
சனி பெயர்ச்சி பலன் 2023: அஷ்டமத்து சனியால் கஷ்டங்களைத் தாண்டி சாதிக்கப்போகும் ராசிக்காரர் நீங்கதான்!
சென்னை: சனிபெயர்ச்சி 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழப்போகிறது. இந்த கிரகப் பெயர்ச்சியால் சிலருக்கு அஷ்டமத்து சனியாக அமர்ந்து ஆட்டிப்படைக்கப்போகிறார் சனிபகவான். சிலருக்கு விபரீத ராஜயோகமும் கிடைக்கப்போகிறது. எந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவான் கஷ்டங்களையும் படிப்பினைகளையும் கொடுத்து பின்னர் யோகத்தைத் தரப்போகிறார் என்று பார்க்கலாம்.
சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார்.
சனி பகவான் விதியை நிர்ணயம் செய்வார் மகரம், கும்பம் ஆட்சி வீடு, துலாம் உச்ச வீடு, மேஷம் நீச்ச வீடு. சனிபகவான் உங்கள் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள். கடக ராசிக்காரர்களுக்கு இது பொதுவான பலன்தான் உங்களின் தசாபுத்தியைப் பொறுத்து பலன்கள் சற்று மாறுபட வாய்ப்பு உள்ளது.
உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு- உச்சநீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு- செப்.6-ல் விசாரணை

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி என்ன செய்யப்போகிறது என்று பார்க்கலாம். குடும்ப வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்து வரவும். வேறு வேலை மாறும் முன் நன்கு ஆலோசித்து செய்யவும். வேலை செய்யும் இடத்தில் வீண் வாக்குவாதங்கள் செய்து யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.

நிதி நெருக்கடி
அதிக கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்வது ஆபத்தானது. அகலக்கால் வைக்க வேண்டாம். இரவு நேர பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வண்டி வாகனம் வாங்குவதற்கு இது சரியில்லாத நேரம். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சொல்படி கேட்டு நடப்பது நல்லது.

கடவுள் நம்பிக்கை
விதி கிரகம் சனி எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். விபரீத ராஜயோக காலம் என்றாலும் இறை நம்பிக்கை அவசியம் தேவைப்படும் காலமாகும். கவனமாக இருக்க வேண்டிய காலம். வீட்டிலும் வெளியிடங்களிலும் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. திருமணம் செய்வது பற்றி இப்போது யோசிக்கவே வேண்டாம்.

சுப காரிய வெற்றி
புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றி பெற பாடுபட வேண்டி இருக்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு வேலை மாற்றம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் புதிய தொழில்கள் தொடங்கலாம் என்றாலும் தசாபுத்தியை பார்த்து நன்கு ஆலோசிக்க வேண்டும்.

விபரீத ராஜயோகம்
எட்டில் சனி வருவது விபரீத ராஜயோக காலம். அஷ்டமாதியான சனி பகவான் சில பிரச்சினைகளைக் கொடுப்பார். சனிபகவான் பார்வை உங்கள் ராசிக்கு 2,5,10ஆம் வீடுகளின் மீது விழுகிறது. வேலை விசயத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். குழந்தை பாக்யத்தில் சற்று தடையேற்பட்டு பின் விருப்பம் பூர்த்தியாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் வேதனைகளும் ஏற்படும். கடன் பிரச்னை தீரும்.

உடல் ஆரோக்கியம்
பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும். சளித்தொந்தரவு, காய்ச்சல், பல் வலி, கண்ணில் குறைபாடுகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புது இடங்களில் சென்று சாப்பிடும் போது கவனம் தேவை. குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. படிப்பினைகளையும் கஷ்டங்களையும் கொடுக்கும் சனிபகவான் இறுதியில் விபரீத ராஜயோகத்தையும் தருவார் என்பதால் இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் பாதகத்தை விட சாதகமே அதிகம் காணப்படும்.