சனி பெயர்ச்சி பலன் 2023: எந்த ராசிக்காரர்களுக்கு சச யோகம்..வெளிநாட்டு வேலை யாருக்கு கிடைக்கும்

சனி பகவான் சில ராசிக்காரர்களுக்கு சச யோகத்தை கொடுத்து வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பையும் தேடி தரப்போகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிபகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். இது கால சக்கரத்திற்கு 11ஆம் வீடு. சனி கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் காலம் ரிஷபம், சிம்மம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சச மகாயோக காலமாக அமைகிறது. இந்த யோக காலத்தில் வெளிநாடு செல்லும் யோகம் தேடி வரப்போகிறது

சனி பகவான் கும்ப ராசியில் அமர்ந்துள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும். ஜென்ம சனி, கண்டச்சனி, அர்தாஷ்டம சனி, தொழில் சனி காலங்களில் சச மகா யோகம் தேடி வந்துள்ளது.
சிம்ம ராசிக்கு சனி ஆறு, ஏழாம் வீட்டு அதிபதி, விருச்சிக ராசிக்கு சனி பகவான் மூன்று மற்றும் நான்காம் வீட்டுக்கு அதிபதி, எனவே சிம்மம் கண்டச்சனி, விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி காலத்தில் பாதிப்புகளை விட அதிக நன்மையே நடைபெறும்.

ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் சனி பகவான், துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் அமர்ந்துள்ள நிலையில், அந்த வீடுகள் லக்னம் அல்லது ராசி ஆகியவற்றுக்கு 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களாக அமைந்திருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது. கோச்சார ரீதியாக சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்வதால் இந்த முறை கும்பம், ரிஷபம், சிம்மம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சச மகா யோகம் கிடைக்கப்போகிறது.

ரிஷபம்

ரிஷபம்

சனிபகவான் பத்தாம் வீட்டிற்கு உரிய அதிபதி பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது யோகமான காலம். கர்ம காரகன் கர்ம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வதால் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் கிடைக்கும். செய்யும் தொழில் வளர்ச்சியடையும். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். புது வேலை கிடைக்கும். பதவியில் புரமோசன் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரப்போகிறது.

சிம்மம்

சிம்மம்

இந்த சனி பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டச்சனியாக இருந்தாலும் யோகம்தான். அரசியல் அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு யோகம். தலைமைப்பதவி தேடி வரும் தொழில் அற்புதமாக இருக்கும். கடல் வழி தொழில் செய்பவர்களுக்கு நன்மை செய்வார். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விசா கிடைக்கும். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு கிடைக்கும். ஏழுக்கு உடையவன் ஏழில் இருப்பதால் திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும். தேவையில்லாத பேச்சுக்களை பேச வேண்டாம். கடன் வாங்கி வீடு வாங்குவீர்கள். வண்டி வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் இடத்தை மாற்றுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்கு நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அர்த்தாஷ்ட சனியாக அமர்கிறார். தனவரவு அதிகரிக்கும். ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார். சுகமான இடத்தில் சனி ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் சந்தோசங்கள் அதிகம் நடைபெறும் காலம் கல்வி திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணம் சேர்க்க முடியாது அதற்கு பதிலாக சொத்துக்கள் வாங்குவீர்கள். பத்தாவது பார்வையாக சனி பார்வை உங்க ராசி மீது விழுகிறது. சனி யோகம். வீடு, வண்டி வாகன வசதி கிடைக்கும். தீர்க்கப்படாத பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வழக்குகள் சாதகமாகும். தொழில் வியாபாரத்தில் பெரிய மாற்றம் வரும். வெளிநாடு பயணம் செய்யலாம். காரணம் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் சனி பார்வை விழுகிறது. தொழில் தொடங்காதவர்கள் கூட தொழில் தொடங்குவீர்கள். பயணங்களால் தன வரவும் கிடைக்கும். சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற சனியால் பலமடைவீர்கள். அதே நேரத்தில் செலவுகள் அதிகமாகும். சுப செலவுகளாக மாற்றுங்கள் நல்லதே நடக்கும்.

கும்பம்

கும்பம்

சனி பகவான் உங்கள் ராசியில் ஜென்ம சனியாக அமர்ந்துள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து சச மகா யோகத்தை தருகிறார். உள்ளூரில் வேலை செய்தாலும் வெளிநாடு செல்ல வேண்டுமே என்ற ஏக்கம் பலரது மனதில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. கொரோனா காலத்தில் வெளிநாட்டு வேலையை விட்டு விட்டு சொந்த ஊர் திரும்பியவர்கள் மீண்டும் விமானம் ஏறப்போகிறீர்கள். கை நிறைய சம்பளத்தில் மீண்டும் நல்ல வேலை கிடைக்கப்போகிறது. உறவினர்களிடம் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நட்பும் நேசமும் உருவாகும். வீட்டில் விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். புதிய தொழில் வியாபாரத்தில் அதிக அளவில் முதலீடுகளை செய்து அவஸ்தைப்பட வேண்டாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+