உலகம் முழுவதும் தீவிரமடையும் கொரோனா தாக்குதல் - சார்வரி வருட பஞ்சாங்கம் சொல்வதென்ன
விகாரி தமிழ் வருட பஞ்சாங்கம் கணித்தது பல பலித்தது. நோய்கள் தாக்கியது. கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி வருகிறது. அதே போல பிறக்கப் போகும் தமிழ் புத்தாண்டான சார்வரி ஆண்டிலும் புதிய நோய் தாக்கும் என பஞ்சாங
சென்னை: இந்த சார்வரி புத்தாண்டில் புதிய வைரஸ் நோயினால் மக்களுடம் கால்நடைகளும் பாதிக்கப்படுவார்கள். குழந்தைளுக்கு கொசுவினால் நோய் உண்டாகும் என கணித்துள்ளது. புத்தாண்டு பிறக்கும் போது வாக்கிய பஞ்சாங்கப்படி மீனம் ராசியில் புதன் நீசம், மேஷத்தில் சூரியன் உச்சம், ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி, மிதுனத்தில் ராகு, தனுசு ராசியில் கேது, சனி, சந்திரன், மகரத்தில் செவ்வாய், குரு என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. துலாம் லக்னத்தில் தனுசு ராசியில் ஆண்டு பிறக்கிறது. ஆறாம் இடம் நோய் ஸ்தானம். ஆறாம் வீட்டில் புதன் நீசம் பெறுகிறார். ஆறுக்குடைய குரு நீசபங்கம் பெறுகிறார். எட்டாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்க நீச பங்கம் பெற்ற குருவின் பார்வை பெறுவதால் மக்களின் ஆயுள் விருத்தியாகும். பல நோய்களுக்கு புதிய மருந்துகள் கிடைக்கும்.
சென்னை பெரு வெள்ளம், கஜா புயல், ஒக்கி புயல் பற்றி பஞ்சாங்கம் முன்பே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணியை வைத்து நோய்களையும், மழை வெள்ளத்தையும் அரசியல் நிகழ்வுகளையும் பஞ்சாங்கம் மூலம் ஜோதிடர்கள் கணிக்கின்றனர். விகாரி தமிழ் வருட பஞ்சாங்கம் கணித்தது பல பலித்தது. நோய்கள் தாக்கியது. கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி வருகிறது. அதே போல பிறக்கப் போகும் தமிழ் புத்தாண்டான சார்வரி ஆண்டிலும் புதிய நோய் தாக்கும் என பஞ்சாங்கம் எச்சரித்துள்ளது.
சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள் - மாரியில்லை
பூமி விளைவில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமின்றி சாவார் இயம்பு"
அதாவது சார்வரி ஆண்டில் பதினெட்டு வகைச் சாதி மக்களும் வீரமிழந்து தீரம் அற்றுப்போய் நோயால் வெதும்பித் திரிவார்கள். மழையில்லை, நன்செய்ப் பயிர்கள் விளைச்சல் அறவே இருக்காது. பூமியில் நவதானியங்களும் விளைச்சல் பாதிக்கும். தானிய விளைச்சல் இன்றி மக்கள் பட்டினியால் மடிவர். மண்ணின் மைந்தர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என வெண்பா சொல்கிறது.

சனி குரு கூட்டணி
விகாரி ஆண்டில் திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நிகழ்ந்திருந்தாலும் வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நிகழவில்லை எனவே இந்த வைரஸ் பாதிப்பிற்கு குரு சனி கூட்டணி ஏற்பட்டு பிரம்மஹத்தி தோஷம்தான் காரணம் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கப் போகும் சார்வரி புத்தாண்டில் குரு பகவான் பெயர்ச்சியாகி மகரம் ராசியில் நீசமடையப்போகிறார். மகரம் ராசியில் அமரப்போகும் குருவினால் இந்த பூமிக்கே தோஷம் என்று கணித்துள்ளது ஆற்காடு வாக்கிய பஞ்சாங்கம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு
சீனாவில் எலி புத்தாண்டில் கொரோனா வைரஸ் பல கொடுமையான மரணங்களை ஏற்படுத்தி மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு பற்றி விகாரி தமிழ் பஞ்சாங்கம் முன்பே கணித்துள்ளது. மனிதர்கள், கால்நடைகள், விலங்குகள் பல புதிய நோய்களால் பாதிப்பிற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்துள்ளது பஞ்சாங்கம்.

