்.
பெண்கள்: செவ்வாய் கிரகம் பத்தாம் வீட்டில் உள்ளது. இதனால், கணவன் சம்பந்தப்பட்ட மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் இருக்க வேண்டும். செவ்வாய் பத்தாம் வீட்டில் அமர்ந்து 4 ஆம் பார்வையாக ராசியைப் பார்ப்பதால் சில நேரங்களில் நம்மை மீறி கோபம் ஏற்படும். யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுத்திக் கொள்வது நன்மை பயக்கும்.
மாணவர்கள்: மாணவர்களுக்கு நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும். குறிப்பாக, வெளிநாட்டு பயணம், வெளிநாட்டில் கல்வி பயில்வதில் நல்ல அபிவிருத்தியை காணலாம். தொழில்நுட்பம் சம்பந்தமான துறைகள், மருத்துவ துறை, ஏஐ துறை போன்றவை விஸ்தாரமாக அனுகூலமாக உள்ளது.
பரிகாரங்கள்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சிக்கு எந்தவொரு பரிகாரமும் தேவையில்லை. ஆஞ்சநேயர் வழிபாடு, மகாவிஷ்ணு வழிபாடு நன்மையை கொடுக்கும். 100க்கு 1000 மதிப்பெண் நல்ல பலன்களை இந்த புத்தாண்டில் சனி பகவான் வழங்கவுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications