விஜயகாந்துக்கு ஏழரை சனி முடிந்தது... இனி வெற்றிகாந்த் #சனிப்பெயர்ச்சி
மூன்றாம் இடத்திற்கு வரும் சனிபகவானால் விஜயகாந்திற்கு புதிய தெம்பு உருவாகும்.
Recommended Video

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்திக்கு இதுநாள் வரை ஆட்டிப்படைத்து வந்த ஏழரைசனி முடிவடைந்து விட்டதால் இனி முயற்சி யாவிலும் வெற்றியே என்கின்றனர் ஜோதிடர்கள்.
விஜயகாந்த் துலாம் ராசி சித்திரை நட்சத்திரக்காரர். கடந்த ஏழரை ஆண்டுகாலம் சனிபகவான் ஆட்டிப்படைத்து வந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் கிடைத்த வெற்றியை அனுபவிக்க முடியாமல் போனதற்குக் காரணம் ஏழரை சனிபகவான்தான். அதேபோல 2016ஆம் ஆண்டு நிகழ்ந்த படு தோல்விக்கு காரணமும் பாத சனியாக நீடித்த சனிபகவானால்தான்.
இந்த சனிப்பெயர்ச்சி விஜயகாந்திற்கு உற்சாகம் தரக்கூடிய சனிப்பெயர்ச்சியாக அமைந்துள்ளது. மூன்றாம் இடத்திற்கு வரும் சனி பகவானால், ஆரோக்கியம் சீராகும். புதிய தெம்பு உருவாகும்.

சனிப்பெயர்ச்சியால் நன்மை
சனி பெயர்ச்சி மாபெரும் அதிர்ஷ்டம் கிடைக்கும். ராசிக்கு 3வது இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். துலாம் ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள். இனி எல்லாம் இன்ப மயம்தான்.

வெற்றிகள் கிடைக்கும்
பகைவர்களாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். சனிபகவான் தனது 3வது பார்வையாக உங்கள் ராசிக்கு 5வது இடத்தை பார்க்கிறார். சனியின் பார்வை பஞ்ச ஸ்தானத்தில் விழுகிறது. இதன் மூலம் வெற்றிகள் அதிகரிக்கும்.

உறக்கம் கெடும்
9வது இடத்தை பார்க்கிறார். பித்ருகளின் ஆசி கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். சனிபகவான் உங்களின் ராசிக்கு 12 இடத்தை பத்தாவது பார்வையாக பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.

மனைவியின் ஆதரவு
துலாம் ராசியில் ஜென்ம குரு அமாந்துள்ளார். புதன் திசையில், செவ்வாய் புத்தி நடைபெறுகிறது. ஜென்ம குருவாக இருந்தாலும் குருவின் ஏழாமிட பார்வையினால் மனைவியின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும்.

சுபிட்சம் அதிகரிக்கும்
இதுநாள்வரை உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு உடல் நலமடையும். சுறுசுறுப்பாக செயல்பட்டால் வெற்றிக்கனியை பறிக்கலாம். சுபிட்சங்கள் கை கூட உள்ளதால் துணிவை விட பணிவு அவசியம்.

கூட்டணிக்கு வெற்றி
ஏழரை சனி முடிந்து விட்டதால் இனி புதிய முயற்சிகளால் வெற்றி கிடைக்கும். புதன் திசை நடக்கிறது. புதன் கூட்டு முயற்சிகளுக்கு உரிய கிரகம். மேலும், கூட்டணி சேர்ந்துதான் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.

செல்வாக்கு அதிகரிக்க பரிகாரம்
வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருந்த சனி பகவானால் வார்த்தைகளில் தடுமாற்றம் ஏற்பட்டது. இனி கடந்த கால சிக்கல்கள் நீங்கும். இனியும் வாக்கில் கவனம் தேவை இல்லையெனில் உங்கள் செல்வாக்கு குறைந்து விடும். ஸ்ரீவைகுண்டம் கைலாச நாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஈசன் சனிபகவானின் அம்சமாக திகழ்கிறார். அவரை வணங்கி புதிய முயற்சியை தொடங்கலாம். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்குங்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications