சனி பெயர்ச்சி 2022 - ஐந்து ராசிக்காரர்களுக்கு அள்ளித்தரப்போகும் சனிபகவான் - தலையெழுத்தே மாறலாம்
கும்ப ராசியில் அமர்ந்துள்ள சனிபகவானால் மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.
சென்னை: சனிபகவான் நீதிமான், கர்மகாரகன், நம்முடைய ஜீவன காரகன், ஆயுள்காரகன். பொதுவாகவே சனிபகவான் 12 ராசிகளையும் கடக்க 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். இப்போது சனிபகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களான மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசிகளின் மீது விழுகிறது. சனிபகவான் சஞ்சாரம் மற்றும் பார்வையால் சிலருக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. யார் அந்த அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள் என்று பார்க்கலாம்.
சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். இந்த சனியின் சஞ்சாரம் பார்வையால் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியையும் பெறப்போகின்றனர்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் நிறைய லாபங்கள் கிடைக்கும். எந்த தொழில் செய்தாலும் அதில் லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்துவீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும்.வெளிநாடு செல்லும் யோகம் வரும். வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய கவுரவம் அந்தஸ்து கிடைக்கும். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும்.

ரிஷபம்
சனி பகவான் ரிஷப ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புது வேலை கிடைக்கும். திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தசாபுத்தியும் அற்புதமாக சேர்ந்தால் கோடீஸ்வரயோகம் தேடி வரும் காலம். நீங்கள் செய்யும் வேலையில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெரிய வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்கும். அதிக பணவரவும் லாபமும் கிடைக்கும். பாவ கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தால் முழு பலம் பெறும். அதுவும் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். தர்ம கர்மாதி யோகம் செயல்படும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். இனி வரும் காலம் அற்புதமான காலமாக அமையப்போகிறது. குருவின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் அனைத்திலும் ஏற்றம் தரும் காலமாக அமையப்போகிறது.

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு கடந்த சில ஆண்டு காலமாக ஆட்டி வைத்த அஷ்டமத்து சனி காலம் முடிந்து பாக்ய சனி காலம் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பொருளாதார தடைகள் நீங்கும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். வெளிநாடு பயணம் செல்லும் யோகம் வரும். சகோதரர்களிடம் பேசும் போது கவனம் தேவை. வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப் போகிறார்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் பொன்னான காலம். வெற்றிகள் தேடி வரும். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்கலாம் வியாபாரம் முதலீட்டில் லாபம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இது செழிப்பான விபரீத ராஜயோக காலமாகும். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். சனி தனது சொந்த வீட்டில் வந்து ஆட்சி பெற்று அமர்வதால் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும். முழு அதிகாரத்தையும் சனி தருவார். நோய்கள் நீங்கும் வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் விரட்டியடிப்பீர்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். இனி யோகமான கால கட்டமாக அமைந்துள்ளது. குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை பட்ட கஷ்டத்திற்கு விடிவுகாலம் தேடி வரப்போகிறது. பொருளாதார சிக்கல்கள் நீங்கும். நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். திருமண விசயங்கள் கைகூடி வரும். புதிய தொழில் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் வரும். ஏழரை சனி காலம் முடிவுக்கு வருகிறது. சனிபகவானால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். சுப செய்திகள் தேடி வரும். இனி ராஜ யோகம் தேடி வரப்போகிறது புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications