சனி பெயர்ச்சி பலன் 2023: சிம்ம ராசிக்காரர்களே.. கண்டச்சனி.. வீடு தேடி வம்பு வரும் கவனம்
சென்னை: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பகவான் அற்புதமான பலன்களை அள்ளிக்கொடுத்தாலும் சனிபகவான் கண்டச்சனியாக 7ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த கால கட்டத்தில் வீண் வம்புகள் வீடு தேடி வரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மீம்ஸ் ஆக பதிவிட்டுள்ளார் ஒரு ஜோதிடர்.
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். சூரியனுக்கும் சனிக்கும் ஏழாம் பொருத்தம். அப்படித்தான் இருக்கிறது கண்டச்சனி. கும்ப ராசியில் இருந்து சனியின் நேரடி பார்வை வேறு சிம்ம ராசியின் மீது விழுகிறது. இந்த கால கட்டத்தில் குரு பகவானின் பார்வையும் கிடைப்பதால் தப்பித்தீர்கள். அடுத்த ஆண்டு ஏப்ரல் குரு ராசி மாறுகிறார். குருவின் பார்வையும் விலகுகிறது.

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் பார்வை உங்க ராசியில் மீது விழுகிறது. இந்த கால கட்டத்தில் நீங்களாக பிரச்சினையை தேடி போகாமல் இருப்பது நல்லது. வாழ்க்கையில் முக்கிய முடிவுகள் எதையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். அதிகமாக கடன் வாங்கவோ, பணத்தை யாருக்கும் கடனாக கொடுக்கவோ வேண்டாம்.
கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் கடக ராசிக்காரர்கள் கண்டச்சனியை கடந்து வந்து இருப்பார்கள். அவர்கள் பட்ட பாட்டை உங்களுக்கு பாடமாக கற்றுக்கொடுக்க நினைப்பார்கள். அதை கேட்காமல் போனால் சிம்ம ராசிக்காரர்கள் இப்படித்தான் ரத்த காயம் படவேண்டியிருக்கும் என்று காமெடியாக மீம்ஸ் பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார் ஜோதிடர் ஒருவர்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி யோகமான கிரகம் இல்லை இருந்தாலும் சனி பெயர்ச்சியால் சிலருக்கு அலுவலகத்தில் தலைமை பதவியை தேடித்தருவார். கண்டச்சனி காலத்தில் செவ்வாய், ராகு, குரு பகவானின் நட்சத்திரங்களில் சனி பயணிக்கிறார். இந்த காலத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு சில சாதக பாதகங்கள் ஏற்படும். 2024,2025ஆம் ஆண்டுகளில் கண்டச்சனி காலத்தை கவனமாக கையாள வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
தொழில் கிரகம் சனி பகவானால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை மாற்றம் இடமாற்றம் ஏற்படும். நல்ல வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விசா கிடைக்கும். ஏழாம் வீட்டிற்கு உடையவன் ஏழில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் சச மகா யோகம் கிடைக்கும். திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும்.
கண்ட சனி கால கட்டத்தில் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால் மன அமைதி குறையும்.
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் ஆரோக்கியத்தில் கவனம், தேவை. தேவையில்லாத பேச்சுக்களை பேச வேண்டாம் விட்டுக்கொடுத்து போங்கள். இந்த கால கட்டத்தில் மவுன விரதம் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் வீண் வம்பு வழக்குகள் வீடு தேடி வரும். பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி வெற்றிலை மாலை சாற்றி வணங்க சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.
திருநள்ளாறு, குச்சானுர், சென்னை பொழிச்சலூரில் உள்ள அகத்தீஸ்வரர் திருக்கோவில், வாலாஜாபேட்டையில் உள்ள பாதாள சொர்ண சனீஸ்வரர் ஆகிய சனியின் திருத்தலங்களுக்குச் சென்று சனி சாந்தி ஹோமங்களை செய்யலாம். பைரவர் சனி பகவானின் குரு. சனியின் அன்பால் மகிழ்ந்தவர் பைரவர். பைரவரை வணங்க சனிதோஷம் நீங்கும். சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு வெள்ளைப் புதுத்துணியில் மிளகை முடிச்சிட்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம்.
மாற்றுத் திறனாளிகள் நடக்க இயலாதவர்கள், பார்வையற்றவர்களுக்கும் வயதானவர், ஆதரவற்றவர்களுக்கு உதவலாம். காலில்லாதவர்களுக்கு ஊன்றுகோல் தானம் தரலாம். முதியோருக்கு செருப்பு தானமாக தரலாம். சனிக்கு உகந்த எள்ளை தலைக்கு கீழே வைத்து உறங்கி, காலை எழுந்து அந்த எள்ளை புதிதாக வடித்த சாதத்துடன் கலந்து சனியின் வாகனமான காகத்திற்கு வைக்கலாம் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.












Click it and Unblock the Notifications