உலக ஜாதகம் சொல்வதென்ன
புத்தாண்டு பிறக்கும் போது வாக்கிய பஞ்சாங்கப்படி மீனம் ராசியில் புதன் நீசம், மேஷத்தில் சூரியன் உச்சம், ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி, மிதுனத்தில் ராகு, தனுசு ராசியில் கேது, சனி, சந்திரன், மகரத்தில் செவ்வாய், குரு என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. இந்த ஆண்டில் ராஜா புதன், மந்திரி சந்திரன், அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதி சந்திரன், தான்யாதிபதி புதன், ஸஸ்யாதிபதி, நீரஸாதிபதி குரு என நவநாயகர்கள் வருகின்றனர். இந்த ஆண்டு அதிக அளவில் காற்றடிக்கும் என்று எச்சரிக்கிறது பஞ்சாங்கம். தமிழ் புத்தாண்டு பிறக்கும் போது எட்டாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். இதனால் புதிய வைரஸ் நோய் உற்பத்தியாகும், குழந்தைளுக்கு கொசுவினால் நோய் உண்டாகும் என சார்வரி வருட தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது.

சூரியனால் அதிசயம்
துலாம் லக்னம் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் 4ஆம் பாதத்தில் ஆண்டு பிறக்கிறது லாபாதிபதி சூரியன் ஏழாம் வீட்டில் உச்சம் பெற்றிருக்கிறார். இந்த ஆண்டு சூரியனுக்கு எந்த ஆதிபத்தியமும் இல்லை. செவ்வாய் இந்த ஆண்டு முழுவதும் உதயத்திலேயே இருக்கிறார். இந்த ஆண்டு கார்த்திகை 16ஆம் தேதி முதல் மார்கழி 2ஆம் தேதிக்குள் உலக அதிசயம் ஏற்படும் என பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. ஓசோனில் விரிசல் அதிகமாகி வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் பஞ்சாங்கம் எச்சரித்துள்ளது.

கொசுக்களால் புதிய நோய்கள்
இந்த ஆண்டு சந்திரன் அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதியாக இருக்கிறார். ஆண்டு பிறக்கும் போது கேது உடன் இணைந்து கிரகண தோஷம் பெற்றிருக்கிறார். கோச்சாரப்படி குரு அதிசாரம் பெற்று 2ஆம் வீட்டில் சூரிய சாரம் பெற்று உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் புதிய நோய்கள் கொசுக்களால் பரவும் என கணிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை குறையும், சர்க்கரை, பேரீச்சம்பழம், முந்திரி, மதுபான வகைகள் விலை உயரும் என கணித்துள்ளது.

புதிய மருந்து கண்டுபிடிக்கப்படும்
ஆறாம் இடம் நோய் ஸ்தானம். சார்வரி தமிழ் புத்தாண்டு துலாம் லக்னத்தில் பிறக்கிறது. ஆறாம் வீடு மீனம் ராசியில் புதன் நீச பங்கம் பெற்றிருக்கிறார். ஆறாம் வீட்டு அதிபதி குரு நான்காம் வீடான மகரம் ராசியில் நீச பங்கம் பெற்று உச்சம் பெற்ற செவ்வாயுடன் சஞ்சரிக்கிறார். புரோட்டின் குறைபாட்டினால் புதிய நோய்களும், தண்ணீரின் மூலம் புதுவித நோய்களும் பரவும். எட்டாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்க நீச பங்கம் பெற்ற குருவின் பார்வை பெறுவதால் மக்களின் ஆயுள் விருத்தியாகும். பல நோய்களுக்கு புதிய மருந்துகள் கிடைக்கும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது. எப்படியோ சார்வரி புத்தாண்டில் கொரோனா தாக்குதலின் தீவிரம் குறைந்தால் சரிதான்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications